Showing posts with label வன்னியர்கள் வரலாறு. Show all posts
Showing posts with label வன்னியர்கள் வரலாறு. Show all posts

Monday, 7 April 2014

தமிழ் சத்திரியர்கள் - வன்னியர்கள்

வன்னியர்கள் மட்டும் தான் தமிழ் சத்ரியர்கள்...

வன்னியப் பெருங்குடி மக்கள் தான் தமிழ்நாட்டில் ஷத்திரியர்கள். எத்தனையே வகுப்பினர் முட்டி மோதிப் பார்த்த போதிலும், வன்னியர்கள் மட்டுமே ஷத்திரியர்கள் என்று ஆங்கிலேயர்களால் ஆய்ந்து  அங்கீகரிக்கப்பட து. மறவர்,கள்ளர், முக்குலத்தோர் யாருக்கும் சத்ரியர்கள் என்ற பட்டம் அரசால் அங்கீகரித்து இன்றுவரை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிட தக்கது.

விஜயதசமியின் போது வன்னியர்கள் ஆயுத பூஜை செய்வதில்லை என்று சொன்னது யார்...? உங்களுக்கு தெரியுமோ என்னவோ...? வன்னியர்களுக்கு உள்ள பட்டங்களில் ஒன்று வில்வித்தையனார் என்பது. வில் வித்தைகளுக்கு அதிபதி என்று அதற்குப் பொருள். இந்த வில்வித்தையை வன்னியர்கள் கற்கத் தொடங்குவதே விஜயதசமி அன்று தான். இது வெறும் கூற்று அல்ல. வரலாற்று பதிவுகள் ஏராளமானவை உண்டு.

வன்னியர்களான மாயவரம் பாளையக்காரர்களு க்கூள்ள ஒரு பட்டம், ராவுத்தமின்ட நைனார் என்பது. அதாவது, அவர்கள் குதிரைப் படைகளுக்குபொறுப ்பாளர்கள். குதிரை ஏறி ஆயுதம் பிடித்து எதிரிகளின் கொட்டத்தை அடக்கியவர்கள். அதுமட்டுமல்ல... கரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், வழி வழியாக வரும் கிராமப்புற கதைகளில், அடக்க முடியாதமுரட்டுக ் குதிரைகள் பலவற்றை வன்னியர்கள் மட்டுமே அடக்கியதை எடுத்துக் கூறுவார்கள்.கிர ாமியக் கதைகள் தான் வரலாற்று ஆராய்ச்சியாளர்க ளுக்கு முக்கியமான களம் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை….
நான் வகைப் படைகளை ரத, கஜ, துரத, பதாதி என்று பிரிப்பார்கள். இவை நான்கும் சேர்த்துதான் படை. படையாட்சி என்பது வெறும் காலாட்படை அல்ல. ரதம், யானை, குதிரை போன்றவற்றையும் சேர்த்தது தான். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், வன்னியர்களின் ஒரு பிரிவினருக்கு குல தெய்வம் மதுரை வீரன். குதிரையில் ஏறி கம்பீரமாக அமர்ந்து இருப்பான் மதுரை வீரன்.மதுரை வீரன் என்றதும் மதுரைக் காரர் என்று நினைத்து விடக் கூடாது. நம்முடைய பகுதியில் இருந்து மதுரைக்கு சென்று போர் புரிந்தவர்.

பட்டங்களையும் முத்திரைகளையும் பாதுகாக்கும் சாதிப் பிள்ளைகளை கேட்டால் சொல்வார்கள்... வன்னியர்களின் வாகனம், குதிரை. அதிலும் ஆண் குதிரை. வன்னியர்களின் காவல் மிருகம், ஆண் நாய். திருண்ணாமலை மாவட்டத்திற்கு முன்பு இருந்த பெயர், சம்புவராயர் மாவட்டம் என்பது. சம்பு + அரயர் =சம்புவராயர். அந்த பகுதியை ஆண்ட வன்னிய அரசர்கள் அவர்கள்.
இன்னும் வன்னியர்கள் தான் ஷத்திரியர்கள் என்று சொல்வதற்கு கலிங்கத்துப் பரணி, கல்நாடம், சிலையெழுது போன்ற ஏகப்படட நூல்கள் உள்ளன. பின்னர் வந்த பாளையக்காரர்கள் பலர் நம்மவர்கள் தான் என்பதை வன்னியர் சிலையெழுபது என்ற வழி நூலும் பளிச்சென்று சொல்லும், வன்னியர்கள் தான் ஷத்திரியர்கள் என்பதை.

சோழ மன்னர்கள் வன்னியர்கள் என்று சொல்வதற்கு வரலாற்று ஆதாரமாய் வாழ்கிறார்கள், பிச்சாவரத்து பாளையக்காரர்கள் . சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஒரு நடைமுறை வழக்கம் உண்டு. சோழ மன்னர்களுக்கு மட்டுமே அங்குள்ள மூலஸ்தானத்தின் பஞ்சாட்சரப் படிக்கட்டில் வைத்து, சிவ பெருமானுக்கு உள்ள அத்தனை அபிஷேக ஆராதனைகளையும் செய்து முடி சூட்டுவார்கள். இந்த வரலாற்று உண்மை, பெரிய புராணத்தில் காணப்படுகிறது. அதிலும், கூற்றுவ நாயனார் புராணம் இதைப் பற்றித் தான் பேசுகிறது. வேறு எந்த சாதிக்கும், பிரிவுக்கும் இந்த மரியாதை கிடைக்காது.
இந்த பஞ்சாட்சர படிக்கட்டில் வைத்து முடிசூட்டும் உரிமையை இந்த காலம் வரையில் பெற்ற ஒரே குடும்பம், பிச்சாவரத்து பாளைக்காரர்கள். இவர்கள் வன்னியர்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அவர்களைக் கேட்டால் கூட சொல்வார்கள். எனவே, வன்னியர்கள் தான் சோழர்கள் என்பதில் எந்த மாறுபாடும் இல்லை. எனவே, வன்னியர்கள் மன்னர்கள், ஆண்ட பரம்பரை, ஷத்திரியர்கள் என்பதில் உறவுகளுக்கு ஐயமே தேவையில்லை.

மற்றொன்று, உணவுப் பழக்கத்தை மையப்படுத்தி நம்முடைய கலாச்சாரத்தை தாழ்வு படுத்த முடியாது. உணவுப் பழக்கம் என்பது காலத்திற்கு ஏற்ப மாறுதல்களுக்கு உட்பட்டது. ரிக் வேதத்தில் பிராமணர்கள் மாட்டு இறைச்சியை எப்படி சாப்பிட வேண்டும் என்பதற்கு விரிவான விளக்கங்கள் உள்ளன. அது அந்தக் காலம். ஆனால், இன்று பிராமணர்கள் சிலர் பசுவதையை தடுக்க வேண்டும் என்று கோஷமிடுகிறார்கள்.

அசுவமேத யாகம் என்ற ஒன்றைப் பற்றியும் ரிக் வேதம் கூறுகிறது.
மன்னர்கள் நடத்தும் அந்த யாகத்தின் இறுதியில் அனைத்து தகுதிகளும் கொண்ட ஆண் குதிரை பலியிடப்படும். பின்னர் அதன் பாகங்கள் அரசனுக்கும், பின்னர் வேதங்களை சொல்லி யாகத்தை நடத்தி வைக்கும் பிராமணர்களுக்கு பகிர்ந்து தரப்படும். குதிரைக் கறி தின்ற பிராமணர்கள் இப்போது அதையே தான் சாப்பிடுகிறார்களா...?

மேலும், வன்னியர்கள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பன்றிக் கறி சாப்பிடுவதில்லை . அது சில பகுதிகளை மட்டுமே சார்ந்தது. அதோடு, காட்டில் சென்று பன்றியை வேட்டையாடுவது அத்தனை சாமான்யமானதில்ல ை. ஈட்டியை வைத்து தான் பன்றியை வேட்டையாடிப் பிடிப்பார்கள். பொருளாதார நிலையில் பிந்தங்கி இருப்பதும் உணவு பழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது . சமூக, பொருளாதார நிலவரத்தால் பன்றிக் கறியும் சாராயமும் ஒரு சிலருக்கு பழக்கமாகி இருக்கலாம். ஆனால், வன்னியர்கள் அத்தனைப் பேருமே அப்படி இருப்பதில்லை.

அதோடு, நம்முடைய பாரம்பரிய கலையான கூத்துகளில், மண்ணைக் காக்கும் போர்கள் பற்றிய கதைகள் தான் அதிகம். மாட்சிமைப் பொறுந்திய மன்னர்களாகவும், படையாட்சி செய்த தளபதிகளாகவும், எதிரிகளை பந்தாடும் படைகளாகவும் விளங்கியவர்கள் வன்னியர்கள் தான். நாங்கள் தான் தமிழ்நாட்டு ஷத்திரியர்கள்.

நம்மிடம் பெருமையாய் சொல்ல இன்னும் எத்தனையோ இருக்கிறது. ஆனால் தென் தமிழகத்தில் சிலர் வன்னியர் பட்டங்கள் தமக்குரியது. அடுத்த குலப்பெருமையை திருடி அடுத்தவர் அப்பா'வை தன் அப்பா எஎன்று சொல்லி கொண்டு திரிகின்றனர்.

Wednesday, 9 October 2013

கோப்பெருஞ்சிங்கன் - வரலாற்றில் மறைக்கப்பட்ட வன்னிய மன்னன்!!

தென் ஆர்க்காட்டு சிங்கம் கோப்பெருஞ்சிங்கன் - வரலாற்றில்
மறைக்கப்பட்ட வன்னியர் குல பேரரசன்




கோப்பெருஞ்சிங்கன் (கி.பி. 1229-1278) தற்போதைய ஆரணியின் அருகிலுள்ள படவேடு என்கிற ஊர் அந்த நாட்களில் படைவீடு என்று அழைக்கப்பட்டது அங்கே நிலை கொண்டிருந்தது கோப்பெருஞ்சிங்கனின் படை. கருத்த மேனியுடன் ஆஜானுபகவான தோற்றத்துடன் இருந்த அரசன் கோப்பெருஞ்சிங்கன் தன் படை நிலைகொண்டு இருந்த இடத்திற்கு சென்று அணிவகுத்து நிற்கும் தன் படையை பார்வையிடுகின்றான்.தீர்க்கமான அவன் கண்கள் செக்கச்செவேல் என சிவந்திருந்தது, உள்ளம் எங்கும் சுதந்திர வேட்கை சுடர் விட்டெறிந்து கொண்டிருந்தது.

