Sunday, 26 May 2013

மக்களுக்கான போராட்டங்களை செய்தது யார்????? செய்வது யார்?????













மக்களுக்கான போராட்டங்களை வெளிக்காட்டிக்கொள்ளாமல்
செய்தது யார்????? செய்வது யார்?????

மதுவை ஒழிக்கப்போகிறேன் என்று ஜெயலலிதா வீட்டின் பக்கம் நடந்துசென்று கூட்டணியை உறுதிபடுத்தி கொண்ட வைகோ போன்றவர்களுக்கு மத்தியில் தனது சுய பணத்தை கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தேசியசாலைகளிலுள்ள மதுக்கடைகளை மூடிய நல்ல மனிதர் மருத்துவர்.ராமதாஸ்...

ஆனால் பாமக கட்சியினர் தான் குடிக்கின்றனர்,,,
மருத்துவர் தான் வன்முறையை தூண்டுகிறார்
என்று காழ்புணர்ச்சியுடன் சொல்லிவருகிறது,,
#நீதிமன்றம் சொன்ன மதுக்கடைகளை
இன்னமும் மூடாத ஜெயலலிதா அரசு


வன்னித்தமிழன்







Thursday, 23 May 2013

அழிவை நோக்கி வடதமிழக விவசாயம்,...





அழிவை நோக்கி வடதமிழக விவசாயம்,...

கடலூர்  மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயம் மெல்ல மெல்ல அழிந்துவிடும் அபாயத்தில் உள்ளது,,,

ஜெயலலிதா அரசு தலைமையில் துவங்கிய
*புதுவீராணம்(ராட்ச்ச போரின் மூலம் நீர் உறிஞ்சுதல்) திட்டமும், *அரசே  மணலை அள்ளும் திட்டமும்
துவங்கியதிலிருந்து,,,

தமிழகத்தில் அதீத வறட்சி நிலவுகிறது,,,குறிப்பாக வட தமிழக நதிகளில் நீர் மட்டம் மிக வேகமாக குறைந்து வருகிறது,,,

நெய்வேலி மற்றும் கடலூர் ஆலப்பாக்கம் சிப்காட்களில் வாரி இறைக்கப்படும் நீரினால் நிலத்தடி நீர்மட்டும் படுபாதாளத்திற்கு சென்றுவிட்டது,,,



போதாத குறைக்கி மத்திய அரசின் 100நாள் திட்டமும், ஜெயலலிதா அரசின் மின் பற்றாக்குறையும், விவசாயத்தை முற்றிலும் அழித்து வருகிறது,,,

முன்னர் கூறியதை போல் வட தமிழகத்தின் திருவள்ளூர்,காஞ்சிபுரத்தில் ஏற்கனவே விவசாய நிலங்கள் அழிந்து பல அடுக்குமாடி குடியிருப்புகளும், ரசாயன தொழிற்சாலைகளும் வந்துவிட்டது,,,







போதாதா குறைக்கி *அரசே மதுவை விற்கும் திட்டத்தினால்,,,அதிக நகரமயாகும் வட தமிழக மக்களின் வாழ்க்கை சீரழிவை நோக்கி செல்கிறது

இதையெல்லாம் மருத்துவர் சொன்னால்
சாதிய நலம்னு சொல்விங்க,,,

சரி அப்போ கருணாநிதியையோ,வைகோவையோ சொல்ல சொல்லுங்க,,, வரவேற்கிறோம்,,

உண்மையுடன் வன்னித் தமிழன்

Tuesday, 14 May 2013

வன்னியர்கள் ஆள நினைப்பது தவறா?? அன்புமணி ராமதாஸ்

ஏன் வன்னியர்கள் ஆளக்கூடாது??வன்னியர்கள் ஆள நினைப்பது தவறா??மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்







































பொதுவாக பல விவாதங்கள் வன்னிய சங்க மாநாட்டையும், வன்னியர்கள் ஆளணும்னு சொல்றது சாதிய வெறின்னு சொல்றது எல்லாம் திராவிட வெறி என்பது மக்களுக்கு தெளிவாக தெரிந்தாலும்,,,

பெரும்பான்மை சமூகமக்கள் இதில் புரிந்துகொள்ளவேண்டிய ஒரே விடயம்,,வன்னியர்கள் மட்டுமே தான் ஆளணும்னு எந்தஇடத்திலும் பாமக'வோ,வன்னிய சங்கமோ,சொல்லவில்லை! அப்படி சொல்லவிட போவதுமில்லை!!வன்னியனும் ஆளணும் அப்படின்னு தான் எங்கும் சொல்லியிருக்கின்றனர்

அந்த கருத்தை திரித்து செய்தி வெளியிட்டு, சமீபத்தில் ஒருங்கிணைய துவங்கிய பெரும்பான்மை சமூக மக்களை மீண்டும் பிரிக்க துடிக்கிறது
திராவிட கட்சிகள் மற்றும் திராவிட ஊடகங்கள;

>>>>>விழிப்புடன் இருப்போம் பெரும்பான்மை சமூகமே<<<<<

உண்மையுடன் வன்னித்தமிழன்

நாம் மாறுவோம்,,,,,,பிறகு நம்மவர்களையும் மாற்றுவோம்,,,


சொந்தங்கள் உணர்ச்சிவசப்படாமல் இந்த கருத்தை முழுமையாக படித்து,,,தகுந்த வாதங்களையும் வழிமுறைகளையும் பதியுங்கள்











சமீபகாலமாக வன்னிய பெருங்குடி மக்களின் தனித்தன்மைகளும், சிறப்புகளும் மறைக்கப்பட்டு வெறும் வன்முறையாளர்கள் என்று தினமலர் துவங்கிய அந்த பொய்செய்தி வேலையை இன்று பல திராவிட,பார்ப்பன ஊடகங்கள் தங்கள் விளம்பரத்திற்காக பரப்பிவருகின்றன,,,பொதுவான ஊடகங்களும்,,,அதை உண்மையாக  எண்ணி செய்தி வெளியிடுகிறது,,,மேலும் எல்லாவற்றிற்கும் மேலாக இன்று ஒரு அரசே கீழிறங்கி மற்றொரு கட்சியினை ஒடுக்க நினைப்பதும், அதை பல ஊடகங்கள் நியாப்படுத்துவதும் கண்கூடு,,நம்மில் பலருக்கு அதில் நிறைய அயர்ச்சிகளும் உருவாகி உறுதியாகியிருக்கும்,,,நாம் முழுமையாக மாறவேண்டியதற்கான தகுந்த சந்தர்ப்பம் இது,,,

மேற்சொன்ன விடயத்தில் திராவிட பங்குமட்டுமல்லாது,,,நமது பெயர்கள் கெட நாமும் ஒருகாரணம் என்பதை சொல்ல விழைவதே இந்த நம் மீள் நிலை பதிவு: என்றும் நமது மிகபெருவாரி
தவறுகளுக்கு ஒரு தவிர்க்க முடியாத காரணம் வன்னிய சங்கத்தின் சில முற்போக்கற்ற நடவடிக்கைகளும், பாமக'வின் சில
தொலைதூர அரசியல் நோக்கற்ற பார்வையுமே,,,


