Tuesday, 16 July 2013

பாமக வெள்ளிவிழா ஆண்டு

இந்நாள்,,,,வெள்ளிவிழா காணும் நன்னாள்; [துவக்கம்: 16/07/1989]
*********************************************

வன்னியர்கள் மற்றும் பெரும்பான்மை சமூகங்களுக்காகவே
இதுவரை உண்டான அத்துணை கெட்டப் பெயர்களையும்
தன்னகத்தே அடக்கிக் கொண்டு, சமூகம் காக்கும் சத்ரியன் போக்குடன்,,, எங்கும் சமரசம் செய்து கொள்ளாமல் வென்று
காட்டிய பெரும்பான்மை சமூகங்களுக்கான முதன்மை கட்சி
பாமகவின் முதல் வெள்ளிவிழா ஆண்டு இன்று துவங்கியது.

இந்த இருபத்தி ஐந்து வருட வரலாறுகளை ஒற்றை
வரியில் சொல்ல வேண்டுமெனில்.,
"பெரும்பான்மை தமிழர்களின் ஒற்றைக் குரல்"

ஓட்டுகளுக்காய் ஒதுங்கி நின்று வெறுமனே மக்களை
விமர்சிக்காமல் அனைத்து சமூக மக்களுக்காய் பேசும்
சுரணையுள்ள ஓர் ஒற்றை கட்சி "பாமக"

இந்த பெரும்பான்மை மக்களின் முதன்மை கட்சியின்
"தமிழன் ஆளவேண்டும்" என்ற ஒற்றை சூத்திரம்,,பலபல
திராவிட ட்ராயர்களை பீதி கொள்ள செய்துள்ளது,, அதன்
பொருட்டே தேசிய தடுப்பு காவல் சட்டம், இன்னம்பிற
விமர்சனங்கள்,,,மாநில அரசின் மீதே வழக்கு போட்டு
டாஸ்மாக் கடைகளை மூடியவர்களுக்கு இதெல்லாம்
ஒரு பொருட்டே அல்ல,,, இன்னும் எங்கள்
வழக்கறிஞர்களின் எத்துனை வாகனங்களை நீங்கள்
உடைத்தாலும் சட்டத்தால் எதிர்கொள்வோம்,,,

வன்னிய மக்கள் மற்றும் அனைத்து சமூக மக்களுக்கான
அனைத்து வித ஆதரவையும் தோழமைகளையும் திறம்பட
பேணிக்காப்போம் என இந்த நல்லநாளில் சபதமேற்போம்
சமூகம் காக்கும் போர்க்குடி மக்களே,;;

அரசகுலன் ‪#‎வன்னித்தமிழன்‬

No comments:

Post a Comment