வெற்றி வேல், வீர வேல் என்ற முழக்கங்களுக்கிடையில் படையினை பார்வையிடுகின்றான், படையின் ஒவ்வொரு வீரனும் சுதந்திர தாகத்துடன் தன் நாட்டு சுதந்திரத்திற்காக எதையும் எதிர்கொள்ள தயாராக கட்டுக்கோப்பாக நின்ற படையை பார்த்த நிமிடத்தில் சுதந்திரத்திற்காக தாங்கள் மோதப்போகும் சோழப்படையின் எண்ணிக்கையை விட சிறியதாக இருந்தாலும் நிச்சயம் சுதந்திர தாகம் தீரும் என்ற நம்பிக்கையில் தன் கூடாரத்திற்கு சென்றான். அன்றிரவு முழுதும் தூங்காமல் ஏதேதோ சிந்தனைகள், தன் தளபதிகளுடன் தொடர்ந்து ஆலோசனைகள், ச்ச்தம் மூத்தோர்கள் மகேந்திரவர்மனும் நரசிம்ம வர்மனும் கட்டிக் காத்த பல்லவ பேரரசு சோழர்களின் அரசியல் சதுரங்க விளையாட்டால் சிதைக்கப்பட்டு சிதறிய கதைகள் கேட்டு வளர்ந்த போதே சோழப்பேரரசை வென்று அதன் அடிமையாக இருக்கும் இந்த அரசை மீட்டு மீண்டும் பல்லவ பேரரசை நிறுவ வேண்டுமென உறுதி பூண்டான், சத்திரியனாக மட்டும் இருந்தால் போதாது, இதற்கு சாணக்கியத் தனமும் வேண்டுமென்ற கொள்கையில் உறுதியாக இருந்தான். தான் எழுதப்போகும் சோழப்பேரரசின் முடிவுரையை நாளைய வரலாறு பேசும், பல்லவ குலத்தின் மாவீரனொருவன் சோழப்பேரரசை முடித்து மீண்டும் பல்லவ பேரரசை நிலைநிறுத்தியதை வரலாறு பாராட்டும் என்று எல்லோரிடமும் கூறிக்கொண்டிருந்தான்.

 சோழப்பேரரசுக்கும் சேந்தமங்கலப் போரில் முடிவுரை எழுதினான், ஆனால் அன்று கோப்பெருஞ்சிங்கன் எண்ணியிருக்க மாட்டான் சோழ மாயை இருபதாம் நூற்றாண்டிலும் கூட வரலாற்று ஆசிரியர்கள் கண்களை மறைத்திருக்குமென்று. கோப்பெருஞ்சிங்கன் கி.பி. 1229 முதல் 1278 வரை தென்னாற்காடு மாவட்டம் சேந்தமங்கலத்திலிருந்து அரசாண்டான்(ர்)(வரலாற்று நூல்களில் அவன்,இவன் என்று பேசினாலும் நாம் இனி அவர் என்றே அழைப்போம்) சில வரலாற்று ஆசிரியர்கள் ஆரணி அருகிலிருக்கும் படைவீடு(படவேடு) தான் இவரின் தலை நகரம் என்கிறார்கள். வெகு சில ஆண்டுகள் மட்டுமே தமிழகத்தை ஆண்ட பல அரசர்களின் பெயர்கள் தெரிந்த அளவிற்கு கூட கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுகாலம் அரசாண்ட இவரின் பெயர் வெளியில் தெரியவில்லை. ஒன்பதாம் நூற்றாண்டில் பல்லவ ஆட்சி சோழர்களின் அரசியல் சித்து விளையாட்டால் சிதறுண்டபிறகு பல்லவ குலத் தோன்றல்கள் அரையன்,காடுவெட்டி, காடவர் என்ற பெயர்கள் கொண்டு சிற்றரசர்களாக சோழ அரசிற்கு கப்பம் கட்டி அரசாண்டனர், அப்படி வந்தவர் தான் கோப்பெருஞ்சிங்கன்,

வீரமும் விவேகமும் கொண்ட கோப்பெருஞ்சிங்கன் ஆண்ட காலத்தில் சோழப்பேரரசராக முதலில் மூன்றாம் இராசராசனும், பிறகு மூன்றாம் ராசேந்திரனும் ஆண்டனர், மதுரையில் பாண்டியர்கள் சோழப்பேரரசிலிருந்து விடுபட்டு சுதந்திர பேரரசாக உருவாகின்றனர், மேற்கே போசளர்(ஹொய்சாளர்)கள் பேரரசாக பலத்துடன் ஆட்சியிலிருக்கின்றனர் இதில் போசளர்களுக்கும் சோழர்களுக்கும் திருமண உறவு முறை உள்ளது. இந்த நிலையில் கோப்பெருஞ்சிங்கன் தன்னை சுதந்திர அரசனாக அறிவித்துக் கொள்கின்றார், சோழப்பேரரசுக்கு முடிவுரை எழுத பாண்டியர்கள் தெற்கேயும் காகதீயர்களும், கோப்பெருஞ்சிங்கனும் வடக்கேயும் முனைந்தனர், போசளர்கள் சோழர்களுக்கு ஆதரவாக இருந்தாலும் இந்த அரசியல் சித்து விளையாட்டின் நடுநாயகமாக இருந்தவர் கோப்பெருஞ்சிங்கன்.

பாண்டியர்களிடம் தோற்ற மூன்றாம் இராசராசன் போசளர்களோடு திருமண பந்தம் இருந்ததால் அவர்களின் உதவி கேட்கின்றார், சோழர் படை வடமேற்கு நோக்கி முன்னேற அதே சமயத்தில் போசளர்கள் அதன் மறுபுறத்திலிருந்து கோப்பெருஞ்சிங்கன்னனை தாக்க திட்டமிட்டனர், ஆனால் திட்டத்தில் ஏற்பட்ட சிறு குழப்பத்தால் தக்க சமயத்தில் போசளர் படை வந்து சேரவில்லை, அதை அறிந்த கோப்பெருஞ்சிங்கன் போசளர் படை வருவதற்கு முன்பே சோழப்பேரரசன் மூன்றாம் இராசராசனை கி.பி.1231ல் தெள்ளாறில் எதிர்கொண்டு போர் புரிந்து வெற்றி பெற்று சோழப்பேரரசனை சேந்தமங்களத்தில் சிறையிலடைத்தார். இதை சில வரலாற்று ஆசிரியர்கள் சோழமன்னன் தப்பியோடியபோது அவரை கைது செய்து சிறையிலடைத்ததாகவும் குறிப்பிடுகின்றனர். வட நாட்டு அரசர்களையும், இசுலாமிய அரசர்களையும் பிற நாட்டு அரசர்களையும் பார்க்கும் போது பொதுவாகவே தமிழக அரசர்கள் மிகுந்த கருணையுடன் இருந்துள்ளனர்.

பொதுவாகவே பெரிய அளவில் வாரிசுரிமைப்போர் தமிழகத்தில் நடந்தது என்றால் அது வீரபாண்டியனுக்கும் சுந்தரபாண்டியனுக்கும் கி.பி.1310ல் நடந்த ஒன்றே ஒன்றுதான், மேலும் போரில் தோல்வியுற்ற அரசர்களை மிகுந்த மரியாதையுடன் நடத்தினர், ஆனால் வட நாட்டு வரலாறிலும், இசுலாமிய அரசர்களும், இலங்கை மகாவம்ச வரலாறும் சீன வரலாறும் சொல்வது அரசுகட்டிலுக்காக சொந்த மகனையும், தாயையும், சகோதரனையும் கொடூரமாக கொன்றழித்தனர், அது மட்டுமின்றி தலைவேறு உடல்வேறாக கிடப்பவன் மட்டுமே பிரச்சினை தராத எதிரி என்று நம்பியதால் தோல்வியுற்ற மன்னர்களை உடனடியாக கொன்றழித்தனர்,

மேலும் எதிரிகளின் குழந்தைகள் 4 மாத கைக்குழந்தையாக இருந்தாலும் கூட கொல்வர் அல்லது கண்களை தோண்டி எடுப்பர். அதன்பின் போசளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையால் சோழமன்னனை விடுவித்தார் கோப்பெருஞ்சிங்கன், மீண்டும் சோழப்பேரரசிற்கு திரைசெலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் போசளர்களால் ஆனது, ஆனாலும் தன் முயற்சியை விடாமல் பெரம்பலூரில் போசளர்களுடன் போர் செய்து போசளர்களை துறத்தியடித்தது மட்டுமின்றி அவர்களின் மகளிரையும் சிறைபிடித்து சென்றார். சோழர், பாண்டியர், போசளர்களை பல போர்களில் தோற்கடித்து மூன்று பேரரசுகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கினார் தன் வாழ்நாள் முழுவதும் சுதந்திர போர்களிலேயே கழித்தாலும் நல்லாட்சி நல்கினார்,

அவர்காலத்தில் கலைகள் சிறந்து விளங்கின, சிதம்பரம் நடராசரின் மேல் அளவுகடந்த அன்பு கொண்டு சிதம்பரம் நடராசர் கோவிலின் தெற்கு கோபுரத்தை கட்டி எழுப்பினார், பல கோவில்களை கட்டியும், பல கோவில்களுக்கு கொடையும் வழங்கியதை கல்வெட்டுகளில் காணக்கிடைக்கின்றன.இவருக்கு இருபத்தியேழுக்கும் மேலானா பட்டப்பெயர்கள் உண்டு அவற்றில் சில பாண்டிய மண்டல தாபனசூத்ரதாரன், சகேளதர சுந்தரன், கர்ணாடலஷிமீலுண்டாகன், காடகுலதிலகன், பெண்ணான தீ நாதன், பரதமல்லன். பல கோவில்களை கட்டிய இவர் சில கோவில்களை இடித்தும் உள்ளார், சோழ நாட்டை போர் தொடுத்து வென்றபோது சோழ நாட்டில் சில கோவில்களை இடித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தொண்டைமண்டலம் முழுவதும், சோழமண்டலத்தின் பெரும் பகுதியும் இவரின் கட்டுப்பாட்டில் இருந்தன,தெற்கே தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து வடக்கே கோதாவரி ஆறு வரையான இடங்களில் இவரின் பல கல்வெட்டுகள் கிடைக்கின்றன. கி.பி.1255ல் மீண்டும் விதி கோப்பெருஞ்சிங்கனை பார்த்து மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வடிவில் சிரித்தது, சேந்தமங்கலம் பாண்டியர்களால் முற்றுகையிடப்பட்டு மீண்டும் வேற்றரசுக்கு அடிமையானார் கோப்பெருஞ்சிங்கன், பாண்டிய மன்னர்களின் வடக்கத்திய போர்முனைக்கு தன் படைகளை நல்கி பாண்டிய அரசுடன் ஒரு சமாதான போக்கையே இறுதி வரை கடைபிடித்தார். சரி இனி சில வரலாற்று ஆசிரியர்கள் இவர் மீது எழுப்பும் குற்றசாட்டை பார்ப்போம்.