முதலில் நமது சங்கமானது,,, நமது மக்களின் முற்போக்கு சிந்தனையையும் அதனூடாக,, வன்னிய பெருங்குடி மக்களின் குறைகளை வெளிப்படுத்தும் விதத்தையும்,,,நமக்கு ஆரம்பம் முதலே சொல்லி பழக்கவில்லை,,,அந்த குறையை கட்சி சில தடங்களில் நிவர்த்தி செய்திருந்தாலும்,,, பல தடங்களில் வன்னியர்கள் மரவெட்டிகள்,வன்முறையாளர்கள், கலகக்காரர்கள் என பலபல பெயர்களில் கொச்சைப்படுத்தி தனிமை படுத்தப்பட்டனர்,, நாம் செய்யும் தவறுகள் என்ன என்பதே நமக்கு தெரியாத அளவிற்கு நாம் மீண்டும் மீண்டும் அதை செய்வதற்கு பல திராவிடர்கள் காரணமாக இருந்தாலும், நமது நியாங்களை எப்படி வெளிப்படுத்த வேண்டும்,,, எவையெல்லாம் தவறுகள் என்பதை சுட்டிகாட்டாமல் இருந்ததில் நமது தலைமைகளிடமும் உள்ளது

மேலும் எந்த பறையன் எங்கு அடிபட்டாலும் அங்கே உடனே இழப்பீடு, வெங்காயம்னு, குரல் கொடுத்து அதை அரசியலாக்க தெரிஞ்ச  திருமாவளவன்,மறுக்கமுடியாத  தவறுகளும் செய்கிறார்,, ஆனால் திரைமறைவு தப்புகள் வெளியில் வரவில்லை.

ஓரிரு சீட்டுகள் தரும் அந்த மக்களுக்கே திருமா..அப்படி நிற்கும் போது,நமது வன்னிய கட்சியும், சங்கமும் நமது பெருவாரி வன்னியர்களுக்கு எவ்வளவு நிற்கவேண்டும்

கட்சி அல்லது சங்கம் தொடர்பான மாநாடு மற்றும் கலந்தாய்வு என்று எங்கு வன்னியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், ஓடி நின்று பாமக'வோ வன்னிய சங்கமோ அந்த மக்களுக்காக நின்றால்,, நீங்க கூறியிருக்கிற குறைகள் குறையும்,,, வன்னிய மக்களிடம் முற்போக்கு சிந்தனை வலுப்பெறும்,,,




நம் தவறுகளை முதலிலேயே நாம் கலந்து பேசி மாறினால் தான்,,,
நம்மை அடுத்தவர் விமர்சிக்க வாய்ப்பில்லாமல் போகும்,,முதலில்

நாம் மாறுவோம்,,,,,,பிறகு நம்மவர்களையும் மாற்றுவோம்,,,
முற்போக்கை பெறுவோம்,,,, முற்போக்கை தருவோம்,,,

உண்மையுடன் வன்னித்தமிழன்

Saturday, 11 May 2013

திராவிட கட்சியில் பொறுப்பில் இருக்கும் ஒரு வன்னியரும் அவருக்கு வன்னித்தமிழன் என்பவரின் பதிலும்


 Selvam Vanniyar:

நீங்கள் சொல்லுவதெல்லாம் சரி. பிரட்சனை என்னன்னா நாங்கள் எல்லாம் திராவிட கட்சிகளை விட்டுவிட்டு வெளியே வந்து உங்களுக்கு வாக்களித்தால் ஐயா குடும்பமும் அவரின் நெருங்கிய வசூல் ஏஜண்டுகளும் கோடிகளை பார்ப்பார்கள். எங்கள் பிழைப்பு என்னாவது? நீங்கள் என்ன இனி பா.ம.க சம்பாரிக்கும் பணம் எல்லாத்தையும் எல்லா வன்னியர்களுக்கும் பிரித்து தருவோம் என்றா சொல்லுகிறீர்கள், இல்லையே? ஒரு குடும்பம் சம்பாரிக்க நாங்கள் ஏன் மாற்று கட்சி பதவியை  துறக்க வேண்டும்?

வன்னித்தமிழன்:

சகோ,,, நான் சொல்லியுள்ளது,, உங்களை பாமக'விற்கு ஓட்டு போடுங்கள் என்றல்ல,, நாம் ஒதுக்க வேண்டியது எந்த கட்சி என்பதே நான் சொல்லியுள்ளேன்,, நாம் கட்டாயம் திராவிட கட்சிகளை ஒதுக்கியே ஆகவேண்டும்,,



அதற்கான முக்கிய காரணம் உங்கள் வழியிலேயே வருகிறேன்,,நீங்கள் கூறியதைப்போல் மருத்துவர் குடும்பம் பணம் சம்பாதிக்கும் என்று கூறியுள்ளீர்கள்,,, நான் உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் திமுக,அதிமுக,காங்கிரஸ் தலைமைகளைவிடவா பாமக கொள்ளையடித்துவிட்டது,,,ஆக தமிழரற்ற திராவிட, காங்கிரஸ் தலைமைகள் கொள்ளையடிக்கும் போது அவர்களை விமர்சிக்கவும் மாட்டோம், ஒதுக்கவும் மாட்டோம், ஆனால் அதே விடயங்களை நமக்கு அருகில் உள்ள ஒரு வன்னிய கட்சியோ, வன்னியரோ செய்தால் அதை ஓதுக்கி முன்னால் நின்று விமர்சனம் செய்வோம் இல்லையா,??

நான் சாதிய ரீதியாக மட்டும் பேசவில்லை,,  திராவிடர்கள் என்று நம்மை கூறியே பிராமண மற்றும் வட இந்தியர்களை நம்மிடம் இருந்து  திராவிட கட்சிகள் ஒதுக்கியது,,

அதேபோல் தமிழர்கள் என்று நாம் ஏன் திராவிடர்களை ஒதுக்க கூடாது,,அது தான் தோழர் சீமான் வாதம்,,, இதில் நாம் உணரவேண்டியது என்னவென்றால், மத்திய இணையமைச்சர் வேலுவின் காலத்தில் லாபத்தில் ஓடிய ரயில்வே துறை,, இன்று நஷ்டத்தில் ஓடுகிறது,, அன்புமணியின் மருத்துவத்துறையின்இன்றைய நிலையென்ன,, ஆக தமிழனிடமும் தரமுள்ளது,,,அதை வெளிப்படுத்தாமல் முடக்கவே கட்சி பொறுப்புகளை மட்டும் கொடுத்து வன்னிய மற்றும் மற்ற பெரும்பான்மை சமூக மக்களை வஞ்சித்து வருகிறது,,



நானே ''நாம் தமிழர்'' கட்சியில் தான் இப்போது உள்ளேன்,, வன்னியர்களுக்கு என்று பாமக மட்டுமல்ல,,இப்போது NR காங்கிரஸ் மற்றும் TVK கட்சியும் வந்துள்ளது,,,திமுகவிலும் சில நல்ல வன்னிய தலைவர்கள் உண்டு,, ஆனால் நமது உரிமையை நாம் மீட்டெடுக்க வேண்டிய கால சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் சந்தர்ப்பம் இது,,

தவறவிட்டால் இன்னும் 50ஆண்டுகளுக்கு ஜெயலலலிதாவின் காலில் தமிழர்கள் விழுந்து விழுந்து வணங்கிக்கொண்டே இருப்பனர்,,

திமுக குடும்பம் செவ்வாய் கிரகத்தில்  உள்ள வங்கியிலும் பலகொடிகளை பதுக்கி வைக்கும்,, சிந்தியுங்கள் சகோ,,

Wednesday, 8 May 2013

ராமதாஸ் கைது: விரக்தியில் சேலம் பாமக செயலாளர் சயனைடு சாப்பிட்டு தற்கொலை!

