Showing posts with label வன்னிய குறுநில மன்னர்கள்;. Show all posts
Showing posts with label வன்னிய குறுநில மன்னர்கள்;. Show all posts

Wednesday, 9 October 2013

கோப்பெருஞ்சிங்கன் - வரலாற்றில் மறைக்கப்பட்ட வன்னிய மன்னன்!!

தென் ஆர்க்காட்டு சிங்கம் கோப்பெருஞ்சிங்கன் - வரலாற்றில்
மறைக்கப்பட்ட வன்னியர் குல பேரரசன்




கோப்பெருஞ்சிங்கன் (கி.பி. 1229-1278) தற்போதைய ஆரணியின் அருகிலுள்ள படவேடு என்கிற ஊர் அந்த நாட்களில் படைவீடு என்று அழைக்கப்பட்டது அங்கே நிலை கொண்டிருந்தது கோப்பெருஞ்சிங்கனின் படை. கருத்த மேனியுடன் ஆஜானுபகவான தோற்றத்துடன் இருந்த அரசன் கோப்பெருஞ்சிங்கன் தன் படை நிலைகொண்டு இருந்த இடத்திற்கு சென்று அணிவகுத்து நிற்கும் தன் படையை பார்வையிடுகின்றான்.தீர்க்கமான அவன் கண்கள் செக்கச்செவேல் என சிவந்திருந்தது, உள்ளம் எங்கும் சுதந்திர வேட்கை சுடர் விட்டெறிந்து கொண்டிருந்தது.

வெற்றி வேல், வீர வேல் என்ற முழக்கங்களுக்கிடையில் படையினை பார்வையிடுகின்றான், படையின் ஒவ்வொரு வீரனும் சுதந்திர தாகத்துடன் தன் நாட்டு சுதந்திரத்திற்காக எதையும் எதிர்கொள்ள தயாராக கட்டுக்கோப்பாக நின்ற படையை பார்த்த நிமிடத்தில் சுதந்திரத்திற்காக தாங்கள் மோதப்போகும் சோழப்படையின் எண்ணிக்கையை விட சிறியதாக இருந்தாலும் நிச்சயம் சுதந்திர தாகம் தீரும் என்ற நம்பிக்கையில் தன் கூடாரத்திற்கு சென்றான். அன்றிரவு முழுதும் தூங்காமல் ஏதேதோ சிந்தனைகள், தன் தளபதிகளுடன் தொடர்ந்து ஆலோசனைகள், ச்ச்தம் மூத்தோர்கள் மகேந்திரவர்மனும் நரசிம்ம வர்மனும் கட்டிக் காத்த பல்லவ பேரரசு சோழர்களின் அரசியல் சதுரங்க விளையாட்டால் சிதைக்கப்பட்டு சிதறிய கதைகள் கேட்டு வளர்ந்த போதே சோழப்பேரரசை வென்று அதன் அடிமையாக இருக்கும் இந்த அரசை மீட்டு மீண்டும் பல்லவ பேரரசை நிறுவ வேண்டுமென உறுதி பூண்டான், சத்திரியனாக மட்டும் இருந்தால் போதாது, இதற்கு சாணக்கியத் தனமும் வேண்டுமென்ற கொள்கையில் உறுதியாக இருந்தான். தான் எழுதப்போகும் சோழப்பேரரசின் முடிவுரையை நாளைய வரலாறு பேசும், பல்லவ குலத்தின் மாவீரனொருவன் சோழப்பேரரசை முடித்து மீண்டும் பல்லவ பேரரசை நிலைநிறுத்தியதை வரலாறு பாராட்டும் என்று எல்லோரிடமும் கூறிக்கொண்டிருந்தான்.

 சோழப்பேரரசுக்கும் சேந்தமங்கலப் போரில் முடிவுரை எழுதினான், ஆனால் அன்று கோப்பெருஞ்சிங்கன் எண்ணியிருக்க மாட்டான் சோழ மாயை இருபதாம் நூற்றாண்டிலும் கூட வரலாற்று ஆசிரியர்கள் கண்களை மறைத்திருக்குமென்று. கோப்பெருஞ்சிங்கன் கி.பி. 1229 முதல் 1278 வரை தென்னாற்காடு மாவட்டம் சேந்தமங்கலத்திலிருந்து அரசாண்டான்(ர்)(வரலாற்று நூல்களில் அவன்,இவன் என்று பேசினாலும் நாம் இனி அவர் என்றே அழைப்போம்) சில வரலாற்று ஆசிரியர்கள் ஆரணி அருகிலிருக்கும் படைவீடு(படவேடு) தான் இவரின் தலை நகரம் என்கிறார்கள். வெகு சில ஆண்டுகள் மட்டுமே தமிழகத்தை ஆண்ட பல அரசர்களின் பெயர்கள் தெரிந்த அளவிற்கு கூட கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுகாலம் அரசாண்ட இவரின் பெயர் வெளியில் தெரியவில்லை. ஒன்பதாம் நூற்றாண்டில் பல்லவ ஆட்சி சோழர்களின் அரசியல் சித்து விளையாட்டால் சிதறுண்டபிறகு பல்லவ குலத் தோன்றல்கள் அரையன்,காடுவெட்டி, காடவர் என்ற பெயர்கள் கொண்டு சிற்றரசர்களாக சோழ அரசிற்கு கப்பம் கட்டி அரசாண்டனர், அப்படி வந்தவர் தான் கோப்பெருஞ்சிங்கன்,

வீரமும் விவேகமும் கொண்ட கோப்பெருஞ்சிங்கன் ஆண்ட காலத்தில் சோழப்பேரரசராக முதலில் மூன்றாம் இராசராசனும், பிறகு மூன்றாம் ராசேந்திரனும் ஆண்டனர், மதுரையில் பாண்டியர்கள் சோழப்பேரரசிலிருந்து விடுபட்டு சுதந்திர பேரரசாக உருவாகின்றனர், மேற்கே போசளர்(ஹொய்சாளர்)கள் பேரரசாக பலத்துடன் ஆட்சியிலிருக்கின்றனர் இதில் போசளர்களுக்கும் சோழர்களுக்கும் திருமண உறவு முறை உள்ளது. இந்த நிலையில் கோப்பெருஞ்சிங்கன் தன்னை சுதந்திர அரசனாக அறிவித்துக் கொள்கின்றார், சோழப்பேரரசுக்கு முடிவுரை எழுத பாண்டியர்கள் தெற்கேயும் காகதீயர்களும், கோப்பெருஞ்சிங்கனும் வடக்கேயும் முனைந்தனர், போசளர்கள் சோழர்களுக்கு ஆதரவாக இருந்தாலும் இந்த அரசியல் சித்து விளையாட்டின் நடுநாயகமாக இருந்தவர் கோப்பெருஞ்சிங்கன்.