முதல் குற்றசாட்டு சோழனுக்கு அடங்கிய சிற்றரசன் எப்படி சோழப்பேரரசனையே சிறையிலடைப்பான் இது துரோகமல்லவா? எது துரோகம்? தன்னை நம்பிய தன் மாமனார் எண்பத்திமூன்று வயது ஜாலாலுதின் கில்ஜி தம்மை வரவேற்க தனியாக வந்தவரை வெட்டிக்கொன்றாரே அலாவுதின் கில்ஜி அது வரலாற்றுத்துரோகம், தன்னை தத்தெடுத்து வளர்த்த தாய் மீனாட்சியை எதிர்த்து கலகம் செய்தானே விஜயகுமாரன் அது துரோகம் (சாண்டில்யன் அவர்கள் எழுதிய ராஜபேரிகை நாவலில் இந்த விஜயகுமாரன் தான் கதாநாயகன்) பல்லவ வழித்தோன்றல் தன் மூத்தோர்களின் பேரரசை நிறுவ முயன்றதா துரோகம்? சோழர்களிடம் அடிமைப்பட்டிருந்த தன் நாட்டை விடுவிக்க போர்புரிந்தது துரோகமென்றால் இந்த துரோக குற்றச்சாட்டு பாய வேண்டியது முதலில் சோழர்களின் மீது தான். பல்லவர்களுக்கு அடங்கிய சிற்றரசர்களாக இருந்தவர்கள் பாண்டிய பல்லவப் போரில் நடத்திய அரசியல் சதுரங்கத்தில் முதலில் பாண்டியர்களை பல்லவர்களுக்கு துணையாக நின்று வீழ்த்தி பிறகு பல்லவர்கள் ஒப்பந்தத்தை மீறிவிட்டார்கள் எனக் கூறி போர்தொடுத்து வீழ்த்தினார்களே!! (பல்லவர்களுக்கும் சோழர்களுக்குமிடையேயானது என்ன ஒப்பந்தம்? அதில் பல்லவர்கள் என்ன மீறினார்கள் என நான் படித்தவரையில் கிடைக்கவில்லை, யாரேனும் கிடைத்தால் கூறுங்கள்) அடுத்ததாக கோப்பெருஞ்சிங்கனை பற்றியும் அவரது அரைநூற்றாண்டு அரசைப்பற்றியும் சில வரிகள் மட்டுமே பல வரலாற்று புத்தகங்களில் காணக்கிடைக்கின்றது, அதில் பாதிக்கும் மேல் அவரின் மீதான எள்ளல்களாகவே இருக்கின்றன.

டாக்டர் கே.கே.பிள்ளை யின் தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் என்ற நூலிலிருந்து சில வரிகள்"சோழர்,பாண்டியர் போசளர் ஆகியவர்கள் அனைவரையுமே வென்று வாகைசூடியதாக விருதுகள் பல புனைந்து கொண்டான்பாண்டிய மண்டல தாபனசூத்ரதாரன், சகேளதர சுந்தரன், கர்ணாடலஷிமீலுண்டாகன், காடகுலதிலகன், பெண்ணான தீ நாதன் என்பன அவற்றுள் சிலவாம்"(வென்றது உண்மை தானே, வெல்லாமலா தஞ்சையிலிருந்து கோதாவரி வரை இவரின் கல்வெட்டுகள் கிடைக்கப்பெறுகின்றன? தெள்ளாறு, சேந்தமங்கலம், பெரம்பலூர் போர்களின் முடிவு கோப்பெருஞ்சிங்கனுக்கு தானே சாதகமாக இருந்தது.) "பல்லவர்கள் அல்லது காடுவெட்டி பரம்பரையில் தான் தோன்றியதாக பெருமை பிதற்றினான்" (பிதற்றினானா? பல்லவ குலம் ஒரே நாளில் வேரோடு அழிந்து போய்விட்டதா என்ன? இதைப்பற்றிய ஒரு பெரிய அத்தியாயமே முனைவர் பட்டத்திற்கான அந்த ஆராய்ச்சி நூலில் இருந்தது, மேலும் இவரின் கல்வெட்டுகள் பல்லவர் கல்வெட்டுகள் என்ற பிரிவின் கீழ்தானே வகைப்படுத்தப்பட்டுள்ளது) இது மட்டுமின்றி பல வரலாற்று நூல்களில் கோப்பெருஞ்சிங்கன் அவருக்கு அவரே பட்டப்பெயர்கள் வைத்துக்கொண்டதாகவும் எள்ளல் தொனிக்கும் படி எழுதியுள்ளனர், இவருக்கு பட்டபெயர் விடயத்தில் எள்ளலாக எழுதினால் இராசராசன் முதல் பல அரசர்கள் பட்டப்பெயர்கள் வைத்திருந்ததை எப்படி எழுதுவது? அரைநூற்றாண்டுகள் தமிழக அரசியலின் மையமாக இருந்த கோப்பெருஞ்சிங்கன் பற்றிய பதிவுகளும் இடமும் வரலாற்று நூல்களில் மிகச்சிலவே. ஏன் இப்படி? சில வரலாற்று ஆசிரியர்களுக்கும் சோழ மாயையா?

மேற்கோள் நூல்கள்:

தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் - டாக்டர் கே.கே.பிள்ளை தாய்நிலவரலாறு - பேராசிரியர் கோ.தங்கவேலு
தமிழகவரலாறு - சென்னை பல்கலைகழக இளங்கலை வரலாற்று பாடநூல்

காடவராயர் -- என்ற வன்னிய அரச குலத்தினர் #காடவர் #காடுவெட்டி

காடவராயர் -- என்ற வன்னிய அரச குலத்தினர்
****************************************************
                                        [ http://ekuruvi.com/இசைக்-குதிரைகள்/ ]

காடவராயர் ----  காடவர் + அரையர் === காடவ அரசர்கள் என பொருள்படும் காடவரயர்கள் காடவர் என்ற அரசகுலத்தை சேர்ந்தவர்கள் ...
இவர்கள் வன்னியர் குலத்தினர் .

காடவர்கள் எனப்படுவோர் கிபி 13, 14-ம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவின் பல்லவர்களோடு இணைந்து படையாட்சிகள் பகுதிகளான தென்னாற்காடு கடலூர் மற்றும் வட ஆற்காட்டின் சில பகுதிகளை ஆண்ட வன்னிய அரச
குலத்தவர்கள் ஆவர்.

இவர்கள் முதலாம் கோப்பெருஞ்சிம்மன், இரண்டாம் கோப்பெருஞ்சிம்மன் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் காடவர்களின் வல்லமை தழைத்தோங்கி விளங்கியது. இவர்கள், மூன்றாம் இராசராசன், மூன்றாம் இராசேந்திரன் ஆகியோரின் தலைமையில் பெருமை மங்கத் துவங்கியிருந்த சோழப் பேரரசையே எதிர்க்கும் வல்லமைப் பெற்றிருந்தார்கள். வட ஆற்காட்டிலும், தென் ஆற்காட்டிலும், செங்கற்பட்டிலும் இவ்விரு மன்னர்கள் பல கல்வெட்டுக்களை விட்டுச் சென்றுள்ளனர்.

தோற்றம்:
*************

மகேந்திரவர்மன் I, நரசிம்மவர்மன் I, நரசிம்மவர்மன் II ஆகியோரின் பட்டப் பெயர்களுள் ஒன்றாகக் காடவன் என்பதுக் காணப்படுகிறது. எழுத்தாசிரியர்கள், பல்லவர்களைக் காடவர், தொண்டையார், காடுவெட்டி என்ற பெயர்களால் குறிப்பிடுவதைப் பல்வேறு நூல்களில் காணலாம். காடவர்களுக்கும் பல்லவர்களுக்கும் உள்ள உறவு குறித்து காஞ்சிபுரத்தில் கிடைத்த கல்வெட்டுகளில் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. சிம்மவிஷ்ணுவின் நந்திவர்மன் II  "காடவர்களின் குலப்பெருமையை உயர்த்தப் பிறந்தவன்" என்றுப் போற்றப்பட்டான். சகோதரன் பீமவர்மன்
வழி வந்த மன்னர்களே இந்தக் காடவர்கள்.

காடவராயர் ----  காடவர் + அரையர் === காடவ அரசர்கள் என பொருள்படும் காடவரயர்கள் காடவர் என்ற அரசகுலத்தை சேர்ந்தவர்கள் ...

இவர்கள் வன்னியர்  குலத்தினர், வன்னியர் குலத்தில் இன்றும் காடவராயர் வம்சத்தை சேர்ந்தவர்கள் வாழ்ந்துவருகிறார்கள் இவர்கள் பல்லவர்களின் கிளை குலத்தினர்.இவர்களை போன்று தொண்டைமான் அரசர்களும் பல்லவர் குலத்தினர்... இந்த பல்லவர்களுக்கு பல பெயர்கள் உண்டு...,அவற்றில்
பல்லவதரையர்
பல்லவநாடர்
பல்லவர்.
காடவராயர்
காடுவெட்டி,
காடுவெட்டியார்.
தொண்டையர்
தொண்டைப்பிரியர்,
தொண்டாப்பிரியர்
தொண்டைமான்,
தொண்டைமார்
தொண்டைமான் கிளையார்
தொண்டையர்
பல்லவராயர் 

போன்றவை இன்றும் வன்னியர் குலத்தில் கிளை குடும்பங்களுடைய பெயர்களாக பட்ட பெயர்களாக உள்ளன.அதற்கான ஆதாரம்  சென்னை , காஞ்சிபுரம், வடஆற்காடு, வேலூர்,திருவண்ணாமலை போன்ற பல பல்லவ மன்னர்களின் பகுதிகளில் வாழும் வன்னிய பெருங்குடி மக்களும், அங்குள்ள கோவில்களின் கல்வெட்டுகளுமே... பல்லவ குலத்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் வன்னியர்கள் என்பதை உலகம் நன்கறியும்..

சோழர்களின் கீழ் குறுநில மன்னர்களாக இருந்த காடவர்களின் ஆதிக்கம் குலோத்துங்க சோழன் III காலத்தில் அதிகரிக்கத் தொடங்கியது. காடவக் குறுநில மன்னர்கள் குறித்த வரலாற்றுச் செய்திகள் அதிகம் கிடைக்கவில்லை. முதலாம் கோப்பெருஞ்சிம்மன், 1186-ம் ஆண்டுக் காலத்தில் கூடலூரை ஆண்ட வீரசேகரனின் வழிவந்த மணவாளப்பெருமாளின் மகனாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.
சோழநாட்டுப் பெண்ணை மணம் புரிந்திருந்த முதலாம் கோப்பெருஞ்சிம்மன், மூன்றாம் குலோத்துங்கனின் அவையில் அதிகாரியாக இருந்தான். 1216-ல் பாண்டியர்கள் சோழ நாட்டின் மீது படையெடுத்தபோது முதலாம் கோப்பெருஞ்சிம்மன் சேந்தமங்கலத்தில் ஒளிந்துக்கொண்டு தன் வலிமையைப் பெருக்கிக் கொண்டான். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டுக் காடவர்கள் தங்கள் ஆதிக்கத்தை சிறிது சிறிதாக அதிகரித்து வந்தனர். இறுதியில், இலங்கை மன்னன் இரண்டாம் பராக்கிரம பாகூவின் உதவியுடன் மூன்றாம் இராசராச சோழனைத் தோற்கடித்துச் சிறைப்படுத்தினான். முதலாம் கோப்பெருஞ்சிம்மனின் மகன் இரண்டாம் கோப்பெருஞ்சிம்மனின் ஆட்சிக் காலத்தில் காடவர்களின் அரசு மேலும் விரிவடைந்தது. கடைசி சோழ மன்னனான மூன்றாம் இராசேந்திரன் இரண்டாம் கோப்பெருஞ்சிம்மனின் உதவியுடந்தான் அறியணை ஏறினான். அவர்களுடைய உறவு பகையும் நட்பும் கலந்த ஓர் உறவாக விளங்கியது.