08 / 05 / 2013

சேலம்: ராமதாஸ், அன்புமணி கைது செய்யப்பட்ட விரக்தியில் சேலத்தை சேர்ந்த பா.ம.க. வட்ட செயலாளர் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், மணியனூர் பாரதி நகரை சேர்ந்தவர் சின்ராஜ் (36). இவர் வெள்ளிப்பட்டறையில் வேலைப் பார்த்து வந்தார். 50வது வட்டம் பா.ம.க கட்சியின் செயலாளராக இருக்கிறார். இவர் சயனைடு சாப்பிட்டதாக இன்று காலை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை கொடுத்தும் பயனளிக்காமல் இறந்து விட்டார். இந்த இறப்பை பா.ம.க.வினர், ‘‘கட்சித் தலைவர் ராமதாஸ் ஐய்யாவையும், சின்னய்யா அன்புமணியும் கைது செய்தது கண்டித்து தான் இறந்துள்ளார்.

இவர் கட்சிக்கு தீவிர உழைப்பாளி. ஐயாவும், சின்னய்யாவும் கைது செய்ததில்  இருந்து சோறு, தண்ணீர் குடிக்காமல் மிகவும் மன வருத்தத்தில் இருந்தார்.  பார்ப்பவர்கள் எல்லோரிடமும் ஐயாவையும், சின்னய்யாவையும் எப்போது விடுதலை செய்வார்கள். என்று கேட்ட வண்ணமே இருந்தார்.

ஐய்யாவையும், சின்னய்யாவையும் கைது செய்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் இன்று காலை வெள்ளிப் பட்டறைக்கு வேலைக்கு போனவர் அங்கிருந்த சயனைடை எடுத்து வீட்டில் வந்து குடித்து இறந்து விட்டார்’’ என்கிறார்கள்.

காவல்துறையினர், ‘‘மாரடைப்பால் இறந்து விட்டார்’’ என்கிறார்கள். இவரின் சாவுக்கு என்ன காரணம் என்று புரியாத புதிராக இருக்கிறது. 
 
ஆனால் அக்கம் பக்கத்தினர், ‘‘இவர் மனவருத்தத்தில் தான் தற்கொலை செய்துக் கொண்டார்’’ என்கிறார்கள்.

ஏற்கனவே ராமதாஸ் கைது செய்ததில் இருந்து சேலம் மாவட்டம் பரபரப்பாக இருந்த சூழ்நிலையில் இந்த தற்கொலை சம்பவம் இன்னும் கூடுதலாக பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sunday, 5 May 2013

எச்சரிக்கை!! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!






பஸ் கண்ணாடி உடைத்த வி.சி கட்சிக்காரர்களை விழுப்புரம்,தர்மபுரி ஆகிய இடங்களில் மக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்த செய்தி தாமதமாக நேற்றும் இன்றுமே வெளிவந்துள்ளது.

திண்டிவனத்தை அடுத்த முறுக்கேரி கிராமத்தில் கல் எறிந்து லாரி டிரைவர் மரணம் அடைந்தார்.நம் கட்சியினரை தொடர்புகொண்ட போது யாரும் அதை செய்யவில்லை என்றனர்,,,

வன்னியர்களின் பெயரை கெடுக்க வேண்டும் என்று சில அரசியல் பின்புலம் கொண்டவர்கள் மறைமுகமாக செயல்பட்டதை தாண்டி இன்று நேரடியாக செயல்படுகின்றனர்,,,

இப்படி பொறுக்கித் தனங்களை செய்யும் கட்சிகளில் வி.சி,, கட்சியினரின் முதன்மையான இடத்தில் உள்ளனர்,,இப்படி நடந்துகொள்ளும் இவர்கள் நாடக திருமணங்களை அரங்கேற்றியிருக்க மாட்டனர்
என்ற வாதம் முழுமையாக உடைபடுகிறது,,,
அதே நேரம் இவர்களின் உண்மையான முகத்தை பற்றி 
மேடையில் பேசியதற்கு தான்,,

1000க்கும் மேற்பட்ட பெரும்பான்மை சமூக மக்கள் மீது வன்கொடுமை சட்டம் பாய்ந்துள்ளது,, இப்போது யோசிக்கவேண்டியது பெரும்பான்மை மக்களே,,
பெரும்பான்மை சமூக மக்களின் பெற்றோர்களின் மனநிலையையும்,,சிறு வயது பெண்பிள்ளைகளையும், அவர்களுக்காக பேசும் பெரும்பான்மை சமூக தலைவர்களை காக்க எந்த சட்டமும் இல்லாத போது நம்மை காக்கப் போவது யார்,,,!! எந்த கட்சி,,?!! என்பதை இனி பெருவாரி மக்களே முடிவெடுக்க வேண்டும்,, முழு தமிழனமும் முழுமையாக முன்னேற நம்மை  நாமே ஆளவேண்டும்.,,****அது காலத்தின் கட்டாயம்****

//மெல்ல மெல்ல வீழ்ந்து கொண்டிருக்கும், திராவிட  அரசியல்;;;
இனி முற்றிலும் வீழும்;;;//



என்றும் உண்மையுடன்
அரசகுலன் வன்னித்தமிழன்

Saturday, 4 May 2013

தமிழக பெரும்பான்மை மக்களுக்காக போராடுவது, தவறா??


தமிழக பெரும்பான்மை மக்களுக்காக போராடுவது, தவறா??

இறந்து போன சில வன்னியர்களுக்காகவும்,காயப்பட்டு மருத்துவமணையில் வாடும் பெரும்பான்மை மக்களுக்காகவும், ஆதரவாக போராட்டம் செய்ய முயன்ற

*மருத்துவர்.ராமதாஸ் கைது.,
*ஜி.கே.மணி கைது,
*ஜே.குரு கைது,,
*மருத்துவர்.அன்புமணி கைது

இப்போது
*A.K.மூர்த்தி கைது,



வன்முறையில் இறங்குமாறு தூண்டுவது யார்? வன்னியர்களை  அரசிற்கு எதிராக போராட  அவர்களை அரசே தூண்டுகிறது,,... ஒருபக்கம் அவர்களது கட்சியை முடக்கும் நோக்கமும் நடக்கிறது,, அது பொதுநல வழக்காக இருந்திருந்தால் சென்ற ஆண்டே வந்திருக்க வேண்டும் இப்போது வர காரணமென்ன, ஆளுங்கட்சியின் காழ்புனர்ச்சியே என்பது தெள்ளத் தெளிவாகிறது,,

காழ்புணர்ச்சியின் நோக்கம்:
திராவிட கட்சிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் பா.ம.க  மற்றும் அனைத்து சமூக மக்கள் இயக்கங்களின் ஒற்றுமையும் எழுச்சியும் திமுக'வை விட அதிமுக'வை அதிகம் பாதித்துள்ளது, அதனால் தான் திமுக போல் மறைமுகமாக(திருமா'வின் மூலம்) இல்லாமல்,
நேரடியாகவே கைது நடவடிக்கையில் இறங்கி காந்தி காலத்து வழக்குகளையெல்லாம் தூசு தட்டுகிறது,,

உண்மையில்,இந்த பாராளுமன்ற தேர்தலில்  ஆளும் மற்றும் முன்னாள் திராவிட கட்சிகளுக்கு எதிராக மக்கள் திரள்வதை தடுக்கவுமே இந்த அரசியல் பழிவாங்கும் நிலைப்பாடு.




