Wednesday, 9 October 2013

காடவராயர் -- என்ற வன்னிய அரச குலத்தினர் #காடவர் #காடுவெட்டி

காடவராயர் -- என்ற வன்னிய அரச குலத்தினர்
****************************************************
                                        [ http://ekuruvi.com/இசைக்-குதிரைகள்/ ]

காடவராயர் ----  காடவர் + அரையர் === காடவ அரசர்கள் என பொருள்படும் காடவரயர்கள் காடவர் என்ற அரசகுலத்தை சேர்ந்தவர்கள் ...
இவர்கள் வன்னியர் குலத்தினர் .

காடவர்கள் எனப்படுவோர் கிபி 13, 14-ம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவின் பல்லவர்களோடு இணைந்து படையாட்சிகள் பகுதிகளான தென்னாற்காடு கடலூர் மற்றும் வட ஆற்காட்டின் சில பகுதிகளை ஆண்ட வன்னிய அரச
குலத்தவர்கள் ஆவர்.

இவர்கள் முதலாம் கோப்பெருஞ்சிம்மன், இரண்டாம் கோப்பெருஞ்சிம்மன் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் காடவர்களின் வல்லமை தழைத்தோங்கி விளங்கியது. இவர்கள், மூன்றாம் இராசராசன், மூன்றாம் இராசேந்திரன் ஆகியோரின் தலைமையில் பெருமை மங்கத் துவங்கியிருந்த சோழப் பேரரசையே எதிர்க்கும் வல்லமைப் பெற்றிருந்தார்கள். வட ஆற்காட்டிலும், தென் ஆற்காட்டிலும், செங்கற்பட்டிலும் இவ்விரு மன்னர்கள் பல கல்வெட்டுக்களை விட்டுச் சென்றுள்ளனர்.

தோற்றம்:
*************

மகேந்திரவர்மன் I, நரசிம்மவர்மன் I, நரசிம்மவர்மன் II ஆகியோரின் பட்டப் பெயர்களுள் ஒன்றாகக் காடவன் என்பதுக் காணப்படுகிறது. எழுத்தாசிரியர்கள், பல்லவர்களைக் காடவர், தொண்டையார், காடுவெட்டி என்ற பெயர்களால் குறிப்பிடுவதைப் பல்வேறு நூல்களில் காணலாம். காடவர்களுக்கும் பல்லவர்களுக்கும் உள்ள உறவு குறித்து காஞ்சிபுரத்தில் கிடைத்த கல்வெட்டுகளில் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. சிம்மவிஷ்ணுவின் நந்திவர்மன் II  "காடவர்களின் குலப்பெருமையை உயர்த்தப் பிறந்தவன்" என்றுப் போற்றப்பட்டான். சகோதரன் பீமவர்மன்
வழி வந்த மன்னர்களே இந்தக் காடவர்கள்.

காடவராயர் ----  காடவர் + அரையர் === காடவ அரசர்கள் என பொருள்படும் காடவரயர்கள் காடவர் என்ற அரசகுலத்தை சேர்ந்தவர்கள் ...

இவர்கள் வன்னியர்  குலத்தினர், வன்னியர் குலத்தில் இன்றும் காடவராயர் வம்சத்தை சேர்ந்தவர்கள் வாழ்ந்துவருகிறார்கள் இவர்கள் பல்லவர்களின் கிளை குலத்தினர்.இவர்களை போன்று தொண்டைமான் அரசர்களும் பல்லவர் குலத்தினர்... இந்த பல்லவர்களுக்கு பல பெயர்கள் உண்டு...,அவற்றில்
பல்லவதரையர்
பல்லவநாடர்
பல்லவர்.
காடவராயர்
காடுவெட்டி,
காடுவெட்டியார்.
தொண்டையர்
தொண்டைப்பிரியர்,
தொண்டாப்பிரியர்
தொண்டைமான்,
தொண்டைமார்
தொண்டைமான் கிளையார்
தொண்டையர்
பல்லவராயர் 