சமயப் பணி
**************
காடவ மன்னர்கள் கோயில்களுக்குக் கொடைகளை வாரி வழங்கினர். பல புதியக் கோயில்கள், சிற்றூர்கள், சத்திரங்கள், சாலைகள் ஆகியவற்றைத் தோற்றுவித்தனர். ஆளப்பிறந்தீசுவரம் உடையார், அழகியப் பல்லவந்தோப்பு, அழகிய பல்லவன் சந்தி, கோப்பெருஞ்சிங்கன் தெரு போன்ற இடங்கள் அவற்றுக்குச் சான்றாக இன்றும் விளங்குகின்றன. சேந்தமங்கலத்தில் காணப்படும் கோட்டைச் சிதிலங்கள் சிறிதுக் காலமேத் தழைத்தோங்கியக் காடவர்களின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றன.

முதலாம் கோப்பெருஞ்சிங்கன் மூன்றாம் இராஜராஜசோழன் காலத்தில் வாழ்ந்த ஒரு குறுநில மன்னன். காடவர் குலத்தைச் சேர்ந்தவன். இவன் கிட்டத்தட்ட கிபி 1216 முதல் 1242 வரை அரசாண்டவன். ஹொய்சாள தண்டநாதர்களின் படையெடுப்பை பற்றி விவரமாகத் தெரிவிக்கும் திருவேந்திபுரம் கல்வெட்டு இராஜராஜனைத் தாக்கி சிறைப்பிடித்து பிறகு விடுதலை செய்த காடவச் சிற்றரசன், புகழ் பெற்ற கோப்பெருஞ்சிங்கனே என்று தெரிவிக்கிறது. (சமஸ்கிருதத்தில் இவன் பெயர் மஹராஸ சிம்ம எனப்படும்.) இந்த காலப்பகுதியின் வரலாற்றில் கோப்பெருஞ்சிங்கனுக்கு நிறைந்த இடம் உண்டு, தமிழ்நாட்டிலும் கன்னநாட்டிலும் கிடைக்கும் ஏனைய கல்வெட்டுக்களும் இந்தச் செய்திகளை உறுதிபடுத்துகின்றன.

இராஜராஜனின் 14-ம் ஆட்சி ஆண்டில் (கி.பி 1230) விருத்தாசலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டிலிருந்து காடவச் சிற்றரசர்கள் இன்னும் சோழரின் மேலாதிக்கத்தை ஏற்று வந்தனர் என்றும் இவர்களுள் கோப்பெருஞ்சிங்கன், தக்க வயது அடைந்ததோடு, முக்கியமானவனாக விளங்கினான் என்றும் தெரிவிக்கிறது. கோப்பெருஞ்சிங்கன் சோழ சக்கரவர்த்தியை சேந்தமங்கலத்தில் சிறைப்படுத்தியதோடு விஷ்ணு கோயில்கள் உட்பட எல்லாக் கோயில்களையும் கொள்ளையடிக்கும் படியும் ஏற்பாடு செய்தான். ஹொய்சாளர்கள் வைணவத்தில் அழுத்தமான தீவிரமான பற்றுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மன்னன் நரசிம்மன் தன் தலைநகரான துவார சமுத்திரத்திலிருந்து புறப்பட்டதாயும் சோழர்களை மீண்டும் நிலைநாட்டியவன் என்று பெயர் தனக்கு ஏற்படும் வரை போர் முழக்கம் செய்ததாயும் ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவனுடன் ஏற்பட்ட போரினால் கோப்பெருஞ்சிங்கன் சோழ சக்கரவர்த்தியை விடுதலை செய்து அவனுடைய சிம்மாதனத்தில் அமரச் செய்வதாக நரசிம்மனின் தளபதிகளுக்கு அறிவித்தான்.

தஞ்சை மாவட்டம் நீடுரைச் சுற்றிய பகுதி கோப்பெருஞ்சிங்கன் என்ற அழகிய சீயனால் ஆளப்பெற்றதாய் குறிப்பிடுகிறது. கோப்பெருஞ்சிங்கனின் வீரம் வெவ்வேறுவகையான ஜந்து செய்யுட்களில் பாராட்டப்படுகிறது. கோப்பெருஞ்சிங்கனுக்கு அவனி நாராயண நிருபதுங்கன், தொண்டைக்கும் மல்லைக்கும் மன்னன் என்றெல்லாம் பட்டங்கள் இருந்திருக்கிறது. கோப்பெருஞ்சிங்கனும் ஹொய்சாளர்களும் தொடர்ந்து போரிட்டுக்கொண்டிருந்தனர் என்பது கி.பி. 1236ல் துன்முகி ஆண்டில் காடவனுக்கு விரோதமான ஒரு படையெடுப்பில் வீர சோமேசுவரன் மங்கலத்தில் தங்கினான் என்று அறியப்படும் ஒரு குறிப்பால் தெளிவாகத் தெரிகிறது.

உசாத்துணை
http://ta.wikipedia.org/wiki/காடவர்
http://www.whatisindia.com/inscriptions/
Nilakanta Sastri, K.A. (1955). A History of South India, OUP, New Delhi (Reprinted 2002).

Tuesday, 17 September 2013

செப்டம்பர் 17 - சமூகநீதி நாள் - ஈ.வே.ரா

செப்டம்பர் 17 - சமூகநீதி நாள் - ஈ.வே.ரா
====================================
 
 "எப்போது ஒருவனுக்கு, அவனுக்கு என்று ஒரு மதம், ஒரு சாதி, தனி வகுப்பு என்பதாகப் பிரிக்கப்பட்டதோ, பின்பு - அவன் தனது மதம், சாதி, வகுப்புக்கு என்று உரிமை கேட்பதில் என்ன தப்பிதமோ, அயோக்கியத் தனமோ இருக்கமுடியும்?

வகுப்பையும், மதத்தையும், சாதியையும் ஒருபுறம் காப்பாற்றிக் கொண்டு - மற்றொரு புறத்தில் சாதி, மத, வகுப்புப் பிரதிநிதித்துவம் கேட்பதை அயோக்கியத்தனம் என்று சொன்னால், அப்படிச் சொல்வது ஆயிரம் மடங்கு அயோக்கியத்தனமும், இரண்டாயிரம் மடங்கு இழிதன்மையும், வஞ்சகத் தன்மையும் துரோகத் தன்மையும் ஆகாதா என்பதோடு இது தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கும், வாழ்வுக்கும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கின்ற கீழ்மக்கள் தன்மையல்லவா அது?"

...'வயிற்றுப் பிழைப்புக்கு எச்சில் இலை பொறுக்கும் இழி தன்மை' என்று ஏன் சொல்லக்கூடாது? தன்பங்கைத் தனக்குக் கொடு என்று கேட்டவுடன் கொடுக்கமறுத்த குடும்பங்கள் எல்லாம் நாசமுற்றே இருக்கின்றன. ஆகவே, எந்த மத, சாதி, வகுப்பாருடைய பங்கையானாலும் மறுத்து ஏமாற்றப் பார்த்தால் கண்டிப்பாக அந்த நாடு கேடுறுவது திண்ணம்"

- தந்தை பெரியார் (8.11.1931 குடிஅரசு தலையங்கம்)

அனைத்து சாதியினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கேற்ப இட ஒதுக்கீடு கேட்டு உயிர்த்தியாகம் செய்த 21 வன்னிய வீரத்தியாகிகளுக்கு "வீரவணக்கம்.."

Friday, 3 May 2013

வன்னியர் புராணம்



வன்னிய புராணம்

வன்னிய புராணம் என்பது ஸ்ரீ வீர உருத்ர வன்னிய மகாராசாவின் தோற்றத்தைப் பற்றி கூறும் நூல். இந்நூல் சுந்தர பாண்டிய மன்னரின் முன்னிலையில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1216-1238 இது எழுதப்பட்டது வடமொழியில் எழுதப்பட்ட நூலான “அக்னி” அல்லது “அக்னேய புராணத்தில்“ இருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. அக்னி புராணம் இந்து மதத்தின் 18 புராணங்களில் ஒன்றாகும். இந்த புராணத்தில் வரும் செய்திகள் சீர்காழியின் அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவிலின் கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ளன. வீர உருத்ர வன்னிய மகாராஜா, சம்பு முனிவர் நடத்திய வேள்வியில் பிறந்ததைப் பற்றி கூறுவதால் இந்நூல் சம்பு மைந்தர் காப்பியம் என்றும் வன்னியர் புராணம் என்றும் அழைக்க பெற்றது. வன்னி என்றால் அக்னி எனப் பொருள்படும். இந்த உருத்ர வன்னியரின் வழி வந்தவர்கள் வன்னியர் என்றழைக்கப்படுகின்றனர்.


தூர்வாச முனிவருக்கும் கஜமுகிக்கும் இரண்டு அசுர குழந்தைகள் பிறந்தனர். அவர்களின் பெயர் "வில்வலன்" மற்றும் "வாதாபி". இவர்களின் தாயாரான கஜமுகி என்பவள் முருகப்பெருமானால் வதம் செய்யப்பட்ட சூரபத்மனின் இளைய தங்கை ஆவாள்.
வில்வலனும் வாதாபியும் அகத்திய முனிவரை துன்புறுத்த ஆரம்பித்தனர். இதனால் கோபம் அடைந்த அகத்தியர் வில்வலனை விழுங்கி விட்டார். உடனே வாதாபி சிவனை நோக்கி தவம் இருந்து பல சக்திகளையும் பெற்றான். அந்த வலிமையின் மூலம், தெற்கு கடற்கரையின் மையப் பகுதியில் அமைந்திருந்த ரத்னபுரியை அரசாள ஆரம்பித்தான். பின்னர் மாயனின் மகளான சொக்க கன்னியை மனந்தான். வாதபி செய்யும் அனைத்து காரியங்களுக்கும் அசுர குருவான சுக்ராசாரியர் துணை இருந்தார். பின்னர் வாதாபி தேவர்களை மிகவும் துன்புறுத்தத் தொடங்கினார். இதை கண்ட நாரதர், சிவபெருமானிடம் தேவர்களின் இன்னல்களைக் கூறினார். அதே சமயம் தேவர்களை காக்க சம்பு முனிவர், சிவபெருமானை நோக்கி வேள்வி ஒன்றை நடத்தினார். அப்பொழுது சம்பு முனிக்கு சிவபெருமான் அருள் பாவித்து, தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஒரு நெருப்புத்(வன்னி) துளியை அந்த வேள்வியில் விழச் செய்தார். விழுந்த அந்த நெருப்பிலிருந்து வெள்ளைக் குதிரையில் கையில் வாளுடனும், தலையில் கிரீடத்துடனும் ஒரு வீரன் வந்தான். அவன் “ஸ்ரீ வீர உருத்ர வன்னிய மஹாராஜா” என்றழைக்கப்பட்டான்.
சிவபெருமானும், தாய் பார்வதியும் தேவேந்திரனின் இரண்டாம் மகளான மந்திர மாலையை திருமணம் செய்து வைத்தார்கள். மந்திர மாலை என்பவள் முருகப்பெருமானின் மனைவியான தெய்வயானியின் தங்கையாவாள். இவர்களுக்கு நான்கு வீர ஆண் மகன்கள் பிறந்தார்கள். அவர்களின் பெயர் “கிருஷ்ண வன்னியர், பிரம்ம வன்னியர், அக்னி வன்னியர், சம்பு வன்னியர்“ என்பனவாகும். இவர்களுக்கு காந்தா(சுஷீலா) என்னும் துறவியின் நான்கு மகள்களையும் திருமணம் செய்தார்கள். அவர்களின் பெயர் “இந்திராணி , நாரணி ,சுந்தரி ,சுமங்கலி ” என்பனவாகும்.