பாண்டியர்களிடம் தோற்ற மூன்றாம் இராசராசன் போசளர்களோடு திருமண பந்தம் இருந்ததால் அவர்களின் உதவி கேட்கின்றார், சோழர் படை வடமேற்கு நோக்கி முன்னேற அதே சமயத்தில் போசளர்கள் அதன் மறுபுறத்திலிருந்து கோப்பெருஞ்சிங்கன்னனை தாக்க திட்டமிட்டனர், ஆனால் திட்டத்தில் ஏற்பட்ட சிறு குழப்பத்தால் தக்க சமயத்தில் போசளர் படை வந்து சேரவில்லை, அதை அறிந்த கோப்பெருஞ்சிங்கன் போசளர் படை வருவதற்கு முன்பே சோழப்பேரரசன் மூன்றாம் இராசராசனை கி.பி.1231ல் தெள்ளாறில் எதிர்கொண்டு போர் புரிந்து வெற்றி பெற்று சோழப்பேரரசனை சேந்தமங்களத்தில் சிறையிலடைத்தார். இதை சில வரலாற்று ஆசிரியர்கள் சோழமன்னன் தப்பியோடியபோது அவரை கைது செய்து சிறையிலடைத்ததாகவும் குறிப்பிடுகின்றனர். வட நாட்டு அரசர்களையும், இசுலாமிய அரசர்களையும் பிற நாட்டு அரசர்களையும் பார்க்கும் போது பொதுவாகவே தமிழக அரசர்கள் மிகுந்த கருணையுடன் இருந்துள்ளனர்.

பொதுவாகவே பெரிய அளவில் வாரிசுரிமைப்போர் தமிழகத்தில் நடந்தது என்றால் அது வீரபாண்டியனுக்கும் சுந்தரபாண்டியனுக்கும் கி.பி.1310ல் நடந்த ஒன்றே ஒன்றுதான், மேலும் போரில் தோல்வியுற்ற அரசர்களை மிகுந்த மரியாதையுடன் நடத்தினர், ஆனால் வட நாட்டு வரலாறிலும், இசுலாமிய அரசர்களும், இலங்கை மகாவம்ச வரலாறும் சீன வரலாறும் சொல்வது அரசுகட்டிலுக்காக சொந்த மகனையும், தாயையும், சகோதரனையும் கொடூரமாக கொன்றழித்தனர், அது மட்டுமின்றி தலைவேறு உடல்வேறாக கிடப்பவன் மட்டுமே பிரச்சினை தராத எதிரி என்று நம்பியதால் தோல்வியுற்ற மன்னர்களை உடனடியாக கொன்றழித்தனர்,

மேலும் எதிரிகளின் குழந்தைகள் 4 மாத கைக்குழந்தையாக இருந்தாலும் கூட கொல்வர் அல்லது கண்களை தோண்டி எடுப்பர். அதன்பின் போசளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையால் சோழமன்னனை விடுவித்தார் கோப்பெருஞ்சிங்கன், மீண்டும் சோழப்பேரரசிற்கு திரைசெலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் போசளர்களால் ஆனது, ஆனாலும் தன் முயற்சியை விடாமல் பெரம்பலூரில் போசளர்களுடன் போர் செய்து போசளர்களை துறத்தியடித்தது மட்டுமின்றி அவர்களின் மகளிரையும் சிறைபிடித்து சென்றார். சோழர், பாண்டியர், போசளர்களை பல போர்களில் தோற்கடித்து மூன்று பேரரசுகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கினார் தன் வாழ்நாள் முழுவதும் சுதந்திர போர்களிலேயே கழித்தாலும் நல்லாட்சி நல்கினார்,

அவர்காலத்தில் கலைகள் சிறந்து விளங்கின, சிதம்பரம் நடராசரின் மேல் அளவுகடந்த அன்பு கொண்டு சிதம்பரம் நடராசர் கோவிலின் தெற்கு கோபுரத்தை கட்டி எழுப்பினார், பல கோவில்களை கட்டியும், பல கோவில்களுக்கு கொடையும் வழங்கியதை கல்வெட்டுகளில் காணக்கிடைக்கின்றன.இவருக்கு இருபத்தியேழுக்கும் மேலானா பட்டப்பெயர்கள் உண்டு அவற்றில் சில பாண்டிய மண்டல தாபனசூத்ரதாரன், சகேளதர சுந்தரன், கர்ணாடலஷிமீலுண்டாகன், காடகுலதிலகன், பெண்ணான தீ நாதன், பரதமல்லன். பல கோவில்களை கட்டிய இவர் சில கோவில்களை இடித்தும் உள்ளார், சோழ நாட்டை போர் தொடுத்து வென்றபோது சோழ நாட்டில் சில கோவில்களை இடித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தொண்டைமண்டலம் முழுவதும், சோழமண்டலத்தின் பெரும் பகுதியும் இவரின் கட்டுப்பாட்டில் இருந்தன,தெற்கே தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து வடக்கே கோதாவரி ஆறு வரையான இடங்களில் இவரின் பல கல்வெட்டுகள் கிடைக்கின்றன. கி.பி.1255ல் மீண்டும் விதி கோப்பெருஞ்சிங்கனை பார்த்து மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வடிவில் சிரித்தது, சேந்தமங்கலம் பாண்டியர்களால் முற்றுகையிடப்பட்டு மீண்டும் வேற்றரசுக்கு அடிமையானார் கோப்பெருஞ்சிங்கன், பாண்டிய மன்னர்களின் வடக்கத்திய போர்முனைக்கு தன் படைகளை நல்கி பாண்டிய அரசுடன் ஒரு சமாதான போக்கையே இறுதி வரை கடைபிடித்தார். சரி இனி சில வரலாற்று ஆசிரியர்கள் இவர் மீது எழுப்பும் குற்றசாட்டை பார்ப்போம்.