போன்றவை இன்றும் வன்னியர் குலத்தில் கிளை குடும்பங்களுடைய பெயர்களாக பட்ட பெயர்களாக உள்ளன.அதற்கான ஆதாரம்  சென்னை , காஞ்சிபுரம், வடஆற்காடு, வேலூர்,திருவண்ணாமலை போன்ற பல பல்லவ மன்னர்களின் பகுதிகளில் வாழும் வன்னிய பெருங்குடி மக்களும், அங்குள்ள கோவில்களின் கல்வெட்டுகளுமே... பல்லவ குலத்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் வன்னியர்கள் என்பதை உலகம் நன்கறியும்..

சோழர்களின் கீழ் குறுநில மன்னர்களாக இருந்த காடவர்களின் ஆதிக்கம் குலோத்துங்க சோழன் III காலத்தில் அதிகரிக்கத் தொடங்கியது. காடவக் குறுநில மன்னர்கள் குறித்த வரலாற்றுச் செய்திகள் அதிகம் கிடைக்கவில்லை. முதலாம் கோப்பெருஞ்சிம்மன், 1186-ம் ஆண்டுக் காலத்தில் கூடலூரை ஆண்ட வீரசேகரனின் வழிவந்த மணவாளப்பெருமாளின் மகனாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.
சோழநாட்டுப் பெண்ணை மணம் புரிந்திருந்த முதலாம் கோப்பெருஞ்சிம்மன், மூன்றாம் குலோத்துங்கனின் அவையில் அதிகாரியாக இருந்தான். 1216-ல் பாண்டியர்கள் சோழ நாட்டின் மீது படையெடுத்தபோது முதலாம் கோப்பெருஞ்சிம்மன் சேந்தமங்கலத்தில் ஒளிந்துக்கொண்டு தன் வலிமையைப் பெருக்கிக் கொண்டான். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டுக் காடவர்கள் தங்கள் ஆதிக்கத்தை சிறிது சிறிதாக அதிகரித்து வந்தனர். இறுதியில், இலங்கை மன்னன் இரண்டாம் பராக்கிரம பாகூவின் உதவியுடன் மூன்றாம் இராசராச சோழனைத் தோற்கடித்துச் சிறைப்படுத்தினான். முதலாம் கோப்பெருஞ்சிம்மனின் மகன் இரண்டாம் கோப்பெருஞ்சிம்மனின் ஆட்சிக் காலத்தில் காடவர்களின் அரசு மேலும் விரிவடைந்தது. கடைசி சோழ மன்னனான மூன்றாம் இராசேந்திரன் இரண்டாம் கோப்பெருஞ்சிம்மனின் உதவியுடந்தான் அறியணை ஏறினான். அவர்களுடைய உறவு பகையும் நட்பும் கலந்த ஓர் உறவாக விளங்கியது.

சமயப் பணி
**************
காடவ மன்னர்கள் கோயில்களுக்குக் கொடைகளை வாரி வழங்கினர். பல புதியக் கோயில்கள், சிற்றூர்கள், சத்திரங்கள், சாலைகள் ஆகியவற்றைத் தோற்றுவித்தனர். ஆளப்பிறந்தீசுவரம் உடையார், அழகியப் பல்லவந்தோப்பு, அழகிய பல்லவன் சந்தி, கோப்பெருஞ்சிங்கன் தெரு போன்ற இடங்கள் அவற்றுக்குச் சான்றாக இன்றும் விளங்குகின்றன. சேந்தமங்கலத்தில் காணப்படும் கோட்டைச் சிதிலங்கள் சிறிதுக் காலமேத் தழைத்தோங்கியக் காடவர்களின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றன.