அசுரனுடன் போர்

சிவபெருமானின் அறிவுரைப்படி அசுரன் வாதாபியை வதம் செய்ய உருத்ர வன்னியர், சிவபெருமான் அளித்த தம் படையுடன் தெற்கு நோக்கி சென்றார். அங்கே உள்ள துர்க்கையின் கோவிலுக்கு சென்று, போரில் தமக்கு துணையாக இருக்குமாறு வணங்கினார். அதற்கு ஆசி தரும் விதமாக, துர்க்கையின் பூதப் படையும் வன்னியருடன் வந்தது. அந்தப் படையையும் அழைத்துகொண்டு ருத்ர வன்னியர் கடற்கரையை நெருங்கும் போது, கடல் தானாக வழி விட்டது. அப்பொழுது அவர்களுடன் சென்ற ஒரு நாயால், அந்த கடற்கரையை தாண்ட இயலவில்லை. அதனால் அந்த நாய் மீண்டும் வன்னியரின் அரண்மனைக்கே திரும்பியது .
உருத்ர வன்னியரும் அவரது படையும் ரத்னா புரியை அடைந்த உடன், அசுரன் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு தர எண்ணினார் வன்னியர். நாரதரை அசுரன் வாதாபியுடன் சமாதானம் பேச அனுப்பினார். ஆனால் அது தோல்வியிலே முடிந்தது. அதன் விளைவு, வன்னியர் படைக்கும் அசர படைக்கும் மிகப்பெரிய போர் உருவாயிற்று. அசுரர்களின் குலதெய்வமான காளி அம்மன், அசுரர்களுக்கு துணையாக இருந்ததால் மிக உக்கிரமாக நடந்த அந்தப் போரின் முடிவில், ருத்ர வன்னியரின் கையால் அசுரன் வாதாபி கொல்லப்பட்டான். பெண்கள் உட்பட அனைத்து அசுரர்களும், வன்னியர் படையால் வதம் செய்யப்பட்டனர் . இருப்பினும் சுக்ராசாரியாரின் யோசனைப்படி, நான்கு அசுரப் பெண்கள் மட்டும் மனித வடிவில் இருந்தனர். இவர்களை கண்ட வன்னியர்கள், இந்த பெண்கள் மனித குலத்தவர்கள் என்று நினைத்து வன்னியர்கள், அவர்களை வதம் செய்யாமல் தங்களோடு தம் அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர்.
போர் முழுமையாக முடிந்தவுடன், துர்க்கையை தரிசித்து விட்டு ருத்ர வன்னியரும் அவரது படையும் தமது இருப்பிடத்திற்கு வந்தனர். தம் இருப்பிடத்திற்கு வந்த உருத்ர வன்னியர் அதிர்ச்சிக்கு உள்ளானார். கடலைத் தாண்ட முடியாமல் வீட்டிற்கு வந்த நாயைக் கண்ட உருத்ர வன்னியரின் மருமகள்கள், போரில் வன்னியர் படை வீழ்ந்தது என நினைத்து தங்கள் கணவர்மார்களும் மடிந்திருப்பர் என்று நினைத்தும் தீயை மூட்டி அதில் உடன்கட்டை ஏறித் தங்கள் உயிரை மாய்த்து கொண்டனர். பிறகு உருத்ர வன்னியரின் நான்கு மகன்களும், தாங்கள் அழைத்து வந்த மனித உருவில் இருந்த அந்த நான்கு அசுர பெண்களையும் காந்தர்வ திருமணம் செய்து கொண்டு, அவர்களோடு வாழ ஆரம்பித்தனர்.

வன்னியர்கள் ஆளும் நிலப்பகுதி

சிவபெருமானும், நாராயணனும் உருத்ர வன்னியரிடம் “சம்பு பகுதியை” ஆட்சி செய்யுமாறு கூறினர். அதுபோல வடக்கே “பாலாறு” வரை பிரம்ம வன்னியரிடமும், ”பெண்ணையாறு” வரை கிருஷ்ண வன்னியரிடமும், அங்கிருந்து வடக்கே “காவேரி” வரை சம்பு வன்னியரிடமும், தென்மேற்கு பகுதியை அக்னி வன்னியரிடமும் ஆட்சி செய்யுமாறு கூறினர். அதன் பிறகு, உருத்ர வன்னியர் மற்றொரு மகனை பெற்றார். அவர் பெயர் “சந்திர சேகர மகாராஜன்”. உருத்ர வன்னியர் தம் ஆட்சி பொறுப்பைத் தமது மகன் சந்திர சேகர மகாராஜனிடம் கொடுத்து விட்டு, தேவேந்திரனின் அழைப்பை ஏற்று இந்திரலோகத்திற்குச் சென்றார்.

மக்கள் பண்பாட்டில் வன்னிய புராணம்

வாதாபி சூரனை அழிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்ட வன்னிய புராணம் மறுபுறம் வன்னியர்களிடையே கதையாக பரவியிருந்தது. வன்னியர்களின் தலைவன் வீர வன்னிய ராசன் வாதாபியை அழிப்பதற்காக சிவனால் தோற்றுவிக்கப்பட்டவர். வாதாபி அரக்கனை அழிக்கப் புறப்படும்போது அவருடைய மனைவி மந்திரமாலா போரின் விளைவு என்னவாகுமோ என கவலைப்படுகிறாள். அதற்கு வன்னியராசன் "என்னுடன் நாய் வருகிறது. நான் போரில் இறந்தால் நாய் திரும்பிவரும், வீட்டில் ஏற்றப்பட்ட காமாட்சி விளக்கு அணையும், மல்லிகைப் பூ வாடும்" என்று சொல்லிவிட்டு செல்கிறார். வன்னியராசன் செல்லும் வழியில் ஆறு குறுக்கிடுகிறது. அவர் ஆற்றைக் கடந்து சென்றுவிடுகிறார். ஆனால் நாய் கடக்க முடியாமல் திரும்பி விடுகிறது. நாயைப் பார்த்த மந்திரமாலா கணவர் இறந்துவிட்டதாகக் கருதி தாலியை அறுத்துவிடுகிறாள். வீட்டில் விளக்கு அணையாததையும், மலர் வாடாததையும் அவள் கவனிக்கவில்லை.
போரில் வெற்றிபெற்று திரும்பும் வீரவன்னிய ராசன் தன் மனைவி விதவைக் கோலத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான். நடந்ததை அறிந்து மீண்டும் தாலி கட்டுகிறான். இப்படி தாலியை அறுத்துக்கட்டக்கூடிய பழக்கம் வன்னியர்களிடையே இருக்கிறது. இன்றைக்கும் ஆடிப்பெருக்கு அன்று தாலியை அறுத்துக்கட்டும் சடங்கை பல வன்னியர்கள் செய்கின்றனர். இக்கதை ஒரு சில மாற்றங்களுடன் வன்னியக் கூத்து என்ற பெயரில் கிராமப்புறப்பகுதிகளில் நடைபெற்று வருகிறது.



பல்லவரும் வன்னியரும்

தமிழ்நாட்டின் மக்கள் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடிக்கும் ஒரு நிகழ்வு சாளுக்கிய மன்னன் புலிகேசிக்கும் பல்லவர்களுக்கும் நடந்த போராகும். பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் புலிகேசியால் தோற்கடிக்கப்பட்டு காஞ்சியிலிருந்து துரத்தப்பட்டான். இதற்குப் பழிவாங்க சபதமேற்ற அவனது மகன் நரசிம்மவர்மன், மக்களுக்கு போர்க்குணம் ஏற்படச் செய்யவேண்டும் என்பதற்காக பாரதம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினான் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். இதன் பலனாக கி.பி.642 ஆம் ஆண்டில் புலிகேசியின் பாதாமி நகர் தாக்கப்பட்டு அவன் தோற்கடிக்கப்பட்டான் (கருநாடக மாநிலத்தில் உள்ள நகரம் - தமிழில் வாதாபி). நரசிம்மவர்மனது படைவீரர்களாக இருந்தவர்கள் வன்னியர்கள். பாதாமியை வென்ற படைக்கு தலைமையேற்ற பரஞ்சோதி என்கிற சிறுதொண்டர் வன்னியர் குலத்தைச் சேர்ந்தவர். இவரைப்பற்றி பெரிய புராணம் குறிப்பிடுகிறது. இக்கதையே வாய்மொழியாக வழங்கப்பட்டு பின்பு வன்னிய புராணம் என்ற பெயரில் வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.

Tuesday, 30 April 2013

கௌண்டர் பட்டம் பற்றிய ஒரு ஆய்வு

கௌண்டர் பட்டம் பற்றிய ஒரு ஆய்வு:
காமிண்டன் என்ற சொல்லே  பிற்காலத்தில் கௌண்டர் என திரிந்தது என்பது அனைவரும் அறிந்தது . இன்று தமிழகத்தில் பல சாதிகள் இந்த பட்டம் கொண்டு அழைக்க படுகிறார்கள் . உதாரணமாக கொங்கு வெள்ளாளர்கள் “கொங்கு வெள்ளாள கௌண்டர்” என்று  (கோவை, நாமக்கல் ,ஈரோடு ) போன்ற இடங்களிலும், வன்னியர் குல க்ஷத்ரியர்   தமிழ்நாடு முழுதும் 
கொங்கு நிலத்தையும் சேர்த்து கௌண்டர் பட்டம் கொண்டுள்ளனர்

உண்மையில் இந்த பட்டம்  எந்த சாதி எந்த காலம் முதல் இந்த பட்டங்களை முறையே பெற்று உபயோகிக்கிறது என்பதை பற்றிய கட்டுரை இது .
பொதுவாக தலைமை பொறுப்பை நாயகர், படையாட்சி,  கௌண்டர், தேவர் என்ற பட்டங்கள்  கௌரவ ரீதியாகவும் ,தலைமை பொறுப்பை குறிப்பதாகவும் இடத்திர்க்கேர்ப்ப அழைக்கபடுகிறது. அதுபோல கொங்கு நிலத்தில் தலைமை பொறுப்பை  கௌண்டர் என்று அழைக்க படுகிறது .