முதல் குற்றசாட்டு சோழனுக்கு அடங்கிய சிற்றரசன் எப்படி சோழப்பேரரசனையே சிறையிலடைப்பான் இது துரோகமல்லவா? எது துரோகம்? தன்னை நம்பிய தன் மாமனார் எண்பத்திமூன்று வயது ஜாலாலுதின் கில்ஜி தம்மை வரவேற்க தனியாக வந்தவரை வெட்டிக்கொன்றாரே அலாவுதின் கில்ஜி அது வரலாற்றுத்துரோகம், தன்னை தத்தெடுத்து வளர்த்த தாய் மீனாட்சியை எதிர்த்து கலகம் செய்தானே விஜயகுமாரன் அது துரோகம் (சாண்டில்யன் அவர்கள் எழுதிய ராஜபேரிகை நாவலில் இந்த விஜயகுமாரன் தான் கதாநாயகன்) பல்லவ வழித்தோன்றல் தன் மூத்தோர்களின் பேரரசை நிறுவ முயன்றதா துரோகம்? சோழர்களிடம் அடிமைப்பட்டிருந்த தன் நாட்டை விடுவிக்க போர்புரிந்தது துரோகமென்றால் இந்த துரோக குற்றச்சாட்டு பாய வேண்டியது முதலில் சோழர்களின் மீது தான். பல்லவர்களுக்கு அடங்கிய சிற்றரசர்களாக இருந்தவர்கள் பாண்டிய பல்லவப் போரில் நடத்திய அரசியல் சதுரங்கத்தில் முதலில் பாண்டியர்களை பல்லவர்களுக்கு துணையாக நின்று வீழ்த்தி பிறகு பல்லவர்கள் ஒப்பந்தத்தை மீறிவிட்டார்கள் எனக் கூறி போர்தொடுத்து வீழ்த்தினார்களே!! (பல்லவர்களுக்கும் சோழர்களுக்குமிடையேயானது என்ன ஒப்பந்தம்? அதில் பல்லவர்கள் என்ன மீறினார்கள் என நான் படித்தவரையில் கிடைக்கவில்லை, யாரேனும் கிடைத்தால் கூறுங்கள்) அடுத்ததாக கோப்பெருஞ்சிங்கனை பற்றியும் அவரது அரைநூற்றாண்டு அரசைப்பற்றியும் சில வரிகள் மட்டுமே பல வரலாற்று புத்தகங்களில் காணக்கிடைக்கின்றது, அதில் பாதிக்கும் மேல் அவரின் மீதான எள்ளல்களாகவே இருக்கின்றன.

டாக்டர் கே.கே.பிள்ளை யின் தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் என்ற நூலிலிருந்து சில வரிகள்"சோழர்,பாண்டியர் போசளர் ஆகியவர்கள் அனைவரையுமே வென்று வாகைசூடியதாக விருதுகள் பல புனைந்து கொண்டான்பாண்டிய மண்டல தாபனசூத்ரதாரன், சகேளதர சுந்தரன், கர்ணாடலஷிமீலுண்டாகன், காடகுலதிலகன், பெண்ணான தீ நாதன் என்பன அவற்றுள் சிலவாம்"(வென்றது உண்மை தானே, வெல்லாமலா தஞ்சையிலிருந்து கோதாவரி வரை இவரின் கல்வெட்டுகள் கிடைக்கப்பெறுகின்றன? தெள்ளாறு, சேந்தமங்கலம், பெரம்பலூர் போர்களின் முடிவு கோப்பெருஞ்சிங்கனுக்கு தானே சாதகமாக இருந்தது.) "பல்லவர்கள் அல்லது காடுவெட்டி பரம்பரையில் தான் தோன்றியதாக பெருமை பிதற்றினான்" (பிதற்றினானா? பல்லவ குலம் ஒரே நாளில் வேரோடு அழிந்து போய்விட்டதா என்ன? இதைப்பற்றிய ஒரு பெரிய அத்தியாயமே முனைவர் பட்டத்திற்கான அந்த ஆராய்ச்சி நூலில் இருந்தது, மேலும் இவரின் கல்வெட்டுகள் பல்லவர் கல்வெட்டுகள் என்ற பிரிவின் கீழ்தானே வகைப்படுத்தப்பட்டுள்ளது) இது மட்டுமின்றி பல வரலாற்று நூல்களில் கோப்பெருஞ்சிங்கன் அவருக்கு அவரே பட்டப்பெயர்கள் வைத்துக்கொண்டதாகவும் எள்ளல் தொனிக்கும் படி எழுதியுள்ளனர், இவருக்கு பட்டபெயர் விடயத்தில் எள்ளலாக எழுதினால் இராசராசன் முதல் பல அரசர்கள் பட்டப்பெயர்கள் வைத்திருந்ததை எப்படி எழுதுவது? அரைநூற்றாண்டுகள் தமிழக அரசியலின் மையமாக இருந்த கோப்பெருஞ்சிங்கன் பற்றிய பதிவுகளும் இடமும் வரலாற்று நூல்களில் மிகச்சிலவே. ஏன் இப்படி? சில வரலாற்று ஆசிரியர்களுக்கும் சோழ மாயையா?

மேற்கோள் நூல்கள்:

தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் - டாக்டர் கே.கே.பிள்ளை தாய்நிலவரலாறு - பேராசிரியர் கோ.தங்கவேலு
தமிழகவரலாறு - சென்னை பல்கலைகழக இளங்கலை வரலாற்று பாடநூல்

காடவராயர் -- என்ற வன்னிய அரச குலத்தினர் #காடவர் #காடுவெட்டி

காடவராயர் -- என்ற வன்னிய அரச குலத்தினர்
****************************************************
                                        [ http://ekuruvi.com/இசைக்-குதிரைகள்/ ]

காடவராயர் ----  காடவர் + அரையர் === காடவ அரசர்கள் என பொருள்படும் காடவரயர்கள் காடவர் என்ற அரசகுலத்தை சேர்ந்தவர்கள் ...
இவர்கள் வன்னியர் குலத்தினர் .