அதாவது இப்படி பல வழக்குகளையும்,பல குழப்பங்களையும் வன்னியர் சார்பு சங்கங்கள் மீதும், பிற பெரும்பான்மை சமூகசார்பு சங்கங்கள் மீதும் மற்றும் அவர்களை ஆதரிக்கும் கட்சிகள் மீதும் ஏற்படுத்தினால், அவர்களுக்கென்று இருந்த அரசியல் செல்வாக்கை உடைத்துவிடலாம்,, அதன் மூலம் வன்னிய மக்களிடையே குழப்பத்தை விளைவித்து சுலபமாக வன்னிய மற்றும் பெரும்பான்மை சமூக மக்களின் ஒருங்கிணைப்பை தகர்த்துவிடலாம் , அதன்மூலம் ஓட்டுக்களையும் பிரித்து விடலாம் என்பதெல்லாம் அவர்களின் பகல்கனவு,,

ஆனால் மக்கள் தொலைக்காட்சியிலும்,மற்றும் பிற பொதுவான தொலைக்காட்சிகளிலும், இணையதளங்களிலும் கருத்து தெரிவிக்கும் பெற்றோர்களும், இருபக்கமும் பேசும் பெரியவர்களின் கருத்துக்களில் உள்ள ஆதரவான பேச்சுக்களை பார்க்கும் போது, பா.ம.க மற்றும் பெரும்பான்மை சமூக மக்களின் இயக்களின் எழுச்சி எந்த அளவு உள்ளது என்பதை உணரமுடிகிறது,,


//மெல்ல மெல்ல வீழ்ந்து கொண்டிருக்கும் பெரும்பான்மை தமிழர்களுக்கு
விரோதமான  திராவிட மற்றும் பாரபட்ச அரசியல்...இனி முற்றிலும் வீழும்//


என்றும் உண்மையுடன்
அரசகுலன் வன்னித்தமிழன்

Friday, 3 May 2013

வன்னியர் புராணம்



வன்னிய புராணம்

வன்னிய புராணம் என்பது ஸ்ரீ வீர உருத்ர வன்னிய மகாராசாவின் தோற்றத்தைப் பற்றி கூறும் நூல். இந்நூல் சுந்தர பாண்டிய மன்னரின் முன்னிலையில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1216-1238 இது எழுதப்பட்டது வடமொழியில் எழுதப்பட்ட நூலான “அக்னி” அல்லது “அக்னேய புராணத்தில்“ இருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. அக்னி புராணம் இந்து மதத்தின் 18 புராணங்களில் ஒன்றாகும். இந்த புராணத்தில் வரும் செய்திகள் சீர்காழியின் அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவிலின் கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ளன. வீர உருத்ர வன்னிய மகாராஜா, சம்பு முனிவர் நடத்திய வேள்வியில் பிறந்ததைப் பற்றி கூறுவதால் இந்நூல் சம்பு மைந்தர் காப்பியம் என்றும் வன்னியர் புராணம் என்றும் அழைக்க பெற்றது. வன்னி என்றால் அக்னி எனப் பொருள்படும். இந்த உருத்ர வன்னியரின் வழி வந்தவர்கள் வன்னியர் என்றழைக்கப்படுகின்றனர்.


தூர்வாச முனிவருக்கும் கஜமுகிக்கும் இரண்டு அசுர குழந்தைகள் பிறந்தனர். அவர்களின் பெயர் "வில்வலன்" மற்றும் "வாதாபி". இவர்களின் தாயாரான கஜமுகி என்பவள் முருகப்பெருமானால் வதம் செய்யப்பட்ட சூரபத்மனின் இளைய தங்கை ஆவாள்.
வில்வலனும் வாதாபியும் அகத்திய முனிவரை துன்புறுத்த ஆரம்பித்தனர். இதனால் கோபம் அடைந்த அகத்தியர் வில்வலனை விழுங்கி விட்டார். உடனே வாதாபி சிவனை நோக்கி தவம் இருந்து பல சக்திகளையும் பெற்றான். அந்த வலிமையின் மூலம், தெற்கு கடற்கரையின் மையப் பகுதியில் அமைந்திருந்த ரத்னபுரியை அரசாள ஆரம்பித்தான். பின்னர் மாயனின் மகளான சொக்க கன்னியை மனந்தான். வாதபி செய்யும் அனைத்து காரியங்களுக்கும் அசுர குருவான சுக்ராசாரியர் துணை இருந்தார். பின்னர் வாதாபி தேவர்களை மிகவும் துன்புறுத்தத் தொடங்கினார். இதை கண்ட நாரதர், சிவபெருமானிடம் தேவர்களின் இன்னல்களைக் கூறினார். அதே சமயம் தேவர்களை காக்க சம்பு முனிவர், சிவபெருமானை நோக்கி வேள்வி ஒன்றை நடத்தினார். அப்பொழுது சம்பு முனிக்கு சிவபெருமான் அருள் பாவித்து, தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஒரு நெருப்புத்(வன்னி) துளியை அந்த வேள்வியில் விழச் செய்தார். விழுந்த அந்த நெருப்பிலிருந்து வெள்ளைக் குதிரையில் கையில் வாளுடனும், தலையில் கிரீடத்துடனும் ஒரு வீரன் வந்தான். அவன் “ஸ்ரீ வீர உருத்ர வன்னிய மஹாராஜா” என்றழைக்கப்பட்டான்.
சிவபெருமானும், தாய் பார்வதியும் தேவேந்திரனின் இரண்டாம் மகளான மந்திர மாலையை திருமணம் செய்து வைத்தார்கள். மந்திர மாலை என்பவள் முருகப்பெருமானின் மனைவியான தெய்வயானியின் தங்கையாவாள். இவர்களுக்கு நான்கு வீர ஆண் மகன்கள் பிறந்தார்கள். அவர்களின் பெயர் “கிருஷ்ண வன்னியர், பிரம்ம வன்னியர், அக்னி வன்னியர், சம்பு வன்னியர்“ என்பனவாகும். இவர்களுக்கு காந்தா(சுஷீலா) என்னும் துறவியின் நான்கு மகள்களையும் திருமணம் செய்தார்கள். அவர்களின் பெயர் “இந்திராணி , நாரணி ,சுந்தரி ,சுமங்கலி ” என்பனவாகும்.