இப்போது நமக்கு கிடைத்த கல்வெட்டு ஆதாரம் படி ,இவர்களுக்கு காமிண்டன் (கௌண்டர் ) பட்டம் வந்த காலத்தை பார்ப்போம் .
==================================================================

வன்னிய கௌண்டர் (அல்லது ) பள்ளி காமிண்டன் : 

((வன்னிய கௌண்டர்கள் பற்றிய செய்திகள் எனக்கு கிடைக்க வழி செய்த அண்ணல் கண்டர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.))
தமிழகத்தில் கிடைத்த கல்வெட்டு ஆதாரம் படி காமிண்டன்(கௌண்டர் ) என்னும் பட்டம் முதலில் பத்தாம்  நூற்றாண்டில்தான் கிடைத்திருக்கிறது . அதும் சோழ மன்னர்கள் வன்னியர்களுக்கு கொடுத்த பட்டமாக உள்ளது .

1. ஆயிரம் ஆண்டு ஏரி கல்வெட்டு : 
     தருமப்புரி பகுதியில் கிடைக்கும் நடுக்கற்களில் “காமிண்டன் ” என்ற சொல் பயின்று வர         காண்கிறோம் .

காமிண்டன் என்ற சொல் வன்னியர்கலையே குறிக்கிறது , இதற்க்கு             ஏராளமான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன . இவற்றில் ஒரு கல்வெட்டு உலகத் தமிழாயிச்சி நிறுவனம் வெளியிட்ட “தமிழில் ஆவணங்கள் ” என்ற நூலில் முனைவர் .கொடுமுடி சண்முகன் அவர்கள் எழுதிய “ஏரிகளில் கள் ஆவணங்கள் “ என்ற கட்டுரையில் (பக்கம் 37) வெளியிடப்பட்டுள்ளது .
அதனை அப்படியே கீழே கொடுத்துள்ளோம் .


ஆயிரம் ஆண்டு ஏரி :
ஓமலூர் –தருமபுரி சாலையில் பூசாரிப்பட்டி அருகில் உள்ளது . தாச சமுத்திரம் எரி , பேரரசன் ராசராசனின் பதினொன்றாம் ஆட்சி ஆண்டில் இந்த எரி கட்டப்பட்டது . கி.பி .996 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த எரி தற்போது ஆயிரம் ஆண்டைக் கடந்து விட்டது .
ஏரியை அமைத்தவர் கச்சிப் பள்ளி காமிண்டன் (வன்னியர் ) பெங்கிலன் அமைந்தான் களி . அவனும் அவன் தம்பியும் கூட இருந்து வேலை செய்துள்ளனர் . இந்த ஏரியை அழியாமல் காப்பவர்களில் “கால் என் தலைமேல் ” என்கிறான் . இதற்க்கு அவர்களும் பாதம் பணிவேன் என்று பொருள்படும் .

“ஸ்வஸ்தி ஸ்ரீ
ராஜ ராஜ சோழ தேவற்கு
திருவேழுத்திட்டுச் செல்லா நின்ற
திருனல்லியாண்டு பதிநொற்றாவது
வடபூவாணிய நாட்டு
கச்சிப் பள்ளிக் காமிண்டந்
பொங்கிலந் அமன்தாந் களியும்
எந்தம்பி................ம்
இவ்விருவே மெங்கள் கைய்யால்
மணலொழிக்கி இவ்வேரி கட்டிநோம்
இந்த நம் அழிவு படாமற் காத்தாந்
காலெந் தலை மேலென “
என்று முனைவர் . கொடுமுடி சண்முகன் அவர்கள் தனது நூலில் குறித்துள்ளார் .
காமிண்டன் அதாவது கவுண்டன் என்ற பட்டப் பெயர் கொண்ட வன்னியர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முபே ஏரியை வெட்டி போது மக்களுக்கு நன்மை புரிந்துள்ளனர் .

2 .நடுக்கற்கள் :

காமிண்டன் என்ற பட்டப்பெயர் கொண்ட வன்னியரை பற்றி  இன்னொரு கல்வெட்டு , தருமபுரி மாவட்டம் குண்டூரப்பன் கொட்டாய் என்ற ஊரில்  உள்ள நடுகல் ஒன்றில் காணப்படுகிறது . கி.பி . 1045 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட இந்தக் கல்வெட்டில்

"பனை குளத்துப் பள்ளியில் பள்ளிகாரன் புளியக்காமுண்டன் மகன் வசவக்காமுண்டன்"

மகள் பெயர் அதில் காணப்படுகிறது .
தமிழ் நாடரசின் தொல்லியல் துரை வெளியிட்ட தருமபுரி மாவட்டக் கையேடு என்ற நூலில் (பக்கம் 176) இக்கல்வெட்டு செய்தி அதில் வெளியிடப் பட்டுள்ளது .

3.  கிருஷ்ணகிரி அருகே ஜகதாப் மேட்டூரில் காணப்பெறும் பலகைக் கல்லில்   உள்ள ஒரு               கல்வெட்டுச் செய்தியை ஆவணம் (இதழ்- 12 .ஜூலை 2001, பக்கம் 21), தொன்மைத் தடயம் (2003) ஆகிய நூல்கள் வெளியிட்டுள்ளன .
இக்கல்வெட்டு சோழ மன்னன் இரண்டாம் ராஜேந்திரனின் ஐந்தாம் ஆட்சியாண்டில் (கி.பி . 1059) வெட்டப்பட்டுள்ளது .

இதில்

“விஜயராஜேந்திர மண்டலத்துத் தகடூர் நாட்டுக்குக் கனக நாட்டுப் புள்ள மங்கலத்து அவனமச்சி பள்ளியான இவன் மகன் காமுண்டன் பாம்பு கடித்து செத்தான் . அது கண்டு அவனது மனவாட்டியும் , காமுண்டனின் தாயுமான விச்சக்கந் என்பாள் தீப்பாயிந்து உயிர் நீத்தாள் ”

என்ற செய்தி இடம் பெற்றுள்ளது . அவளது நினைவாக இந்த வீரக்கல் நடப்பட்டுள்ளது.

4. வன்னியர்களுக்கு நீண்ட நெடுங்காலமாக கவுண்டர் பட்டம் உண்டு என்பதார்க்கு மேலும் பல  ஆதாரங்கள் உள்ளன .

இது தொடர்பாக தமிழ்நாடரசின் தொல்லியல் துறையில் பணியாற்றும் கல்வெட்டாய்வாளர் முனைவர் , சொ .சாந்தலிங்கம் அவர்கள் “வரலாற்றில் தகடூர் ” என்ற நூலில் (பக்கம் 192-193) கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார் .
“கி.பி 11-13 ஆம் நூற்றாண்டளவில் பல இடங்களில் நாட்டுக் காமுண்டர்கலாகவும் , ஊர் முதலாளிகலாகவும் விளங்கியவர்கள் வன்னியர்களே .
இந்தப் பிரிவினரைப் பற்றிய குறிப்புக்கள் 11 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை தொடன்ர்து கிடைக்கின்றன . இவற்றில் இவர்கள் காமிண்டர் , காமுண்டர் , கவுண்டன் என திரிபு பெற்று வழங்கப்படுகின்றனர் . கி.பி. 15 ஆம் நூற்றாண்டிலேயே “கவுண்டர் ” எனத் தெளிவாக அழைக்கப்பட்டுள்ளனர் . இவர்களே பெரும்பான்மையும் நில உடைமையாலர்கலாகவும் வேளாண் தொழிலில் ஈடுப்பட்டவர்கலாகவும் இருக்கின்றனர் .”

கோவில் நிலக் கொடிகள் பற்றி இப்பகுதியில் கிடைக்கின்ற கல்வெட்டுகளில் 90 சதவிகிதம் பள்ளி கவுண்டர் கொடுத்தனவாகவே இருக்கின்றனர் .
ஒரு சான்று மட்டும் செட்டி இனத்தைச் சேர்ந்தவர் அளித்ததை கூறுகிறது என்று முனைவர் திரு .சொ .சாந்தலிங்கம் எழுதியுள்ளார்

5.செப்புப் பட்டயங்கள் :

வன்னியர்களுக்கு கவுண்டர் பட்டம் உண்டு எனபதற்கு செப்புப் பட்டய ஆதாரங்களும் இருக்கின்றன . கொங்கு வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்த புலவர் .செ .ராசு (மேனாள் பேராசிரியர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் )அவர்கள் , கி.பி .1595 ஆம் ஆண்டைச் சேர்ந்த பண்ணாட்டார் எனப்படும் வன்னியர் செப்பு பட்டயத்தை படித்துள்ளார் .

இதனை “வன்னியர் ” என்ற நூலில் தொல்லியல்துறையின் முன்னாள் இயக்குனர் திரு.நடன காசிநாதன் அவர்கள் வெளியிட்டுள்ளார் .

அதில் பல கவுண்டர்களின் பெயர்கள் இடம் பெறுகின்றன .

“சென்னியார் கவுண்டர் ,சீராம கவுண்டர், செங்கழுநீர் கவுண்டர், வேடிச்சி கவுண்டர், நமனாண்டி கவுண்டர், நாரீசர் கவுண்டர், அம்பாயிர கவுண்டர் ” என நூற்றுக்கும் மேற்ப்பட்ட கவுண்டர்களின் பெயர்கள் எந்த செப்புப் பட்டயத்தில் காணப்படுகின்றன . 

6.  கி.பி 1633 ஆம் ஆண்டைச் சேர்ந்த நெய்வேலி வன்னியர் செப்பேட்டை திரு.நடன காசினாதன் அவர்கள் ‘கல்வெட்டு ’
காலாண்டிதழ் எண் 22 இல் பதிப்பித்துள்ளார் .அதில் அழகாபுரம் மெயபோகராய கவுண்டர் ,
சேலம் முதலிக் கவுண்டர் ,அனதாரிப்பட்டி அனதாரிக் கவுண்டர் ,, அயோத்தியாப் பட்டினம் தெய்வராயக் கவுண்டர் , ஒலைப்புடையார் காங்கய குருக்கவுண்டர் , கந்தப்பம்பட்டி கந்தப்ப கவுண்டர் , சீரகப்பாடி நல்லரிசாக் கவுண்டர் , சென்னகிரி ஒட்டைநாழி பாரிசாக்கவுண்டர் , வீரபாண்டி முந்திச் சின்னாக் கவுண்டர் , பாலம்பட்டி வடமலை கவுண்டர் ,மல்லூர் மாணிக்க கவுண்டர் , அண்ணாமலைப் பட்டி சேர்வை முத்தாக் கவுண்டர் , பொன்பரப்பி பெரிய குப்ப கவுண்டர் ,அம்மாபாளையம் ஆட்டையாம்பட்டி ராயகவுண்டர் ,வெங்காப்பட்டி குழந்தை
கவுண்டர் ,வாழைக் குட்டைப்பட்டி பத்திரிக் கவுண்டர் ,அம்புக்கட்டி பாளையம்குட்டையாக் கவுண்டர் போன்ற நூற்றுக்கும் மேற்ப்பட்ட வன்னிய கவுண்டர்களின் பெயர்கள் இப்பட்டயத்தில் இடம் பெற்றுள்ளன .
இவை அனைத்தும் நெய்வேலி வன்னியர் செப்பேடு சொல்லும் பள்ளி கவுண்டர்கள்

7. மேலும் ஆ.சிங்காரவேல் முதலியார் எழுதிய அபிதான சிந்தாமணியில் (பக்கம் 375 )

கவுண்டர் என்ற சொல்லுக்கு –“பள்ளிகளுக்கும், சில இடங்களில் வெள்ளாளர்களுக்கும் பட்டப் பெயரை இருக்கிறது ” என்று கூறப்பட்டுள்ளது .