காடவர்கள் எனப்படுவோர் கிபி 13, 14-ம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவின் பல்லவர்களோடு இணைந்து படையாட்சிகள் பகுதிகளான தென்னாற்காடு கடலூர் மற்றும் வட ஆற்காட்டின் சில பகுதிகளை ஆண்ட வன்னிய அரச
குலத்தவர்கள் ஆவர்.

இவர்கள் முதலாம் கோப்பெருஞ்சிம்மன், இரண்டாம் கோப்பெருஞ்சிம்மன் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் காடவர்களின் வல்லமை தழைத்தோங்கி விளங்கியது. இவர்கள், மூன்றாம் இராசராசன், மூன்றாம் இராசேந்திரன் ஆகியோரின் தலைமையில் பெருமை மங்கத் துவங்கியிருந்த சோழப் பேரரசையே எதிர்க்கும் வல்லமைப் பெற்றிருந்தார்கள். வட ஆற்காட்டிலும், தென் ஆற்காட்டிலும், செங்கற்பட்டிலும் இவ்விரு மன்னர்கள் பல கல்வெட்டுக்களை விட்டுச் சென்றுள்ளனர்.

தோற்றம்:
*************

மகேந்திரவர்மன் I, நரசிம்மவர்மன் I, நரசிம்மவர்மன் II ஆகியோரின் பட்டப் பெயர்களுள் ஒன்றாகக் காடவன் என்பதுக் காணப்படுகிறது. எழுத்தாசிரியர்கள், பல்லவர்களைக் காடவர், தொண்டையார், காடுவெட்டி என்ற பெயர்களால் குறிப்பிடுவதைப் பல்வேறு நூல்களில் காணலாம். காடவர்களுக்கும் பல்லவர்களுக்கும் உள்ள உறவு குறித்து காஞ்சிபுரத்தில் கிடைத்த கல்வெட்டுகளில் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. சிம்மவிஷ்ணுவின் நந்திவர்மன் II  "காடவர்களின் குலப்பெருமையை உயர்த்தப் பிறந்தவன்" என்றுப் போற்றப்பட்டான். சகோதரன் பீமவர்மன்
வழி வந்த மன்னர்களே இந்தக் காடவர்கள்.

காடவராயர் ----  காடவர் + அரையர் === காடவ அரசர்கள் என பொருள்படும் காடவரயர்கள் காடவர் என்ற அரசகுலத்தை சேர்ந்தவர்கள் ...

இவர்கள் வன்னியர்  குலத்தினர், வன்னியர் குலத்தில் இன்றும் காடவராயர் வம்சத்தை சேர்ந்தவர்கள் வாழ்ந்துவருகிறார்கள் இவர்கள் பல்லவர்களின் கிளை குலத்தினர்.இவர்களை போன்று தொண்டைமான் அரசர்களும் பல்லவர் குலத்தினர்... இந்த பல்லவர்களுக்கு பல பெயர்கள் உண்டு...,அவற்றில்
பல்லவதரையர்
பல்லவநாடர்
பல்லவர்.
காடவராயர்
காடுவெட்டி,
காடுவெட்டியார்.
தொண்டையர்
தொண்டைப்பிரியர்,
தொண்டாப்பிரியர்
தொண்டைமான்,
தொண்டைமார்
தொண்டைமான் கிளையார்
தொண்டையர்
பல்லவராயர் 

போன்றவை இன்றும் வன்னியர் குலத்தில் கிளை குடும்பங்களுடைய பெயர்களாக பட்ட பெயர்களாக உள்ளன.அதற்கான ஆதாரம்  சென்னை , காஞ்சிபுரம், வடஆற்காடு, வேலூர்,திருவண்ணாமலை போன்ற பல பல்லவ மன்னர்களின் பகுதிகளில் வாழும் வன்னிய பெருங்குடி மக்களும், அங்குள்ள கோவில்களின் கல்வெட்டுகளுமே... பல்லவ குலத்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் வன்னியர்கள் என்பதை உலகம் நன்கறியும்..

சோழர்களின் கீழ் குறுநில மன்னர்களாக இருந்த காடவர்களின் ஆதிக்கம் குலோத்துங்க சோழன் III காலத்தில் அதிகரிக்கத் தொடங்கியது. காடவக் குறுநில மன்னர்கள் குறித்த வரலாற்றுச் செய்திகள் அதிகம் கிடைக்கவில்லை. முதலாம் கோப்பெருஞ்சிம்மன், 1186-ம் ஆண்டுக் காலத்தில் கூடலூரை ஆண்ட வீரசேகரனின் வழிவந்த மணவாளப்பெருமாளின் மகனாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.
சோழநாட்டுப் பெண்ணை மணம் புரிந்திருந்த முதலாம் கோப்பெருஞ்சிம்மன், மூன்றாம் குலோத்துங்கனின் அவையில் அதிகாரியாக இருந்தான். 1216-ல் பாண்டியர்கள் சோழ நாட்டின் மீது படையெடுத்தபோது முதலாம் கோப்பெருஞ்சிம்மன் சேந்தமங்கலத்தில் ஒளிந்துக்கொண்டு தன் வலிமையைப் பெருக்கிக் கொண்டான். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டுக் காடவர்கள் தங்கள் ஆதிக்கத்தை சிறிது சிறிதாக அதிகரித்து வந்தனர். இறுதியில், இலங்கை மன்னன் இரண்டாம் பராக்கிரம பாகூவின் உதவியுடன் மூன்றாம் இராசராச சோழனைத் தோற்கடித்துச் சிறைப்படுத்தினான். முதலாம் கோப்பெருஞ்சிம்மனின் மகன் இரண்டாம் கோப்பெருஞ்சிம்மனின் ஆட்சிக் காலத்தில் காடவர்களின் அரசு மேலும் விரிவடைந்தது. கடைசி சோழ மன்னனான மூன்றாம் இராசேந்திரன் இரண்டாம் கோப்பெருஞ்சிம்மனின் உதவியுடந்தான் அறியணை ஏறினான். அவர்களுடைய உறவு பகையும் நட்பும் கலந்த ஓர் உறவாக விளங்கியது.