முதலாம் கோப்பெருஞ்சிங்கன் மூன்றாம் இராஜராஜசோழன் காலத்தில் வாழ்ந்த ஒரு குறுநில மன்னன். காடவர் குலத்தைச் சேர்ந்தவன். இவன் கிட்டத்தட்ட கிபி 1216 முதல் 1242 வரை அரசாண்டவன். ஹொய்சாள தண்டநாதர்களின் படையெடுப்பை பற்றி விவரமாகத் தெரிவிக்கும் திருவேந்திபுரம் கல்வெட்டு இராஜராஜனைத் தாக்கி சிறைப்பிடித்து பிறகு விடுதலை செய்த காடவச் சிற்றரசன், புகழ் பெற்ற கோப்பெருஞ்சிங்கனே என்று தெரிவிக்கிறது. (சமஸ்கிருதத்தில் இவன் பெயர் மஹராஸ சிம்ம எனப்படும்.) இந்த காலப்பகுதியின் வரலாற்றில் கோப்பெருஞ்சிங்கனுக்கு நிறைந்த இடம் உண்டு, தமிழ்நாட்டிலும் கன்னநாட்டிலும் கிடைக்கும் ஏனைய கல்வெட்டுக்களும் இந்தச் செய்திகளை உறுதிபடுத்துகின்றன.

இராஜராஜனின் 14-ம் ஆட்சி ஆண்டில் (கி.பி 1230) விருத்தாசலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டிலிருந்து காடவச் சிற்றரசர்கள் இன்னும் சோழரின் மேலாதிக்கத்தை ஏற்று வந்தனர் என்றும் இவர்களுள் கோப்பெருஞ்சிங்கன், தக்க வயது அடைந்ததோடு, முக்கியமானவனாக விளங்கினான் என்றும் தெரிவிக்கிறது. கோப்பெருஞ்சிங்கன் சோழ சக்கரவர்த்தியை சேந்தமங்கலத்தில் சிறைப்படுத்தியதோடு விஷ்ணு கோயில்கள் உட்பட எல்லாக் கோயில்களையும் கொள்ளையடிக்கும் படியும் ஏற்பாடு செய்தான். ஹொய்சாளர்கள் வைணவத்தில் அழுத்தமான தீவிரமான பற்றுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மன்னன் நரசிம்மன் தன் தலைநகரான துவார சமுத்திரத்திலிருந்து புறப்பட்டதாயும் சோழர்களை மீண்டும் நிலைநாட்டியவன் என்று பெயர் தனக்கு ஏற்படும் வரை போர் முழக்கம் செய்ததாயும் ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவனுடன் ஏற்பட்ட போரினால் கோப்பெருஞ்சிங்கன் சோழ சக்கரவர்த்தியை விடுதலை செய்து அவனுடைய சிம்மாதனத்தில் அமரச் செய்வதாக நரசிம்மனின் தளபதிகளுக்கு அறிவித்தான்.

தஞ்சை மாவட்டம் நீடுரைச் சுற்றிய பகுதி கோப்பெருஞ்சிங்கன் என்ற அழகிய சீயனால் ஆளப்பெற்றதாய் குறிப்பிடுகிறது. கோப்பெருஞ்சிங்கனின் வீரம் வெவ்வேறுவகையான ஜந்து செய்யுட்களில் பாராட்டப்படுகிறது. கோப்பெருஞ்சிங்கனுக்கு அவனி நாராயண நிருபதுங்கன், தொண்டைக்கும் மல்லைக்கும் மன்னன் என்றெல்லாம் பட்டங்கள் இருந்திருக்கிறது. கோப்பெருஞ்சிங்கனும் ஹொய்சாளர்களும் தொடர்ந்து போரிட்டுக்கொண்டிருந்தனர் என்பது கி.பி. 1236ல் துன்முகி ஆண்டில் காடவனுக்கு விரோதமான ஒரு படையெடுப்பில் வீர சோமேசுவரன் மங்கலத்தில் தங்கினான் என்று அறியப்படும் ஒரு குறிப்பால் தெளிவாகத் தெரிகிறது.

உசாத்துணை
http://ta.wikipedia.org/wiki/காடவர்
http://www.whatisindia.com/inscriptions/
Nilakanta Sastri, K.A. (1955). A History of South India, OUP, New Delhi (Reprinted 2002).

No comments:

Post a Comment