8. வன்னிய கவுண்டரும் சித்தாண்டபுரம் செப்பேடும் :"சித்தாண்டபுரம் செப்பேடு"
வன்னிய கவுண்டர்களின் வீரத்தையும்,துணிவையும் இச்செப்பேடு உணர்த்துகிறது.இதில்  உள்ள சில சுவையான சில பகுதிகள் உங்கள் பார்வைக்கு.                                                                                                                                                      "சிறுதலை பூண்டியிலிருந்து ஒலகளந்த கவுண்டனும் யேகாம்பிறி கவண்டனும் ரண்டு பேரும் மேர்க்கே யேரி வறச்சே சிங்கிரி பட்டி கணவாயிலே நூரு வேடராகிறவர்கள் வந்து மறிச்சிக் கொண்டபோது ஒலகளந்தா கவுண்டனும் யேகாம்பிரி கவுண்டனும் இவர்கள் ரண்டு பேரும் அவர்கள் மேல் சண்டைகள் செய்து அவர்களில் நாலு பேரை வெட்டித் துறத்திவிட்டு அப்போ ஆலம்பாடி வந்து சேந்து அந்தக் கோட்டையில் வீட கட்டிக்கொண்டு நிலையாயிறுந்தார்கள்.அப்போ ஆலம்பாடி கோட்டையிலிறுக்கப்பட்ட யிறுப்பாளிநாயக்கன் நீங்களாரென்று கேட்டான் நாங்கள் படையாச்சிகளென்று சொன்னார்கள் ஆனால் நம்பள் பக்கத்திலெ யிறுங்கோளென்று சேத்திக்கொண்டான்

"மற்றொரு பகுதி:

"உலகளந்தா கவண்டனும் ஏகம்பிரி கவண்டனும் ஆலம்பாடி நாட்டையாண்டு
கொண்டிருக்கும் காலத்தில் பெரியப்ப நாயக்கன்,சின்னப்ப நாயக்கன்,பாலப்ப
நாய்க்கன் இவர்கள் வந்து என்களுக்கு வர்த்தனை உங்கள் வீட்டுக்கு ரண்டு பணம்குடுக்கவேண்டுமென்று கேட்டார்கள்.அதுக்கவர்கள் நாங்கள் குடுக்குறதில்லை யென்றார்கள்.நாங்கள் விடுகுறதில்லை என்றார்கள் இவர்கள்.ஆடு மாட்டை கொள்ளை ஓட்டினார்கள் அவர்களில் பத்து வேடரை வெட்டிக் கொள்ளையே திருப்பிக்கொண்டார்கள்.செகதேவராயரண்டை போனார்கள்.பாலப்ப நாயக்கன் எங்கள் வர்த்தனையைக் கேட்டோம்
என்று சொன்னான்.ஏகாம்பிரி கவுண்டன் நாங்கள் வன்னிய வம்ஷம் அப்படி
கொடோமென்றோம்.எங்கள் ஆடுமாடெல்லம் கொள்ளையிட்டார்கள் நாங்கள் அவர்களை பத்துப்பேரை வெட்டி கொள்ளையை திறுப்பிக்கொண்டோமென்றான்.செகதேவராயர் வேடர் கையில் 100 பொன் அபுறாதமாக வாங்கிக்கொண்டு நீங்கள் சவுரியவான்களென்று மெச்சி உங்களுக்கு கென்னா வெகுமானம் வேணுமென்றார் அப்போது ஏகாம்பிரி கவுண்டனெங்களுக்கின்ன சாதி அதிகாரம் வேணுமென்று
கேட்டார்கள்"

வன்னிய கவுண்டரும் சித்தாண்டபுரம் செப்பேடும் :
விளக்கம்:                                                                                                                         சிறுதலைப்பூண்டி என்ர இடத்திலிருந்து உலகளந்தா கவுண்டர், ஏகாம்பர கவுண்டர் என்ற வன்னியர் இருவர் மேற்கு நோக்கி செல்கையில் அவர்களை ஒரு கணவாயினருகே நூறு வேடர்கள் வழி மறிக்கின்றனர்.ஆனால் இவ்விருவரும் அவ்வேடரோடு போரிட்டு அவர்களில் நான்கு பேரைக் கொன்றனர்.இதனைக் கண்ட அந்த
வேடர் கூட்டம் சிதறி ஓடிவிட்டது.இதன் பிறகு இந்த வன்னிய கவுண்டர் இருவரும் ஆலம்பாடி எனும் ஊரில் குடியமர்ந்தனர். ஆலம்பாடி பகுதியை அப்போது ஆட்சி செய்த (தெலுங்கு) இறுப்பாளி நாயக்கன் என்பவன் இவர்களை பற்றிக் கேள்விப்பட்டு இவர்களிடம் யாரென்று கேட்டபோது தாங்கள் படையாட்சிகள் என்று அந்த இரு வன்னியரும் கூறினர்.நீங்கள் எங்களுக்கு உறுதுணையாயிருங்கள் என்று அவர்களை இறுப்பாளீ நாய்க்கன் சேர்த்துக்கொண்டான்.ஆலம்பாடி நாட்டில் உலகளந்தா கவுண்டன்,ஏகாம்பர கவுண்டன் இருவரும் தலைவர்கள் என்ற நிலையில் வலுவுடன் இருந்தபோது (தெலுங்கு) நாயக்கராட்சியின் பிரதிநிதிகளான பெரியப்ப,சின்னப்ப,பாலப்ப நாய்க்கன்கள் இவர்களிடம் வரி கேட்டனர்.கொடுக்கமாட்டோம் என்று மறுத்தனர் வன்னியர்கள். வரி கொடுக்க மறுத்ததால் நாய்க்கர் தமது ஆட்களுடன் வன்னியருடைய ஆடு.மாடுகளை ஓட்டிச் செல்லத் தொடங்கினர்.சினமுற்ற வன்னியர் நாய்க்கர் ஆட்களோடு போர் செய்து அவர்களில் பத்து பேரை வெட்டிக்கொன்று தமது ஆடு மாடுகளை மீட்டுக்கொண்டனர்.இரு தரப்பினரும் பெருமன்னனான செகதேவராயரிடம் சென்று முறையிட்டனர்.பாலப்ப நாய்க்கர் தரப்பினர் இவர்கள் வரி கொடுக்கவில்லை என்றனர்.ஏகாம்பர கவுண்டர் நாங்கள் வன்னியர் குலம் என்பதால் வரி கொடுக்க மறுத்தோம்.எங்கள் ஆடு,மாடுகளை கவர்ந்து செல்ல முயன்றதால் அவர்கள் ஆட்கள் பத்து பேரை வெட்டிக்கொன்றோம் என்றனர்.வழக்கை விசாரித்த செகதேவராயர் பாலப்ப நாய்க்கர் தரப்பிற்கு நூறு பொன் அபராதம் விதித்து பின்னர் ஏகாம்பர கவுண்டர் தரப்பை பாராட்டி உங்களுக்கு என்ன சன்மானம் வேண்டும் என்று வினவ அதற்கு அவர்கள் எங்களுக்கு எங்கள் இன ஜாதி தலைமைப் பொறுப்பு வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். இந்த செப்பேட்டில் ஏகாம்பர கவுண்டர் உள்ளிட்ட பல வன்னிய கவுண்டர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.மேலும் அதில் உள்ள மற்றொரு முக்கிய
செய்தி: ஒரு தேரோட்டத்தின்போது வன்னியர் தங்கள் விருதுகளைப் பயன்படுத்தக்கூடாது என்று வலங்கை ஜாதிகளைச் சேர்ந்தோர் மறித்து பிரச்சினை செய்ய வன்னிய கவுண்டர்கள் தம்மைத் தடுத்த வலங்கை ஜாதியாரை அடித்து துரத்தி தேரோட்டத்தை நடத்தினர்.
ஆக  வன்னியர்களுக்கு பத்தாம் நூற்றாண்டு முதலே கௌண்டர் என்னும் பட்டம் உண்டு என்பதற்கான ஆதாரங்கள் எண்ணற்றவை  . அடுத்து கொங்கு வெள்ளாளர்களை பார்ப்போம்                                                                                                                                                           
========================================================