அசுரனுடன் போர்

சிவபெருமானின் அறிவுரைப்படி அசுரன் வாதாபியை வதம் செய்ய உருத்ர வன்னியர், சிவபெருமான் அளித்த தம் படையுடன் தெற்கு நோக்கி சென்றார். அங்கே உள்ள துர்க்கையின் கோவிலுக்கு சென்று, போரில் தமக்கு துணையாக இருக்குமாறு வணங்கினார். அதற்கு ஆசி தரும் விதமாக, துர்க்கையின் பூதப் படையும் வன்னியருடன் வந்தது. அந்தப் படையையும் அழைத்துகொண்டு ருத்ர வன்னியர் கடற்கரையை நெருங்கும் போது, கடல் தானாக வழி விட்டது. அப்பொழுது அவர்களுடன் சென்ற ஒரு நாயால், அந்த கடற்கரையை தாண்ட இயலவில்லை. அதனால் அந்த நாய் மீண்டும் வன்னியரின் அரண்மனைக்கே திரும்பியது .
உருத்ர வன்னியரும் அவரது படையும் ரத்னா புரியை அடைந்த உடன், அசுரன் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு தர எண்ணினார் வன்னியர். நாரதரை அசுரன் வாதாபியுடன் சமாதானம் பேச அனுப்பினார். ஆனால் அது தோல்வியிலே முடிந்தது. அதன் விளைவு, வன்னியர் படைக்கும் அசர படைக்கும் மிகப்பெரிய போர் உருவாயிற்று. அசுரர்களின் குலதெய்வமான காளி அம்மன், அசுரர்களுக்கு துணையாக இருந்ததால் மிக உக்கிரமாக நடந்த அந்தப் போரின் முடிவில், ருத்ர வன்னியரின் கையால் அசுரன் வாதாபி கொல்லப்பட்டான். பெண்கள் உட்பட அனைத்து அசுரர்களும், வன்னியர் படையால் வதம் செய்யப்பட்டனர் . இருப்பினும் சுக்ராசாரியாரின் யோசனைப்படி, நான்கு அசுரப் பெண்கள் மட்டும் மனித வடிவில் இருந்தனர். இவர்களை கண்ட வன்னியர்கள், இந்த பெண்கள் மனித குலத்தவர்கள் என்று நினைத்து வன்னியர்கள், அவர்களை வதம் செய்யாமல் தங்களோடு தம் அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர்.
போர் முழுமையாக முடிந்தவுடன், துர்க்கையை தரிசித்து விட்டு ருத்ர வன்னியரும் அவரது படையும் தமது இருப்பிடத்திற்கு வந்தனர். தம் இருப்பிடத்திற்கு வந்த உருத்ர வன்னியர் அதிர்ச்சிக்கு உள்ளானார். கடலைத் தாண்ட முடியாமல் வீட்டிற்கு வந்த நாயைக் கண்ட உருத்ர வன்னியரின் மருமகள்கள், போரில் வன்னியர் படை வீழ்ந்தது என நினைத்து தங்கள் கணவர்மார்களும் மடிந்திருப்பர் என்று நினைத்தும் தீயை மூட்டி அதில் உடன்கட்டை ஏறித் தங்கள் உயிரை மாய்த்து கொண்டனர். பிறகு உருத்ர வன்னியரின் நான்கு மகன்களும், தாங்கள் அழைத்து வந்த மனித உருவில் இருந்த அந்த நான்கு அசுர பெண்களையும் காந்தர்வ திருமணம் செய்து கொண்டு, அவர்களோடு வாழ ஆரம்பித்தனர்.

வன்னியர்கள் ஆளும் நிலப்பகுதி

சிவபெருமானும், நாராயணனும் உருத்ர வன்னியரிடம் “சம்பு பகுதியை” ஆட்சி செய்யுமாறு கூறினர். அதுபோல வடக்கே “பாலாறு” வரை பிரம்ம வன்னியரிடமும், ”பெண்ணையாறு” வரை கிருஷ்ண வன்னியரிடமும், அங்கிருந்து வடக்கே “காவேரி” வரை சம்பு வன்னியரிடமும், தென்மேற்கு பகுதியை அக்னி வன்னியரிடமும் ஆட்சி செய்யுமாறு கூறினர். அதன் பிறகு, உருத்ர வன்னியர் மற்றொரு மகனை பெற்றார். அவர் பெயர் “சந்திர சேகர மகாராஜன்”. உருத்ர வன்னியர் தம் ஆட்சி பொறுப்பைத் தமது மகன் சந்திர சேகர மகாராஜனிடம் கொடுத்து விட்டு, தேவேந்திரனின் அழைப்பை ஏற்று இந்திரலோகத்திற்குச் சென்றார்.

மக்கள் பண்பாட்டில் வன்னிய புராணம்

வாதாபி சூரனை அழிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்ட வன்னிய புராணம் மறுபுறம் வன்னியர்களிடையே கதையாக பரவியிருந்தது. வன்னியர்களின் தலைவன் வீர வன்னிய ராசன் வாதாபியை அழிப்பதற்காக சிவனால் தோற்றுவிக்கப்பட்டவர். வாதாபி அரக்கனை அழிக்கப் புறப்படும்போது அவருடைய மனைவி மந்திரமாலா போரின் விளைவு என்னவாகுமோ என கவலைப்படுகிறாள். அதற்கு வன்னியராசன் "என்னுடன் நாய் வருகிறது. நான் போரில் இறந்தால் நாய் திரும்பிவரும், வீட்டில் ஏற்றப்பட்ட காமாட்சி விளக்கு அணையும், மல்லிகைப் பூ வாடும்" என்று சொல்லிவிட்டு செல்கிறார். வன்னியராசன் செல்லும் வழியில் ஆறு குறுக்கிடுகிறது. அவர் ஆற்றைக் கடந்து சென்றுவிடுகிறார். ஆனால் நாய் கடக்க முடியாமல் திரும்பி விடுகிறது. நாயைப் பார்த்த மந்திரமாலா கணவர் இறந்துவிட்டதாகக் கருதி தாலியை அறுத்துவிடுகிறாள். வீட்டில் விளக்கு அணையாததையும், மலர் வாடாததையும் அவள் கவனிக்கவில்லை.
போரில் வெற்றிபெற்று திரும்பும் வீரவன்னிய ராசன் தன் மனைவி விதவைக் கோலத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான். நடந்ததை அறிந்து மீண்டும் தாலி கட்டுகிறான். இப்படி தாலியை அறுத்துக்கட்டக்கூடிய பழக்கம் வன்னியர்களிடையே இருக்கிறது. இன்றைக்கும் ஆடிப்பெருக்கு அன்று தாலியை அறுத்துக்கட்டும் சடங்கை பல வன்னியர்கள் செய்கின்றனர். இக்கதை ஒரு சில மாற்றங்களுடன் வன்னியக் கூத்து என்ற பெயரில் கிராமப்புறப்பகுதிகளில் நடைபெற்று வருகிறது.



பல்லவரும் வன்னியரும்

தமிழ்நாட்டின் மக்கள் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடிக்கும் ஒரு நிகழ்வு சாளுக்கிய மன்னன் புலிகேசிக்கும் பல்லவர்களுக்கும் நடந்த போராகும். பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் புலிகேசியால் தோற்கடிக்கப்பட்டு காஞ்சியிலிருந்து துரத்தப்பட்டான். இதற்குப் பழிவாங்க சபதமேற்ற அவனது மகன் நரசிம்மவர்மன், மக்களுக்கு போர்க்குணம் ஏற்படச் செய்யவேண்டும் என்பதற்காக பாரதம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினான் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். இதன் பலனாக கி.பி.642 ஆம் ஆண்டில் புலிகேசியின் பாதாமி நகர் தாக்கப்பட்டு அவன் தோற்கடிக்கப்பட்டான் (கருநாடக மாநிலத்தில் உள்ள நகரம் - தமிழில் வாதாபி). நரசிம்மவர்மனது படைவீரர்களாக இருந்தவர்கள் வன்னியர்கள். பாதாமியை வென்ற படைக்கு தலைமையேற்ற பரஞ்சோதி என்கிற சிறுதொண்டர் வன்னியர் குலத்தைச் சேர்ந்தவர். இவரைப்பற்றி பெரிய புராணம் குறிப்பிடுகிறது. இக்கதையே வாய்மொழியாக வழங்கப்பட்டு பின்பு வன்னிய புராணம் என்ற பெயரில் வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.

Thursday, 2 May 2013

விடுதலைச் சிறுத்தைகள்: பிழைப்புவாத-பொறுக்கி அரசியலில் புதிய வரவு !!