சமயப் பணி
**************
காடவ மன்னர்கள் கோயில்களுக்குக் கொடைகளை வாரி வழங்கினர். பல புதியக் கோயில்கள், சிற்றூர்கள், சத்திரங்கள், சாலைகள் ஆகியவற்றைத் தோற்றுவித்தனர். ஆளப்பிறந்தீசுவரம் உடையார், அழகியப் பல்லவந்தோப்பு, அழகிய பல்லவன் சந்தி, கோப்பெருஞ்சிங்கன் தெரு போன்ற இடங்கள் அவற்றுக்குச் சான்றாக இன்றும் விளங்குகின்றன. சேந்தமங்கலத்தில் காணப்படும் கோட்டைச் சிதிலங்கள் சிறிதுக் காலமேத் தழைத்தோங்கியக் காடவர்களின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றன.

முதலாம் கோப்பெருஞ்சிங்கன் மூன்றாம் இராஜராஜசோழன் காலத்தில் வாழ்ந்த ஒரு குறுநில மன்னன். காடவர் குலத்தைச் சேர்ந்தவன். இவன் கிட்டத்தட்ட கிபி 1216 முதல் 1242 வரை அரசாண்டவன். ஹொய்சாள தண்டநாதர்களின் படையெடுப்பை பற்றி விவரமாகத் தெரிவிக்கும் திருவேந்திபுரம் கல்வெட்டு இராஜராஜனைத் தாக்கி சிறைப்பிடித்து பிறகு விடுதலை செய்த காடவச் சிற்றரசன், புகழ் பெற்ற கோப்பெருஞ்சிங்கனே என்று தெரிவிக்கிறது. (சமஸ்கிருதத்தில் இவன் பெயர் மஹராஸ சிம்ம எனப்படும்.) இந்த காலப்பகுதியின் வரலாற்றில் கோப்பெருஞ்சிங்கனுக்கு நிறைந்த இடம் உண்டு, தமிழ்நாட்டிலும் கன்னநாட்டிலும் கிடைக்கும் ஏனைய கல்வெட்டுக்களும் இந்தச் செய்திகளை உறுதிபடுத்துகின்றன.

இராஜராஜனின் 14-ம் ஆட்சி ஆண்டில் (கி.பி 1230) விருத்தாசலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டிலிருந்து காடவச் சிற்றரசர்கள் இன்னும் சோழரின் மேலாதிக்கத்தை ஏற்று வந்தனர் என்றும் இவர்களுள் கோப்பெருஞ்சிங்கன், தக்க வயது அடைந்ததோடு, முக்கியமானவனாக விளங்கினான் என்றும் தெரிவிக்கிறது. கோப்பெருஞ்சிங்கன் சோழ சக்கரவர்த்தியை சேந்தமங்கலத்தில் சிறைப்படுத்தியதோடு விஷ்ணு கோயில்கள் உட்பட எல்லாக் கோயில்களையும் கொள்ளையடிக்கும் படியும் ஏற்பாடு செய்தான். ஹொய்சாளர்கள் வைணவத்தில் அழுத்தமான தீவிரமான பற்றுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மன்னன் நரசிம்மன் தன் தலைநகரான துவார சமுத்திரத்திலிருந்து புறப்பட்டதாயும் சோழர்களை மீண்டும் நிலைநாட்டியவன் என்று பெயர் தனக்கு ஏற்படும் வரை போர் முழக்கம் செய்ததாயும் ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவனுடன் ஏற்பட்ட போரினால் கோப்பெருஞ்சிங்கன் சோழ சக்கரவர்த்தியை விடுதலை செய்து அவனுடைய சிம்மாதனத்தில் அமரச் செய்வதாக நரசிம்மனின் தளபதிகளுக்கு அறிவித்தான்.

தஞ்சை மாவட்டம் நீடுரைச் சுற்றிய பகுதி கோப்பெருஞ்சிங்கன் என்ற அழகிய சீயனால் ஆளப்பெற்றதாய் குறிப்பிடுகிறது. கோப்பெருஞ்சிங்கனின் வீரம் வெவ்வேறுவகையான ஜந்து செய்யுட்களில் பாராட்டப்படுகிறது. கோப்பெருஞ்சிங்கனுக்கு அவனி நாராயண நிருபதுங்கன், தொண்டைக்கும் மல்லைக்கும் மன்னன் என்றெல்லாம் பட்டங்கள் இருந்திருக்கிறது. கோப்பெருஞ்சிங்கனும் ஹொய்சாளர்களும் தொடர்ந்து போரிட்டுக்கொண்டிருந்தனர் என்பது கி.பி. 1236ல் துன்முகி ஆண்டில் காடவனுக்கு விரோதமான ஒரு படையெடுப்பில் வீர சோமேசுவரன் மங்கலத்தில் தங்கினான் என்று அறியப்படும் ஒரு குறிப்பால் தெளிவாகத் தெரிகிறது.

உசாத்துணை
http://ta.wikipedia.org/wiki/காடவர்
http://www.whatisindia.com/inscriptions/
Nilakanta Sastri, K.A. (1955). A History of South India, OUP, New Delhi (Reprinted 2002).

Tuesday, 30 April 2013

ஒரே சமூகத்தில் ஒற்றுமை இல்லாமையால் அழிந்த தென்னார்க்காடு மாவட்ட வன்னியர் பாளையம் : உருப்படியம்மன் கதை

ஒரே சமூகத்தில் ஒற்றுமை இல்லாமையால் அழிந்த தென்னார்க்காடு மாவட்ட வன்னியர் பாளையம் : உருப்படியம்மன் கதை


தென்னாற்காடு மாவட்டத்தில் வன்னியர் பாளையங்கள் பல இருந்தன.சக வன்னிய பாளையக்காரர் இருவர் செய்த தீங்கினால் அழிந்த பாளையைம்தான் "தென்குத்து".


