Saturday 11 May 2013

திராவிட கட்சியில் பொறுப்பில் இருக்கும் ஒரு வன்னியரும் அவருக்கு வன்னித்தமிழன் என்பவரின் பதிலும்


 Selvam Vanniyar:

நீங்கள் சொல்லுவதெல்லாம் சரி. பிரட்சனை என்னன்னா நாங்கள் எல்லாம் திராவிட கட்சிகளை விட்டுவிட்டு வெளியே வந்து உங்களுக்கு வாக்களித்தால் ஐயா குடும்பமும் அவரின் நெருங்கிய வசூல் ஏஜண்டுகளும் கோடிகளை பார்ப்பார்கள். எங்கள் பிழைப்பு என்னாவது? நீங்கள் என்ன இனி பா.ம.க சம்பாரிக்கும் பணம் எல்லாத்தையும் எல்லா வன்னியர்களுக்கும் பிரித்து தருவோம் என்றா சொல்லுகிறீர்கள், இல்லையே? ஒரு குடும்பம் சம்பாரிக்க நாங்கள் ஏன் மாற்று கட்சி பதவியை  துறக்க வேண்டும்?

வன்னித்தமிழன்:

சகோ,,, நான் சொல்லியுள்ளது,, உங்களை பாமக'விற்கு ஓட்டு போடுங்கள் என்றல்ல,, நாம் ஒதுக்க வேண்டியது எந்த கட்சி என்பதே நான் சொல்லியுள்ளேன்,, நாம் கட்டாயம் திராவிட கட்சிகளை ஒதுக்கியே ஆகவேண்டும்,,



அதற்கான முக்கிய காரணம் உங்கள் வழியிலேயே வருகிறேன்,,நீங்கள் கூறியதைப்போல் மருத்துவர் குடும்பம் பணம் சம்பாதிக்கும் என்று கூறியுள்ளீர்கள்,,, நான் உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் திமுக,அதிமுக,காங்கிரஸ் தலைமைகளைவிடவா பாமக கொள்ளையடித்துவிட்டது,,,ஆக தமிழரற்ற திராவிட, காங்கிரஸ் தலைமைகள் கொள்ளையடிக்கும் போது அவர்களை விமர்சிக்கவும் மாட்டோம், ஒதுக்கவும் மாட்டோம், ஆனால் அதே விடயங்களை நமக்கு அருகில் உள்ள ஒரு வன்னிய கட்சியோ, வன்னியரோ செய்தால் அதை ஓதுக்கி முன்னால் நின்று விமர்சனம் செய்வோம் இல்லையா,??

நான் சாதிய ரீதியாக மட்டும் பேசவில்லை,,  திராவிடர்கள் என்று நம்மை கூறியே பிராமண மற்றும் வட இந்தியர்களை நம்மிடம் இருந்து  திராவிட கட்சிகள் ஒதுக்கியது,,

அதேபோல் தமிழர்கள் என்று நாம் ஏன் திராவிடர்களை ஒதுக்க கூடாது,,அது தான் தோழர் சீமான் வாதம்,,, இதில் நாம் உணரவேண்டியது என்னவென்றால், மத்திய இணையமைச்சர் வேலுவின் காலத்தில் லாபத்தில் ஓடிய ரயில்வே துறை,, இன்று நஷ்டத்தில் ஓடுகிறது,, அன்புமணியின் மருத்துவத்துறையின்இன்றைய நிலையென்ன,, ஆக தமிழனிடமும் தரமுள்ளது,,,அதை வெளிப்படுத்தாமல் முடக்கவே கட்சி பொறுப்புகளை மட்டும் கொடுத்து வன்னிய மற்றும் மற்ற பெரும்பான்மை சமூக மக்களை வஞ்சித்து வருகிறது,,



நானே ''நாம் தமிழர்'' கட்சியில் தான் இப்போது உள்ளேன்,, வன்னியர்களுக்கு என்று பாமக மட்டுமல்ல,,இப்போது NR காங்கிரஸ் மற்றும் TVK கட்சியும் வந்துள்ளது,,,திமுகவிலும் சில நல்ல வன்னிய தலைவர்கள் உண்டு,, ஆனால் நமது உரிமையை நாம் மீட்டெடுக்க வேண்டிய கால சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் சந்தர்ப்பம் இது,,

தவறவிட்டால் இன்னும் 50ஆண்டுகளுக்கு ஜெயலலலிதாவின் காலில் தமிழர்கள் விழுந்து விழுந்து வணங்கிக்கொண்டே இருப்பனர்,,

திமுக குடும்பம் செவ்வாய் கிரகத்தில்  உள்ள வங்கியிலும் பலகொடிகளை பதுக்கி வைக்கும்,, சிந்தியுங்கள் சகோ,,

No comments:

Post a Comment