Saturday, 4 May 2013

தமிழக பெரும்பான்மை மக்களுக்காக போராடுவது, தவறா??


தமிழக பெரும்பான்மை மக்களுக்காக போராடுவது, தவறா??

இறந்து போன சில வன்னியர்களுக்காகவும்,காயப்பட்டு மருத்துவமணையில் வாடும் பெரும்பான்மை மக்களுக்காகவும், ஆதரவாக போராட்டம் செய்ய முயன்ற

*மருத்துவர்.ராமதாஸ் கைது.,
*ஜி.கே.மணி கைது,
*ஜே.குரு கைது,,
*மருத்துவர்.அன்புமணி கைது

இப்போது
*A.K.மூர்த்தி கைது,



வன்முறையில் இறங்குமாறு தூண்டுவது யார்? வன்னியர்களை  அரசிற்கு எதிராக போராட  அவர்களை அரசே தூண்டுகிறது,,... ஒருபக்கம் அவர்களது கட்சியை முடக்கும் நோக்கமும் நடக்கிறது,, அது பொதுநல வழக்காக இருந்திருந்தால் சென்ற ஆண்டே வந்திருக்க வேண்டும் இப்போது வர காரணமென்ன, ஆளுங்கட்சியின் காழ்புனர்ச்சியே என்பது தெள்ளத் தெளிவாகிறது,,

காழ்புணர்ச்சியின் நோக்கம்:
திராவிட கட்சிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் பா.ம.க  மற்றும் அனைத்து சமூக மக்கள் இயக்கங்களின் ஒற்றுமையும் எழுச்சியும் திமுக'வை விட அதிமுக'வை அதிகம் பாதித்துள்ளது, அதனால் தான் திமுக போல் மறைமுகமாக(திருமா'வின் மூலம்) இல்லாமல்,
நேரடியாகவே கைது நடவடிக்கையில் இறங்கி காந்தி காலத்து வழக்குகளையெல்லாம் தூசு தட்டுகிறது,,

உண்மையில்,இந்த பாராளுமன்ற தேர்தலில்  ஆளும் மற்றும் முன்னாள் திராவிட கட்சிகளுக்கு எதிராக மக்கள் திரள்வதை தடுக்கவுமே இந்த அரசியல் பழிவாங்கும் நிலைப்பாடு.




அதாவது இப்படி பல வழக்குகளையும்,பல குழப்பங்களையும் வன்னியர் சார்பு சங்கங்கள் மீதும், பிற பெரும்பான்மை சமூகசார்பு சங்கங்கள் மீதும் மற்றும் அவர்களை ஆதரிக்கும் கட்சிகள் மீதும் ஏற்படுத்தினால், அவர்களுக்கென்று இருந்த அரசியல் செல்வாக்கை உடைத்துவிடலாம்,, அதன் மூலம் வன்னிய மக்களிடையே குழப்பத்தை விளைவித்து சுலபமாக வன்னிய மற்றும் பெரும்பான்மை சமூக மக்களின் ஒருங்கிணைப்பை தகர்த்துவிடலாம் , அதன்மூலம் ஓட்டுக்களையும் பிரித்து விடலாம் என்பதெல்லாம் அவர்களின் பகல்கனவு,,

ஆனால் மக்கள் தொலைக்காட்சியிலும்,மற்றும் பிற பொதுவான தொலைக்காட்சிகளிலும், இணையதளங்களிலும் கருத்து தெரிவிக்கும் பெற்றோர்களும், இருபக்கமும் பேசும் பெரியவர்களின் கருத்துக்களில் உள்ள ஆதரவான பேச்சுக்களை பார்க்கும் போது, பா.ம.க மற்றும் பெரும்பான்மை சமூக மக்களின் இயக்களின் எழுச்சி எந்த அளவு உள்ளது என்பதை உணரமுடிகிறது,,


//மெல்ல மெல்ல வீழ்ந்து கொண்டிருக்கும் பெரும்பான்மை தமிழர்களுக்கு
விரோதமான  திராவிட மற்றும் பாரபட்ச அரசியல்...இனி முற்றிலும் வீழும்//


என்றும் உண்மையுடன்
அரசகுலன் வன்னித்தமிழன்

No comments:

Post a Comment