"வெற்றிக்களித்த வீரமிண்டார்" எனும் பட்டம் பெற்ற அப்பாளையக்காரர் மரபு எங்கோ ஒரு மூலையில் ஒரு கிராமத்தில் முடங்கிக் கிடக்கிறது. படிப்பவரை கண் கலங்க வைக்கும் சோக வரலாறு கொண்டதுதான் "தென்குத்து".

ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அவ்வினத்தைச் சார்ந்த மக்களை அழிக்க வேண்டியதில்லை.மாறாக அவர்களை சுற்றியுள்ள வரலாற்றுத் தடயங்களை அழித்தாலே போதும்.அவ்வினம் முகவரியற்றுப் போகும்.
எனவே தான் விலை மதிப்பற்றவையாக விளங்கும் வரலாற்றுத் தடயங்களை பாதுகாக்க வேண்டும்.என்ற உறுதி மொழியை ஒவ்வொரு தமிழனும் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இன்று உள்ளோம்.

சுமார் 4500 ஆண்டுகால வரலாற்றுப் பாராம்பரியத்தையும் ,33000 சங்கப் பாடல்களையும் 2900 கல்வெட்டுக்களில் இனப்பதிவு பெற்றும் பண்டைய காலத்தில் எகிப்து வரை சென்று வர்த்தக பிணைப்பை ஏற்ப்படுத்தியதோடு அல்லாமல் 2300 ஆண்டுகால மொழியியல் வரலாற்றினையும் கொண்ட பெருமைக்குரிய நம் இனம் பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு விதமான ஒடுக்கு முறைகளுக்கு ஆட்பட்டாலும் நம்மிடையே அவ்விப்பொழுது ஒரு குடிதாங்கித் தலைவன் தோன்றி தமிழனின் இழந்த பண்பாட்டியல் கூறுகளை மீட்டெடுக்கும் பணியை செய்து வருகிறார்கள்.

இத்தன்மையியல் கூறுகள் ஒரு தலைவனிடத்தில் மட்டும் இருந்தால் போதாது.அது அவனைச் சார்ந்த சமுகத்திடமும் இருத்தல் வேண்டும்.என்ற அடிப்படையில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக வரலாற்றுத்துறை கடலூர் மாவட்டத்தில் மறையும் நிலையில் உள்ள கிராமப்புற சிறு தெய்வங்களை பற்றிய அரிய தகவல்களை தொகுத்து வருகிறது.

அதன் அடிப்படையில் இக்குழுவினர் சமீபத்தில் இம்மாவட்டத்தில் உள்ள சந்தைவெளிப் பேட்டை என்ற ஊரின் கிராமப்புற தெய்வமான உருப்புடியம்மன் பற்றிய பல அரிய வரலாற்றுத் தடயங்களைத் தொகுத்துள்ளனர்.


சந்தைவெளிப்பேட்டை:

கும்பகோணம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வடலூரில் இருந்து 3 கி.மீ தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது.குறிப்பாக புதிய வீராணம் நீரேற்றும் நிலையத்திற்கு தென்புறத்தில் சந்தைவெளிப்பேட்டை அமைந்துள்ளது.

இவ்வூரைப் பார்ப்பதற்கு குக்கிராமமாக இன்று தோன்றினாலும் சுமார் 2300 ஆண்டுகால வரலாற்றினை தன்னத்தே கொண்டுள்ளது. குறிப்பாக இவ்வூரில் இரும்புக்கால பண்பாட்டின் எச்சங்களும் பிற்கால சோழர் காலத்தின் கலைப்படைப்புகளும் நாயக்கர் காலத்திய வரலாற்றுத் தடயங்களையும் தன்னுள் தாங்கியுள்ளது.

இவ்வளவு சிறப்புமிக்க சந்தைவெளிப்பேட்டையின் காவல் தெய்வமாக விளங்கும் உருப்புடி அம்மன் வழிபாடு இப்பகுதி மக்களிடையே ஐக்கியப்படுத்தப்பட்ட ஒன்றாக உள்ளது.

உருப்புடி அம்மன் கோவில்:

சந்தைவெளிப்பேடை கிராமத்தின் உயிர்நாடியாக விளங்கும் பெரிய வாய்க்காலின் வடக்கு கரையில் மரங்கள் மற்றும் புதர்கள் நிரம்பிய பகுதியில் உருப்புடி அம்மன் கோவிம் அமைந்துள்ளது.இன்று இப்பகுதியின் காவல் தெய்வமாகவும் இப்பகுதி மக்களின் குடும்பதெய்வமாகவும் விளங்குகிறாள்.மேலும் இவ்வம்மன் தெய்வமாக்கப்பட்ட பின்னனியில் கூறப்படுகின்ற கதையில் ஒர் அற்புதமான வரலாற்றுப் பின்னனியுள்ளது.


தென்குத்துப்பாளையம்:


பொதுவாக பாளையக்காரர்கள் முறையானது தமிழகத்தில் கி.பி.16 ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக்க வம்சத்தின் முதல் மன்னனாக திகழ்ந்த விசுவநாத நாயக்கரின் அமைச்சரான அரிய நாத முதலியாரால் அறிமுகப்படுத்தபட்டதாகும்

உருப்புடி அம்மனின் முன்னோரான வெற்றி களித்த வீரமுண்டனர் பரம்பரையினரே சோழர் காலம் முதல் இப்பகுதியின் தனிப்பெரும் நிலமானிய தலைவர்களாக விளங்கி வந்தனர்.

கி.பி 16 ஆம் நூற்றாண்டில் சந்தைவெளிப்பேட்டை பகுதி நாயக்க மன்னர்களின் ஆட்சியின் கீழ் வந்தது.இப்பகுதி வடக்குத்துப் பாளையம் தெக்குத்துப்பாளையம் என மூன்று பாளையங்களாக பிரிக்கப்பட்டன.தென்குத்து பாளையம் வீரமுண்டனாரின் வாரிசிடம் ஒப்படைக்கப்பட்டது.