விடுதலைச் சிறுத்தைகள்: பிழைப்புவாத-பொறுக்கி அரசியலில் புதிய வரவு !![நான்கு வருடங்களுக்கு முன்பே வெளியான  கட்டுரை]




 கருணாநிதியெல்லாம் ஒரு தேர்ந்த பிழைப்புவாதியாக மாறுவதற்கு ஒரு ஐம்பதாண்டுகள் ஆனதென்றால், திருமாவளவனுக்கோ இந்தப் “பரிணாமம்” எல்லாம் ஒரு ஐந்தாறு ஆண்டுகளுக்குள் முடிந்துவிட்டது.

திருமாவின் பிறந்தநாளான ஆகஸ்டு 17, சமீபகாலமாக பாசிச ஜெயாவின் கட்-அவுட் களேபரங்களுக்குப் போட்டியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சொன்னை முழுவதும் பிளெக்ஸ் பேனர்கள் மயம்.  1990-களில் பிளக்ஸ் தொழில்நுட்பம் வளராததால் ஜெயாவின் கட்-அவுட்டுகள் இருந்தன. திருமாவின் காலத்தில் புற்றீசல் போல பிளெக்ஸ் அச்சகங்கள் தோன்றிவிட்ட நிலையில், சிறுத்தைகள் திருமாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்காக எல்லா அச்சகங்களையும் குத்தகைக்கு எடுத்து விட்டார்களா என எண்ணுமளவுக்கு, பிளெக்ஸ் போர்டுகளின் எண்ணிக்கை சென்னைவாசிகளை மலைக்க வைத்தது.

சொன்னையில் திரும்பிய பக்கமெல்லாம், திருமாவை ‘மாசறு பொன்னே போற்றி, கடாரம் வென்ற மன்னா’ என்றபடி எல்லா உயர் தமிழ் சொற்களாலும் போற்றும் துதிபாடும் பிளெக்ஸ் போர்டுகள் மொய்த்தன. சேகுவேரா, பிரபாகரன் உள்ளிட்டு இன்னும் பல வரலாற்று மாந்தர்களின் கெட்டப்பில் தோன்றும் திருமாவின் அவதாரங்களோடு, அண்ணனின் அல்லக்கைகளின் படங்களும் எல்லா பேணர்களிலும் தவறாமல் இடம் பெற்றிருந்தன. முக்கியமாக அல்லக்கைகள் எல்லோரும் தங்கள் பெயருக்கு கீழே ஏதோ ஒரு பதவியையும் குறிப்பிட்டிருந்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இப்போது எல்லோருக்கும் உறுப்பினர் தகுதி மட்டும் கிடையாது; ஏதாவது ஒரு பதவியும் போனசாக உண்டு.

அண்ணனின் ஒவ்வொரு பிறந்தநாளையும் ஏதாவது ஒரு கொள்கை முழக்கத்தை வைத்து நடத்துவதை சிறுத்தைகள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இம்முறை ஈழம் சீசனாக இருப்பதால், “எழும் தமிழ் ஈழம்” என பேனர்களின் ஓரத்தில் குறிப்பிட்டிருந்தார்கள். ஈழம் எரிந்து கொண்டிருந்தபோது, அதை அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்திய கருணாநிதி அரசு, இப்போது ஈழப் போராட்டம் புதையுண்ட நேரத்தில், தனது தேர்தல் வெற்றியை அது பாதிக்கவில்லை என்பதைப் பார்த்துவிட்டவருக்கு, சிறுத்தைகளின் பேனரில் தடை செய்யப்பட்ட இயக்கங்கள், பிரபாகரன் படம் இடம் பெற்றிருப்பதாக தினமலர் நாளேடு போட்டுக் கொடுத்தது.

உடனே முத்தமிழ் முதல்வரின் காவலரணி சிறுத்தைகளின் பேனர்களை நோக்கிப் பாந்தது. போலீசுக்கு தொல்லை கொடுக்க விரும்பாத சிறுத்தைகளும் எல்லா பேனர்களிலும் ‘எழும் ஈழத்தை’ அழித்து உதவி செய்தனர். கடைசில் ‘எழும் ஈழத்’திற்கு இடையில் இருந்த ‘தமிழ்’ மட்டும் பரிதாபமாக காட்சியளித்தது. கடந்த ஆறு மாதங்களாக ஈழத்திற்காக அமர்க்களப்படுத்திய சிறுத்தைகளின் ‘வீரம்’ இறுதியில் தாரை வைத்து, ஈழம் என்ற பெயரையே அழிக்கும் வண்ணம் அஞ்சி நடுங்கிப் போனது.

ஆனாலும் பிறந்த நாள் கூட்டத்தில் முழங்கிய திருமா, இனி புலிகளின் கோரிக்கைக்காக ஆயுதம் தாங்காத வழியில் சிறுத்தைகள் போராடுவார்கள் என வாக்குறுதி அளித்தார். அதே சமயம், தி.மு.க அரசுக்கு எவ்வித நெருக்கடியும் கொடுக்க மாட்டோம் எனவும் முன்னெச்சரிக்கையாக, “கண்டிஷன்ஸ் அப்ளை”யும் போட்டார். ஒரு எம்.பி. சீட்டு நன்றிக்காக தமிழ்நாட்டு மேடையில் இப்படி பேசியவர், சமீபத்தில் ஜெர்மனியில் புலி ஆதரவாளர்கள் நடத்திய மாநாட்டில் பிரபாகரன் தலைமையில் விரைவில் ஐந்தாவது ஈழப்போர் துவங்கும் என அறிவித்தார். புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையே திருமாவளவனுக்கு ஒரு இமேஜ் இருப்பதால், அதைத் தக்கவைப்பதற்கு அங்கே அப்படி; பிழைப்பை ஓட்ட இங்கே இப்படி…

திருமாவின் ஓட்டுக்கட்சி பிழைப்புவாதம் இப்போது தமிழக மக்களுக்கு புதிரான ஒன்றல்ல. எனினும், அயல்வாழ் தமிழ் மக்கள், அதுவும் ஈழம் தொடர்பாக மட்டும் அவரைத் தெரிந்து வைத்திருக்கும் மக்களுக்கு, அவரது சரணாகதிப் படலம் தெரியாது.

‘90-கள் முழுவதும் “அடங்க மறு, அத்துமீறு, திருப்பி அடி” என்று ஆதிக்க சாதிவெறிக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் இயங்கிய போது தேர்தலைப் புறக்கணித்தார்கள். ஆனால், இந்த முழக்கங்கள், அதாவது அவர்கள் விரும்பிய தீண்டாமை ஒழிப்பு ஆகியவை – சாதி ஒழிப்பிற்கான திட்டமோ, நடைமுறையோ, அதற்கேற்ற அமைப்பு – அணிகள் பலமோ இல்லாததால் வெற்றுச் சவடாலாகிப் போயின. திருமாவளவன் ஒரு பிரிவு தலித் மக்களிடம் பிரபலமான தலைவரானார். அவர் பேசிய கூட்டங்களுக்கு கணிசமாக மக்கள் வந்தார்கள்.

இப்படி திசைவழியறியாத கூட்டத்தை வைத்துப் பல பிரச்சினைகளை சந்தித்து, கருணாநிதி அரசால் ஏவிவிடப்பட்ட அடக்குமுறைகளை எதிர்கொள்ள அமைப்பின் – அணிகளின் பலமுமின்றி, இறுதியில் இதையே காரணமாகக் கூறி தேர்தல் அரசியலில் நுழைந்தார். அத்துடன் அவரது தலித் அரசியல் முடிவுக்கு வந்து, பிழைப்புவாத அரசியல் அத்தியாயம் ஆரம்பித்தது.

