மது ஒழிப்பு: மருத்துவர் இராமதாசு அவர்களின் மாபெரும் சாதனை!
மது ஒழிப்பு: மருத்துவர் இராமதாசு அவர்களின் மாபெரும் சாதனை!
மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களை நிறுவனராகக் கொண்டுள்ள 'வழக்கறிஞர் சமூகநீதிப் பேரவை' அமைப்பின் சார்பில் அதன் தலைவர் க. பாலு தொடர்ந்த பொதுநல வழக்கில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க உத்தரவை பிரப்பித்துள்ளது சென்னை உயர்நீதி மன்றம்.
சாலை விபத்திலும் சாராய விற்பனையிலும் முன்னணியில் உள்ள தமிழ்நாட்டில், மிகப் பெரும்பான்மையான சாலை விபத்துகளுக்கு மதுபானமே காரணமாக உள்ளது. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் சாலை விபத்துக்களும், உயிரிழப்புகளும் நடைபெறும் மாநிலம் என்ற அவப்பெயரை தமிழகம் பெற்றிருப்பதற்கு நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள மதுக்கடைகள் தான் காரணம் என்பதால், அவற்றை மூடும்படி ஆணையிடக் கோரி 'வழக்கறிஞர் சமூகநீதிப் பேரவை' சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது. மதுக்கடைகளை அகற்றுவதற்கு கூடுதல் கால அவகாசம் கோரி தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதிகள், மார்ச் 31 ஆம் தேதிக்குள் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் அனைத்தும் கண்டிப்பாக அகற்றப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 504 மதுக்கடைகளும், மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 1500 க்கும் அதிகமான மதுக்கடைகளும் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது.
No comments:
Post a Comment