கி.பி 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழகத்தில் நாயக்க மன்னர்களின் அட்சி முடிவிற்கு வந்தது.அதன் பிறகு இப்பகுதிகள் அனைத்தும் ஆர்காட் நவாப்பின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

வன்னியரால் அழிந்த வன்னியர் பாளையம்(con)
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட வடக்குத்து மற்றும் கீழுர் பாளையக்காரர்கள் தங்களது வரிவசூலை நேரடியாக ஆர்காட் நவாப்பிடம் வழங்கினார்.இதன் மூலம் நவாப்பின் அன்பிற்குப் பாத்திரமாக விளங்கினார்.இதனால் இவ்விரு பாளையக்காரர்களும் சேர்ந்து தென்குத்துபாளையக்காரரான வீரமுன்லனாரின் வாரிசுகளை மதிக்காமல் அவ்வப்போது தவறான செய்திகளை நவாப்பிடம் கூறிவந்தனர்.

இதனால் ஆத்திரம் முற்ற ஆர்காட் நவாப் தென்குத்துப்பாளைக்காரரை வரி என்கிற பெயரில் தொல்லை கொடுக்கலானார்.மேலும் பாலைத்தின் உரிமைகளை பறிக்க போவதாகவும் கூறினார்.இதனால் அத்திரமுற்ற வீரமுண்டனாரின் வாரிசுகள் அர்காட் கொடுத்து வந்த வரியினை நிறுத்தி வந்தனர்.

இதனால் ஆர்காட் நவாப் வடக்குத்து கீழுர் பாளையக்காரர்களின் ஆலோசனைப்படி படையை அனுப்பி தென்குத்துபாளையத்தின் உரிமையைப் பறிக்கும் நோக்கில் தலைமையை கைது செய்து வரும் படி அனுப்பினான்.நவாப்பின் படை வீரர்கள் தென்குத்து பாளைய தலைவனை சந்தித்து தமது மன்னன் கூறிய செய்திகளைக் கூறினார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியுற்ற பாளையத் தலைவன் நாளை போரில் சந்திப்பதாக கூறினான். மறுநாள் காலை இருந்த சொற்ப்பவீரர்களைக் கொண்டு நவாபி வீரர்களைத் தாக்க முற்பட்டார்.

இதற்கிடையே கீழுர் வடக்குத்து பாளையக்காரர்கள் நவாப்புடன் சேர்ந்து தென்குத்து பாளையத் தலைவரை எதிர்த்தனர்

அரண்மனை முழுவதும் சூறையாடிய நவாப்பின் படைவீரர்களுக்கு அஞ்சித் தென்குத்துப் பாளையத்தலைவனின் பெண்டிர் ஒடி தப்பினர்.இவர்களை விரட்டிக் கொன்றனர் நவாபின் வீரர்கள்.

தென்குத்துப் பாளையத் தலைவனின் மகள் நிறைமாத கற்பினி இவள் தமது தலைப்பிரசவத்திற்காகத் தந்தை வீட்டிற்கு வந்திருந்தாள்.இவளையும் விட்டு வைக்கவில்லை எதிரிப்படையினர்.தமது உயிர் போனாலும் பரவாயில்லை மக்களின் உயிர் காப்பாற்ற பட வேண்டும் என்பதற்காக நவாபின் மேலாண்மையை ஏற்று வீரர்களிடம் சரன் அடைவதே மேல் என்று தம் தந்தையிடம் கூறிப் போரை எப்பிடியாவது நிறுத்தி விட வேண்டும் எனக் கருதி தந்தையை தேடிப் போர்க்களம் புறபட்டாள்

அங்கே அவளை சுற்றி வளைத்த நவாபின் வீரர்கள் அவளை கொன்றனர்.இதனை அறிந்து தென்குத்துப்பாளைய தலைவன் மகளே இறந்த பிறகு பாளையம் எதற்கு எனக்கூறி தனது பாளையத்தைப் பிரித்து வடகுத்து,தென்குத்து மக்களுக்கு ஆளுக்குக்கால் காணி வீதம் கொடுத்து விட்டு அப்பகுதியை விட்டு குடிபெயர்ந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

மேற்கூறிய செய்திகளை எங்களுக்கு நேர்க்காணலின் பொழுது கூறிய வெற்றிக் களித்த வீரமுண்டனாரின் தற்போதைய வாரிசான செந்தாமரைக்கண்ணராயர் இதனைப் பாடலாகக் கூறுகிறார்.

தம் இனம் காக்க முற்பட்ட தம் மகள் கொடுரமாக கொல்லப்பட்டமையால் அவளை இன்று வரை அவ்வாரிசுகள் உருப்புடியம்மன் என்ற பெயரில் தம் குலதெய்வமாக வணங்கி வருகின்றனர்.

இவ்வாறு தென்குத்து பாளையத்தலைவனின் மகள் கொடுரமாகக் கொல்லப்பட்ட அவ்விடத்தை இன்றும் இவ்வூர் மக்கள் கருவருத்தான் கரம்பு என்று அழைக்கின்றனர்.பொதுவாக தமிழர்கள் இடத்தே ஒரு பாரம்பரியம் உண்டு.ஒரு பெண்னைக் கொன்றால் அப்பாவம் ஏழேழு தலைமுறையை தாக்கும் என்பார்கள்

அதனால்தான் என்னவோ அவள் ரத்தம் பட்ட இடம் இன்று வரை கரம்பாகவே காட்சி அளிக்கிறது.சாபம் மனிதர்களுக்கும் மட்டும் அல்ல மண்ணுக்கும் உண்டு போலும்.