’98 தேர்தலில் அயா மூப்பனாரோடு கூட்டணிக் கட்டிக் கொண்டு சிதம்பரம் தொகுதியில் நின்றார். இதற்கு நன்றிக் கடன் செலுத்தும் விதத்தில் தஞ்சை மாவட்டத்தில் கூலி விவசாயிகளையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் ஒடுக்கி வரும் குடும்பத்தைச் சேர்ந்த மூப்பனாரை புரட்சித் தலைவர் என்றார். அதன்பின் போயஸ் தோட்டம், கோபாலபுரம் என மாறி மாறி தாழ்த்தப்பட்ட மக்களின் சுயமரியாதையை அடகு வைத்து, ஓரிரண்டு தொகுதிகளை வென்றார். இக்காலத்திற்குச் சற்று முன்னர்தான் கொடியங்குளம் ஆதிக்கசாதி கலவரம், மாஞ்சோலைப் படுகொலை எல்லாம் இரு கழக அரசுகளால் நடத்தப்பட்டிருந்தன.

 














 

அப்புறம் பாப்பாப்பட்டி, மேலவளவு, திண்ணியம் முதலான வன்கொடுமைகள் நடந்த போது, சிறுத்தைகள் அதை வைத்துத் தமது சொல்வாக்கை வளர்த்துக் கொள்ளத்தான் முனைந்தனர். மேலவளவு முருகேசன் கொலை வழக்குகூடத் தன்னார்வ வழக்கறிஞர்களால் நடத்தப்பட்டு, தண்டனை வாங்கித் தரப்பட்டது. இதற்குள் அண்ணன் எல்லா ஆதிக்க சாதி பிரமுகர்களுடனும் ஐக்கியமாகிவிட்டார். சேதுராமனுடன் கை தூக்கி போஸ் கொடுத்ததென்ன, ராமதாசுடன் சேர்ந்து தமிழ் இயக்கம் கண்டதென்ன, பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு விடுமுறை கோரியதென்ன என்று பலவற்றைப் பட்டியிடலாம்.

முத்தாப்பாக, விருத்தாசலம் பகுதியில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த முருகேசனும், வன்னியர் சாதியைச் சேர்ந்த கண்ணகியும் காதல் திருமணம் செய்ததற்காக கட்டி வைத்து நஞ்சூற்றிக் கொல்லப்பட்ட வழக்கில் கூட,  வன்னிய சாதி வெறியர்களைத் தண்டிக்கக்கோரிப் போராடுவதற்குப் பதிலாக, அவர்களுடன் பஞ்சாயத்து செய்து சுமூகமாகப் போகுமாறு முருகேசனின் சொந்தங்களுக்கு சிறுத்தைகள் நெருக்குதல் கொடுத்தனர். இந்த விவரங்களெல்லாம்  புதிய ஜனநாயகம் இதழில் விரிவாகவே பதிவாகியிருக்கின்றன. இப்போது அடுத்த கட்டமாக, சிறுத்தைகள் எந்தப் பாதையில் சொல்கின்றனர் என்பதற்காகவே இந்தக் கட்டுரை.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட விழுப்புரம் தொகுதியில் முதலில் அறிவிக்கப்பட்ட மடிப்பாக்கம் வேலாயுதம் என்ற வேட்பாளரைக் கண்டு பலரும் அதிர்ந்து போனார்கள். காரணம், அந்தப் பிரமுகர் ஒரு ரியல் எஸ்டேட் மாஃபியா;  சி.பி.ஐ வழக்குகளைச் சந்தித்து வருபவர். அவ்விவகாரம் சந்தி சிரித்ததும், ஏதோ ஒரு முன்னாள் நீதிபதியை கொண்டுவந்து நிறுத்தினர். அவருக்கும் கட்சிக்கும் அதற்கு முன்னர் கொள்வினையோ, கொடுப்பினையோ கிடையாது.

இதற்குமுன் சிறுத்தைகள் கட்சியிலிருந்து வெளியேறிய சொல்வப்பெருந்தகை உலகறிந்த கட்டப் பஞ்சாயத்து ரவுடி. அதிலேயே பல கோடிகளைச் சேர்த்தவர். கூடுதலாக, ஜெயாவின் வளர்ப்பு மகனது கருப்புப் பணத்தையும் சில பெண் தொடர்புகள் மூலமாக இவர் லவட்டிக் கொண்டார் என்றும் கூறப்படுவதுண்டு. சொல்வப்பெருந்தகை இப்போது பகுஜன் சமாஜ் கட்சிக்குப் போனாலும் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யவில்லை. சிறுத்தைகளும் இதை பெரியபிரச்சினையாக்கவில்லை. ஆக்கினால், சேர்ந்த வண்டவாளங்கள் அம்பலாமாகும் என்ற பயம்தான் போலும்.

சொல்வப்பெருந்தகை காலத்தில்தான், சிறுத்தைகளின் கட்சி தற்போதைய திருத்தமான வடிவைப் பெற்றது. இதன்படி, உள்ளூர் அளவில் உள்ள பிழைப்புவாத தலித் பிரமுகர்கள், கட்டப் பஞ்சாயத்து சேபவர்கள், ரியல் எஸ்டேட் வியாபாரம் சேயும் மாஃபியாக்கள், ஒரு கூட்டத்தை வைத்துக் கொண்டு அந்தந்தப் பகுதி வர்த்தகர்களிடம் மாமூல் வசூலிப்பவர்கள், கட்சியின் பொதுக்கூட்டச் சொலவுகளுக்கு அப்பகுதியிலிருக்கும் பெரும் முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடம் வசூலித்தல், சுயநிதிக் கல்லூரிகளின் முதலாளிகள் சிறுத்தைகளுக்கென்று ஒதுக்கும் சீட்டுகளை பல இலட்சங்களில் விற்பனை செய்தல், சினிமா கட்டப் பஞ்சாயத்து செய்தல் – இப்படி பல்தொழில் வல்லுநர்கள்தான் இப்போது சிறுத்தைகளின் வெளிமுகங்கள்.

இந்த ரவுடிகளை வைத்துப் பிழைக்கும் பிரமுகர்களைச் சுற்றி பெருங்கூட்டமா இருக்கும் தொண்டர்கள் எலும்புகளைக் கவ்வியவாறு சுற்றி வருகின்றனர். இப்படி வசூலிப்பதற்கென்றே ஒரு கட்சியும், கூட்டமும் உருவாகிவிட்டது. பல இடங்களில் வர்த்தகர்களும், முதலாளிகளும் எதற்கு வம்பு என்று பணம் தருவதோடு, சிலர் கட்சியிலும் சேர்ந்து வருகின்றனர். தற்போது திருச்சொந்தூரில் உள்ள சொந்திலாண்டவன் கோவிலில் பூசை சேயும் பார்ப்பனர்களும் சேர்ந்திருக்கிறார்கள். பலருக்கு இது அதியமாகப்படலாம். உண்மை என்னவென்றால், எல்லா பிரபலமான கோவில்களிலும் உள்ள பூசாரிகள் பக்காவான லும்பன்களாக இருப்பார்கள். கை நிறைய காசு, அதை அனுபவிப்பதற்கு வசதிகள் – இப்படி உழைக்காமலேயே தொந்தி வளர்க்கும் கூட்டம், தனது பாதுகாப்பிற்காக சிறுத்தைகளிடம் சேர்ந்ததில் வியப்பில்லை. மேலும், பார்ப்பனர்கள் – தலித் கூட்டணி என்ற மாயாவதிக் கட்சியின் தமிழக கிளைக்கு போட்டியாகக்கூட இதைக் கருதலாம்.