கொங்கு வெள்ளாளர்கள் :                                                                                                              முல்லை நிலமாதலால், காடும், காடும் சார்ந்த நிலங்களாக கொங்கு காட்சியளித்தது. இங்கு வாழ்ந்த இனக் குழுக்கள், வேடர், ஆயர் மற்றும் எயினர் ஆகும். வேடர்கள் வேட்டைத் தொழிலையும் ஆயர்கள் கால் நடைவளர்த்தல், தினை, வரகு, அவரை, துவரை முதலிய பயிர்களை பயிரிடல் (விண்ணோக்கிய வேளாண்முறை) என்ற முறையில் பொருளாதார வாழ்க்கை இருந்தது. இவர்களுக்குள் கூட்டப்பிரிவுகள் இருந்தன. தாம் வாழும் முறை மற்றும் இடங்களுக்கேற்ப கூட்டப்பெயர்கள் நிலைத்து இருந்தன. திருமணத்திற்கான ஒழுக்க முறை கூட்டங்களிடையே வரையறை செய்யப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் மருத நிலப்பகுதிகளில் இனக்குழு சிதைவடைந்த நிலையில், கொங்கில் மட்டும் சிதையாமல் 12ஆம் நூற்றாண்டு வரையில் நீடித்தது. அது மட்டுமல்ல புறம்போக்கு நிலங்கள் ஏராளமாகவும் இருந்தன.      
                                                       13ஆம் நூற்றாண்டில் சோழ, பாண்டிய அரசுகளின் பொருளாதார தேவை கூடியது. நெல் அதிக உபரியை வழங்கும் தானியம் என்பதால், நெல்விளையும் நிலங்களிலும் முல்லை மற்றும் குறிஞ்சி நிலங்களிலும் பயிரிட முயற்சி எடுத்தனர். எனவே, பிரமதேயம் மற்றும் கோயில்கட்டி அதற்கான நிலங்களை உருவாக்க முனைந்தது. கொங்கு நாடு அதற்கு வசதியாக இருந்தது. இந்நிலத்தில் அமராவதி, நொய்யல், பவானி போன்ற ஆறுகளும், சண்முகநதி, பாலாறு, பெருந்தலாறு போன்ற சிறிய நதிகளும் ஓடிக்கொண்டிருந்தது. பல்வேறு கூட்டப்பெயர்களுடன் வேட்டுவர்களும், ஆயர்களும் இனக்குழுவாக வாழ்ந்து வந்தனர். வேட்டுவர்கள் வேட்டைத் தொழிலும், ஆயர்கள் கால்நடை வளர்ப்பும், தானியம் பயிரிடல் என்ற அளவில் பொருளாதார வாழ்வு இருந்தது. “ஆ கெழு கொங்கர்’’ “கொங்கர் ஆ பரந்தன்ன’’ என சங்க இலக்கியம் இவர்களைப் பதிவு செய்துள்ளது.       
                                                                                  கொங்கு தவிர்த்த இதரப்பகுதிகளில் வேளாண் தொழில் செய்வோரை, பாண்டிய வேளாளர், சோழிய வேளாளர் என அழைக்கப்பட்டு வந்தனர். இங்கு வேளாளர் என யாரும் இல்லை. எனவே, தஞ்சை தொண்டைமண்டலம் (புதுக்கோட்டை) ஆகிய பகுதிகளில் இருந்து வேளாளர்கள் கொங்கில் குடியேறினர் (நிக்கல்சன் 1887:86) இதையே, ”சோழன் பூர்வபட்டயம்’’, “அண்ணமார்கதை’’, “கொங்கு வேளாளர் புராணம்’’, ஆகியன உறுதிப்படுத்துகிறது. ((குறிப்பு : கொங்கு வெள்ளாளர்கள் பதின்மூன்றாம் நூற்றாண்டின் போதுதான் கொங்கு நிலத்திற்கு வருகிறார்கள் . ஆனால் பத்தாம் நூற்றாண்டிலேயே காமிண்டன் அல்லது கௌண்டர் என்னும் பட்டம் வன்னியர்கள் பெற்று அதை வழக்கத்திலும் கொண்டு வந்துவிட்டார்கள்))
குடியேறிய வேளாளர்கள் கொங்கிலுள்ள ஆயர்களுடன் ரத்தக்கலப்பு ஏற்பட்டு வேளாளர் என்ற புதியப் பெயரைத் தாங்கி நின்றனர். இவர்கள் குடியேறிய பின்பே, நீர்பாசனமுறை கொங்கு நாட்டில் உருவானது. குடியேறிய வேளாளர்கள் ஏற்கெனவே ஆயர்களிடம் உள்ள கூட்டம் (குலம்) முறையை ஏற்றுக்கொண்டனர். ஆயர்கள் அவர்களிடம் வேளாண் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டனர். இதன் பிறகே கல்வெட்டுகளில் வேளாளர் என்று பொறிக்கப்பட்டுள்ளது என அறிகிறோம். வேளாளர் என்ற சொல்லுக்கு வெள்ளத்தை ஆள்பவர் என்ற பொருள் உண்டு.                                                                                                                                              
  1. மருத நிலப்பகுதியில் இருந்த வேளாளர்கள் தமது சாதிப்பெயரை பிள்ளை என மாற்றிக்கொண்டது போல் கொங்கு வேளாளர்கள் தங்கள் பெயரை கவுண்டர் என மாற்றிக்கொண்டனர். இது தங்களை மேல்நிலையாக்கம் செய்வதற்கான நடவடிக்கையாகும்.                                                      ஆதாரம் : காலிங்கராயன் கால்வாய்  பற்றிய கட்டுரை (http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=303%3A2009-08-27-02-40-33&catid=911%3A09&Itemid=154)
  2.  கொங்கு வெள்ளாளர்கள் அண்மைய காலத்தில்தான் கவுண்டர் பட்டத்தை பயன்ப்படுத்தி வருகின்றனர் என்று கொங்கு வெள்ளாளர்
    சமூகத்தை சேர்ந்த முனைவர் .திரு .சு .ராஜவேலு அவர்கள் “தொல்லியல் சுடர்கள் ” என்ற நூலில் “கல்வெட்டுகளில் கொங்கு வெள்ளாளர் கூட்டுப் பெயர்கள் ” என்ற கட்டுரையில் (பக்கம் 176) கீழ்கண்டவாறு கூறியுள்ளார்.

“கூட்டுபெயர்கள் வரும் கல்வெட்டுகளில் கொங்கு என்ற இக்கால முன்னொட்டு காணப்படவில்லை . எனவே கொங்கு என்ற நிலவியல் சொல் பிற்காலத்தில் முன்னொட்டாக வந்துள்ளது என்பது தெளிவாக விளங்கும் . இதே போன்று கொங்கு வெள்ளாளக் கௌண்டர்களின் பின் ஒத்தான ‘கவுண்டர் ’ என்ற பட்டமும் ல்கல்வெட்டில் மிகக் குறைவாகவே காணப்படுகிறது என்று திரு .சு .ராஜவேலு அவர்கள் எழுதியுள்ளார் .                                                                                    

3.   ”1871 தொடங்கி 1931 வரை நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பில் இவர்கள் எதிலும் கொங்கு வெள்ளாளர் என்று கணக்கெடுக்க படவில்லை .. இதனை எட்கர் தர்ஸ்டன் என்பவர் "தென் இந்திய சாதியினர் மற்றும் பழங்குடியினர் " என்னும் புத்தகத்தில் கொங்க என்ற தலைப்பில் எழுதபெற்ற வசனம் இங்கே :            

KONGA-konga are kongu is a territorial term, meaning inhabitant of the territorial country.It is recent times of census, been returned as a division of a large number of classes mostly tamils which include – Ambattan, Kaiolan, Kammalan,Kuravan,Kusavan,Malayan,Odde,Parayan, upparaand vellala.It is used as a term of abuse among the Badagas of the Nilgiri hills. Yhose for example, who made mistakes in matching kolmgrens…were seornfully called konga by the onlookers.
    Similarly in parts of Tamil country a tall , lean and stupid individual is called a kongan.They seem to have little in     common with other vellalas,except the name, and appear to hold a lower position in society for reddis will not eat with them. They will dine with thotiyans and others of lower non bhramins castes.
Their devellings are generally Thatched huts.

4. இதனால்  அதுபோல இவர்கள் தனி சாதி என்ற அந்தஸ்து அடைய முடியாத நிலையே தொடர்ந்தது .. அப்போது வட தமிழகத்தில் வன்னியர்கள் கௌண்டர் என்ற பட்டதுடன் இருப்பதை கண்டு , அதை தங்கள் பெயருடன் சேர்த்து போட்டு தனி சாதியாக அடையாளம் பெற்றனர்   .  



INDIAN COMMUNITIES  என்ற புத்தகத்தில் கே.எஸ்.சிங் என்பவர் பின்வருமாறு எழுதியிருக்கிறார் .

“KONGU VELLALA/ KONGU VELLALA GOUNDER”
This is a community of tamilnadu who shares some common features with other vellala excepts the name.
They are distributed in Kongu nadu comprising the adjoining districts of tamilnadu and kerala.
IN TAMILNADU THEY ARE REFERRED TO AS KONGU VELLALAR, BUT AFFIX GOUNDAR AS S HONORIFIC TITLE BORROWED FROM THE PEOPLE OF THE NORTHERN DISTRICTS OF TAMILNADU.
In kerala, the kongu vellala goundar is called kongu vellala drive the name from their original place of habitants.

 ==========================================================

முடிவுரை :      
==========

கௌண்டர்  பட்டம்     

வன்னியர் குல க்ஷத்ரியர்:
  1. கல்வெட்டு படி பட்டம் கிடைத்த காலம் - பத்தாம் நூற்றாண்டு - சோழ மன்னரால் கொடுக்க பட்டது
  2. தமிழக சாதி பட்டியலில் அழைக்கப்படும் முறை - கௌண்டர்
  3. கௌண்டர் பட்டதுடன் அழைக்கப்படும் பகுதிகள் - தமிழ்நாடு முழுதும் கொங்கு நிலத்தையும் சேர்த்து கௌண்டர் பட்டம் கொண்டுள்ளனர்

கொங்கு வெள்ளாளர்
  1. கல்வெட்டு படி பட்டம் கிடைத்த காலம் -  13 ஆம் நூற்றாண்டில்தான்  வெள்ளாளர்கள் கொங்கு நிலத்திற்கு வருகின்றனர் .அதன் பின்தான் வெள்ளாளர்கள் கொங்கு வெள்ளாளர் என்றே மாற்றம் செய்தனர் . அதன் பிறகு வெள்ளைக்காரன் காலத்தில் நடந்த  சாதி வாரி கணக்கெடுப்பு வரை அந்த பட்டம் இல்லை .பின்பு மேல்நிலையாக்கம் செய்வதற்காக கௌண்டர் பட்டம் சேர்த்து கொண்டனர்
  2. தமிழக சாதி பட்டியலில் அழைக்கப்படும் முறை - கொங்கு வெள்ளாள கௌண்டர்
  3. கௌண்டர் பட்டதுடன் அழைக்கப்படும் பகுதிகள் - கொங்கு நிலம்


தமிழ்நாடு சாதி பட்டியலிலும் வெறும் கௌண்டர் என்பது வன்னியர்களை மட்டுமே குறிக்கிறது:                                                                 
  Vanniakula Kshatriya ( including Vanniyar, Vanniya, Vannia Gounder, Gounder or Kander, Padayachi, Palli and Agnikula Kshatriya )


ஆனால் கொங்கு வெள்ளலர்களுக்கோ கொங்கு வெள்ளாளர் என்றுதான் உள்ளதே தவிர, வெறும் கௌண்டர் என்று இல்லை . அதோடு ஏதாவது ஒரு பெயர் ஒட்டிதான் வருகிறது . அது அவர்களின் கூட்டத்தை குறிப்பது போல . வெறும் கௌண்டர் என்னும் பட்டம் வருவதில்லை

Kongu Vellalars( including Vellala Gounder, Nattu Gounder, Narambukkatti Gounder, Tirumudi Vellalar, Thondu Vellalar, Pala Gounder, Poosari, Gounder, Anuppa Vellala Gounder, Kurumba Gounder, Padaithalai Gounder, Chendalai Gounder, Pavalankatti Vellala Gounder, Pallavellala GounderSanku,Vellala Gounder,and Rathinagiri Gounder). 


காமிண்டன் அல்லது கௌண்டர் என்னும் பட்டம் பத்தாம் நூற்றாண்டிலேயே வன்னியர் குல க்ஷத்ரியர்க்கு கிடைத்துள்ளது . ஆனால் 13ஆம் நூற்றாண்டில்தான் வெள்ளாளர்கள் கொங்கு நாட்டுக்கு வந்து கொங்கு வெள்ளாளர் என்றே பெயரே பெற்றனர் .அதோடு அங்கு உள்ள ஆயர்களுடன் சேர்ந்து அவர்கள் உட்ப்பிரிவு பெயர்களையும் இவர்களும் சேர்த்து கொண்டனர் . இதனால் கௌண்டர் என்னும் பட்டம் இவர்கள் பயன் படுத்துவதற்கு பல நூற்றாண்டிற்கு முன்பிலுருந்தே வன்னியர் குல க்ஷத்ரியர் சாதியே பயன்ப்படுத்தி வருகிறது  என்பது தெளிவாகிறது . பள்ளி காமிண்டன் என்னும் பட்டம் போல கொங்கு வெள்ளாள காமிண்டன் என்ற பட்டம் எப்போது யாரால் தரப்பட்டது என்று தேடினால் கிடைக்கப்பெற்ற மாட்டாது . காரணம் அது பின்னாளில் கொங்கு வெள்ளாளர்கள் தங்களை மேல்நிலையாக்கம் செய்வதற்காக கௌண்டர் பட்டம் சேர்த்து கொண்ட நடவடிக்கையாகும்.

[நன்றி:: திரு.சியான் வசந்த் ]