கோட்டைமேடு:

சந்தவெளிப்பேட்டையில் இருந்து பெரிய வாய்க்காலுக்கு செல்லும் வழியில் கோட்டை மேடு என்ற பகுதி உள்ளது.இன்று சாலை அமைக்கப்பட்டுள்ளது.எஞ்சிபகுதியில் கள ஆய்வு செய்த பொழுது சாலை அமைக்க மண் எடுக்க பட்ட பள்ளத்தில் கூரைக்காக பயன்படுத்தபட்ட ஒடுகள் மற்றும் மண்ட்பாண்ட ஒடுகள் ஏராளமாக காணப்பட்டன.மேலும் 216 செ.மீ அளவுள்ள செங்கற்கள் உடன் கூடி கட்டடப்பகுதி ஒன்று கண்டப்பட்டது

இவற்றை அய்வு செய்த பொழுது அக்கட்ட பகுதி கி.பி.11-12-ஆம் நூற்றாண்டை சார்ந்தவையாகும்.மேலும் இங்கு சேகரிக்கப்பட்ட கூரை ஒடுகளின் அமைப்பு கங்கைக் கொண்ட சோழபுரம் மாளிகை மேட்டுப்பகுதியில் நடைபெற்ற அகழாய்வில் கிடைத்துள்ள கூரை ஒடுகளின் அமைப்பை ஒத்துள்ளது.எனவே இங்கு கிடைத்துள்ள கலைப்பொருட்களும் ஒடுகளும் சோழர்க்காலத்தை சார்ந்தவையாகும்.இப்பகுதியில் இருந்த அரண்மனை வெற்றி களித்த வீரமுண்டனார் உடையதாகவும் இருக்கலாம்.

உருப்புடியம்மன் சிலை:

பெரியவாய்க்காலின் வடகரையில் அம்மன் கோவில் சமீபத்திலிருக்கும் அம்மன் சிலை 300 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.

செவ்வகவடிவத்தினால் ஆன எளிய பீடத்தின் மீது சுகாசனத்தில் அமர்ந்த நிலையிலும் தலைமுடி சவாளகேச அமைப்பில் பரந்து காட்டப்பட்ட நிலையிலும் காதில் பத்ரகுண்டலம் கழுத்தில் எளிய ஆரம்,சரப்பளி மற்றும் தோள்வலை காலில் பாதசரம் மெல்லிய முப்பிரி நூல் போன்றவைகளும் கிழாடை மெல்லிய மடிப்புகள் உடனும் மேலிரு கரங்களின் வலது கரத்தில் கபாலமும் கணப்படுகிறது.

மேலும் சிலையில் மார்புக் கச்சை இல்லை.இச்சிலையின் உடல் அமைப்பில் பிற்கால சோழர் பாணியை போன்று காணப்பட்டாலும் சிற்பத்தின் அணிகலன் ,ஆடை வடவமைப்பு ,முகம் ,கை,கால்,கூரியநாசி போன்ற அமைப்புகளின்கி.பி-17-ஆம் நூற்றாண்டின் கலைப் பாணியின் தாக்கமே அதிகம் காணப்படுகிறது.

இதன் மூலம் உருப்புடியம்மன் வழிபாடு கி.பி 17-ஆம் நூற்றாண்டில் இருந்து தொடங்கி இருக்கலாம்.என்பதை அறிய முடிகிறது.


மேலும் உருப்புடி அம்மன் தெய்வமானதற்கு பின்னனியில் கூறப்படுகின்ற வரலாறு நிகழ்வுகளை தனியாகப் பிரித்துப் பார்த்தால் ஏதோ புராணக்கதை போல் தோன்றும்.

மாறாக சந்தைவெளிப்பேட்டை கோட்டை மேடு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட செங்கல்,பானை ஒடுகள் கூரைக்காக பயன்படுத்தப்பட்ட ஒடுகள்,கல்வெட்டு சண்டிகேஸ்வரர் சிலை சிவலிங்கங்கள் போன்றவைகளை வைத்துப் பார்க்கும் பொழுது சோழர் காலத்தில் இப்பகுதியின் தலைவனாக வெற்றி களித்த வீரமூண்டனார் இருந்தது உண்மையாகவே தோன்றுகிறது.

மேலும் கி.பி 16 ஆம் நூற்றாண்டில் வடக்குத்து பாளையக்காரரான சமுட்டியார் ஒருவர் இருந்தார்.என்பதை சேலம் செப்பேட்டின் மூலம் அறிய முடிகிறது.எனவே தென்குத்துப் பாளையம் இருந்ததாக கூறப்படுவது கர்ணப்பரம்பரை கதையாக நமக்கு தோன்றினாலும் வடக்குத்துப் பாளையம் இருந்தது ஆணித்தரமான உண்மையே.


ஆர்காட் நவாப் தென்குத்து பாளையத்தை கைப்பற்ற நினைத்து தம் வீரர்களை அனுப்பியது இருவருக்கும் இடையே சண்டை நடைபெற்றது எல்லாம் உண்மையாக இருக்குமோ என்ற கேள்விக்கு விடைகளாக விளக்குபவையாதென்றால் இப்பகுதியில் காணபடுகின்ற சிலைகள் சிவலிங்கங்கள் அனைத்தும் சிதைக்க பட்ட நிலையிலே காணப்படுகின்றன.

மேலும் இவ்வூருக்கு அருகாமையில் உள்ள பெரியக் கோவில் குப்பம் என்ற ஊரில் பெயரில் தான் கோவில் சிலைகள் மற்றும் கோவில் இருந்ததற்கான தடயங்கள் மட்டுமே காணப்படுகின்றன.இவைகளை வைத்து பார்க்கும் பொழுது சந்தைவெளிப்பேட்டை,கோவில் குப்பம் ஊர்களில் இருந்த சோழர்கால கோவில்கள் கண்டிப்பாக இப்பகுதியில் நடைபெற்ற போரினால் அழிக்கப்பட்டிருக்கலாம்.மேலும் வெங்கடாம்பேட்டையில் நவாப் கட்டியதாகக் கூறப்படும்மசூதி ஒன்று இன்றும் உள்ளது.


எனவே சந்தைவெளிப்பேட்டையில் வெற்றிகளித்த வீரமுண்டனார் அவரது வாரிசான உருப்புடியம்மன் ஆகியோர்களின் வாழ்க்கை வரலாறு கதைகளாக இப்பகுதியில் உலாவினாலும் அவர்கள் வாழ்ந்தது உண்மையே என வரலாற்று சான்றுகள் நிரூபித்துள்ளன

நன்றி: தமிழோசை
நன்றி: திரு சுவாமி