ஆக, வசூலிப்பதற்கு இவ்வளவு பெரிய இயந்திரத்தை உருவாக்கிவிட்டபடியால், இந்தக் கட்டமைப்பைத் தக்க வைப்பது எப்படி? அதற்குத்தான் மூன்று மாதங்களுக்கொரு முறை ஏதாவது ஒரு பிரச்சினையைச் சாக்காக வைத்து மாநாடு என்று பிளெக்ஸ் பேனர்களில் அமர்க்களம் சேகிறார்கள். இதைப் பார்க்கும் மக்களெல்லாம் சிறுத்தைகள் பெரும் வளர்ச்சி பெற்றதாக நம்ப, முதலாளிகள் இனிமேல் அரசியல் கட்சிகளுக்குக் காசு கொடுக்கும் பட்டியலில் சிறுத்தைகளையும் சேர்க்க, மாற்றுக் கட்சிகளுக்கோ சிறுத்தைகளின் ‘பலத்தை’ அறிந்து அவர்களுக்கு சீட்டுக்கள் அதிகம் கொடுக்க வேண்டுமோ என யோசிக்க – இப்படி பல விதங்களில் திருமாவின் ‘கொள்கை’ மாநாடுகள் பயன்படுகின்றன.

இப்படிப்பட்ட கூட்டத்தை வைத்துத்தான் திருமாவளவன் கட்சி நடத்துகிறார். அவரது கட்சித் தலைமையகம் கூட அவரது தாயாரின் பெயரில் பதிவாகி, தற்போது அது ஒரு ஆக்கிரமிப்பு என வழக்கே நடந்து வருகிறது. வழக்கிற்கு வராத சுருட்டல்கள் எவ்வளவென்று தெரியவில்லை. ஏற்கெனவே உலகமயத்தால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக வேலைகள் குறைந்துவரும் நேரத்தில், சேரியில் இருக்கும் உதிரியான இளைஞர்களுக்கு இப்படி ஒரு வாழ்வு சிறுத்தைக் கட்சியில் சேர்ந்தால் கிடைக்கிறது. ஓரிரு ஆண்டுகளிலேயே அடுக்குமாடி, ஸ்கார்பியோ கார், பரிவாரங்கள் என இதில் பலர் முன்னுதாரணங்களாக இருக்கிறார்கள்.

விடுதலைச் சிறுத்தைகளின் எம்.எல்.ஏ. ரவிக்குமார் நடுத்தர வர்க்க தலித் மக்களின் கோரிக்கைகளைச் சட்டசபையில் பேசுவார். வெள்ளை அறிக்கை, பணியிடங்களைப் பூர்த்தி செய்தல், ஆதி திராவிடருக்குக் கூடுதல் நிதி ஒதுக்குதல், அரசுப்பணி மாற்றம் – இப்படியான அரசு கட்டப் பஞ்சாயத்துகளை அவர் சேகிறார். இதனால் கணிசமான அரசு, நடுத்தர வர்க்க தலித் மக்கள் தமது சுயநலத்திற்காகச் சிறுத்தைகளை ஆதரிக்கின்றனர்.

இப்படி லும்பன்களும், நடுத்தர வர்க்கமும் இணைந்த கலவையாக காட்சியளிக்கும் சிறுத்தைகளின் அரசியல் முகத்தை அடிக்கடி புதுப்பிப்பதற்குத்தான் ஈழம் பயன்பட்டிருக்கிறது. இந்த அரசியல் பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு திருமாவளவன் தலைமை தாங்குகிறார். அடிக்கடி அறிக்கை விடுவார். மாநாடு நடத்துவார். பேட்டிகள் கொடுப்பார். மற்றபடி, முன்பெல்லாம் சிறுத்தை அணிகள் தலித் அரசியல், தலித் தலைமை, தலித் புரட்சி என்றெல்லாம் ஆவேசமாக பேசுவார்கள். இப்போது எவ்வளவு திட்டினாலும் அவர்கள் அசைந்து கொடுப்பதில்லை என அக்கட்சித் தோழர்களே வருத்தப்படுகின்றனர்.

இருப்பினும், விடுதலைச் சிறுத்தைகள் இந்தத் தொழிலை ஒரு அளவுக்குதான் செய்ய முடியும். அ.தி.மு.க; தி.மு.க. அளவுக்கெல்லாம் பிரம்மாண்டமாகச் செய்ய முடியாது. கருணாநிதி கூட சிறுத்தைகளை ஓரளவுக்கு அனுமதித்து விட்டு, தேவையான நேரத்தில் ஆப்படிப்பார். இதை திருமாவும் உணர்ந்துள்ளதால், இப்போதைக்கு இந்த விளையாட்டு விதிமுறைக்குட்பட்டு  ஆடப்பட்டு வருகிறது. பிளெக்ஸ் பேனரில் எவ்வளவு ஆவேசமாக மீசையை திருமா முறுக்குகிறாரோ, அந்த அளவுக்கு அரசியல் பிழைப்புவாதம் மறைந்திருக்கிறது என்று பொருள்.

ஐரோப்பாவிலும், கனடாவிலும் இருக்கும் அப்பாவி ஈழத்தமிழன் மட்டும் திருமாவை ஈழத்திற்கான ஒரு நம்பிக்கை நட்சத்திரம் என்று நம்பிக்கொண்டிருப்பார். என்ன இருந்தாலும் தமிழகத்திற்கும் அமெரிக்காவிற்கும் தூரம் அதிகம்தானே?


நன்றி -புதிய ஜனநாயகம், செப்டம்பர்’2009


Wednesday, 1 May 2013

போலி முக திராவிடர்கள்




சூடு சுரனையற்றவர்கள், சில போலி முகவான்கள்;
திராவிடர்/விடுதலை என்று போலி பெயர்களுடன்
உலாவரும் இவர்கள் தாங்கள் சார்ந்த சாதி கட்சிகளின்,
சாதி மக்களின் தவறுகளை என்றுமே விமர்சிக்காமல்,

எதிர்தரப்பென்று திராவிட கட்சிகளால் விமர்சிக்கப்பட்ட பெரும்பான்மை சமூக மக்களையும், அவர்களின் ஒருங்கினைப்புகளையும்,அவர்களுக்கு ஆதரவாக நிற்கும் கட்சிகளையும், மட்டும் விமர்சிக்கும் புரட்சி பூச்சாண்டிகளே

வன்னியர்கள்&பறையர் ஓட்டுகளை பிரிக்க உங்களை
பயன்படுத்தும் திராவிட கட்சிகளின், முழு உருவமும்
உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்,,,

ஆனால் பாமர மற்றும் பாட்டாளி மக்களுக்கு தெள்ளத் தெளிவாக தெரியத் துவங்கிவிட்டது,, எப்போதும் வருவதை பல லட்ச மக்கள் ஒன்று கூடியதே,,அதற்கான ஆதாரம்.,

வீழ்ந்துவிட்டது திராவிட கட்சிகளின் ஆளுமை,,அனைத்து மக்களின் எழுச்சிகளை அனைவரும் புரிந்து கொள்ளுங்கள்,, (Y)

என்றும் உண்மையுடன்
அரசகுலன் வன்னித்தமிழன்